கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

கவிதை: முள்ளிவாய்க்கால் நினைவுக்கவிதை - வ.ந.கிரிதரன்

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

Continue Reading →

நிகழ்வுகள்: மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு!

நிகழ்வுகள்: மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு!

இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 புதன்கிழமை அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பில் முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறீலங்கா அரசின் மாபெரும் தமிழினப்படுகொலைக்;கு நேரடியாக இரையாக்கப்பட்ட இவ்விரு மாவட்டங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற உணர்வு ரீதியாகவும்,

வன்முறைகள் – படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எமது தேசியக்கடமையாகக்கொண்டும்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தினர், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஆகியன எம்மிடம் கடிதம் மூலமும் – நேரில் சந்தித்தும் விடுத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு உளத்தூய்மையுடன் ஆதரவு தெரிவித்தும், மே 18 புதன்கிழமை அன்று முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும்.

Continue Reading →