ஆய்வு: அற இலக்கியங்களில் – தாய்மை

ஆய்வு: அற இலக்கியங்களில் - தாய்மை

முன்னுரை
தமிழ்மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும். திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தமிழில் முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாக கொண்டு இயற்றப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட சங்க மருவிய இலக்கியங்கள் அறகருத்துகளை கூறும் நோக்கில் இற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் மனிதனை அறநெறியில் வாழ வலிவகுக்கிறது. இவை பதினெட்டு நூல்களை கொண்டவை. அவற்றுள்  அறநூல்கள் பதினொன்றும் அக நூல்கள் ஆறும் புறநூல் ஒன்றும் அமைந்துள்ளன. அறநூல்களில் காணப்படும் தாய்மை குறித்த செய்திகளை ஆராய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க மருவிய இலக்கியத்தில் அற நூல்கள்
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, சிறுபஞ்சமூலம், நான்மணிக்கடிகை, திரிகடும், ஏலாதி, ஆசாரக்கோவை என்ற பதினொறு நூல்களும் அறநூல்கள் எனப்படுகின்றன.

தாய்மை – விளக்கம்
தாய்மை என்பதற்கு, செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி, ‘அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி, பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள, முதல்நிதி’1 (396) என்று பொருள் தருகிறது. தாய் என்ற சொல்லுக்கு ‘முதன்மை’ என்று பொருள் தருகிறது கௌரா தமிழ் அகராதி’2 (410). தமிழ் அகராதி அண்ணன்றேவி, ‘அரசன்றேவி, ஊட்டுந்தாய், குருவிறேவி, கைத்தாய், செவிலித்தாய், தன்றேவயையின்றாள், நற்றாய், பாராட்டுந்தாய், மாதாவின் சகோதரி, முதல் முதற்றாம் முதன்மை’3 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
மெய்யப்பன் தமிழ் அகராதி ‘குழந்தைபெறும் நிலை, கருப்பம்’4 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.

தாய்மையின் சிறப்பு
மனித வாழ்வு உறவுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. இவற்றில் எல்லா உறவுகளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இருப்பினும் தாயின் உறவு தனிச் சிறப்பு வாய்ந்தவை. அதனை அற இலக்கியம் பதிவுச் செய்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

இலக்கிய பரிணாம வளர்ச்சியின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளிம்புநிலைக் கதையாடல்கள் அமைகின்றன. விளிம்புநிலை குறித்த கருத்தாடல்கள் வரலாறுகளில் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்த சூழலில், அவற்றை தைரியமாக வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய பெருமை புனைவுலகையே சாரும். இருப்பினும் விளிம்புநிலை குறித்த பதிவுகள் ஆரம்பத்தில் போதுமான அளவு இலக்கிய கவனிப்பைப் பெறவில்லை. ஆனால் இந்நூற்றாண்டில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தனிக்கவனம் பெறுவது இலக்கிய பரிணாமத்தில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னும் விளிம்புநிலைக் கதையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றாலும் அதன் பலம் மற்றும் பலவீனத்துடன் நோக்கும் பார்வை புதிய நூற்றாண்டைச் சார்ந்தது. குறிப்பாக விளிம்புநிலை மக்கள் வாழ்வு பின் நவீனத்துவ காலகட்டத்தில்தான் அதற்கே உரிய தன்மையில் யதார்த்தமாக தன்னை இனங்காட்டியுள்ளது.

பின் நவீனத்துவத்தின் கட்டவிழ்ப்பு
பின் நவீனத்துவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிறப்பு என்பது, 1966ல் ழாக் தெரிதா ‘கட்டவிழ்ப்பு’ சிந்தனையை முன்வைத்த போதுதான் தோன்றியது எனலாம். அந்த வகையில் பின் நவீனத்துவம் என்பது இந்த நிமிடம் வரை முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளையும், தத்துவங்களையும், கட்டுப்பாடுகளையும் மறுவிசாரணை செய்ய வந்த கலாச்சார இயக்கமாகக் கொள்ளலாம்.

பின் நவீனத்துவ காலகட்டத்தில் விளிம்புநிலை மக்கள் தனிக்கவனம் பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாட்டைக் குறிப்பிட இயலும். கட்டவிழ்ப்பு என்பது எந்த ஒரு பொருளும் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய கருத்தியல்களில் மாற்றங்களை ஏற்று வாங்குவதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களின் விளைவாக அப்பொருளில் தோன்றும் புதுபுது அர்த்த தளங்களைத் தேடிக் கண்டடைதலே கட்டவிழ்ப்பு எனலாம். இது பற்றிக் கூறும் போது,

”கட்டுமானம் பெற்ற அமைப்பு, கட்டுமான அமைப்புகளிலிருந்து திமிறி – முரண்பட்டு – தனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள முயலுகிறதாகக் கருத்திற் கொண்டு, கட்டுமானத்தை அவிழ்த்து உள்ளும் புறமும் ஒளிதேடுகிற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கட்டவிழ்ப்பு என்பர்”  (திறனாய்வுக்கலை, ப.146)

என்று ஜேக்கு டெர்ரிடா ஒரு கொள்கையாக முன்மொழிகிறார். அதாவது மையத்தில் இருக்க விரும்பும் ஒரு சக்தி இன்னொரு சக்தியை விளிம்பு நிலைக்குத் தள்ளி விடுகிறது. இதனால் இரட்டை எதிர்நிலைகள் உருவாகின்றன. இவ்வுருவாக்கம் இதோடு நின்றுவிடாமல் மீண்டும் நிகழ ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் ஒரு பொருளைப் பற்றிய நமது பார்வை நிச்சயமின்மை கொண்டதாக இருக்கின்றது. இந்த நிச்சயமின்மை கோட்பாட்டைத்தான் தெரிதா, தனதுக் கட்டவிழ்ப்பு செயல்பாட்டின் மூலம் நிறுவுகின்றார்.

Continue Reading →