வாசிப்பும், யோசிப்பும் 173 : பால்ய காலத்து நண்பர்களும், முகநூலும்!

ஆர்.விக்கினேஸ்வரன்ஆர்.விக்கினேஸ்வரன்முகநூல் செய்துள்ள பல நன்மைகளிலொன்றாக என் வாழ்வில் சந்திக்கவே சந்தர்ப்பங்கள் அரிதாகவிருந்த என் பால்ய காலத்து நண்பர்கள் சிலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்ததைக் குறிப்பிடுவேன். குறிப்பாக சண்முகராஜா , திருநாவுக்கரசு, சிவகுமார், விக்கினேஸ்வரன் மற்றும் ராஜரட்னம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் மூவரும் ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்கள். மற்றவர் ராஜரட்னம் யாழ் இந்துக்கல்லூரியில் 9, 10ஆம் வகுப்புகளில் படித்தவர்.

விக்கினேஸ்வரன் தற்போது திருநெல்வேலி (தமிழகம்) நகரில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞரான இவர் அங்கு புகைப்பட ஸ்டுடியோ நடாத்தி வருகின்றார். அண்மையில் முகநூல் மூலம் மீண்டும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (முகநூலில் Srirham Vignesh என்னும் பெயரில் அறியப்படுபவர்) தனது முகநூல் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தைபகிர்ந்திருக்கின்றார்.

அந்த அறிமுகத்தின் மூலம் இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மகிழ்ச்சி தருவது. அந்த அறிமுகக்குறிப்பின் இறுதியில் இவர் கூறிய விடயம் என்னை ஆச்சரியபட வைத்ததுடன் மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அறிமுகக் குறிப்பின் இறுதியில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்:

“எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர்  வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 – 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல….கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ”பதிவுகள்” இதழின் ஆசிரியர் ”கிரி” (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது.”

Continue Reading →