குடிவரவாளன் நூல் அறிமுக நிகழ்ச்சி

‘உயில் மற்றும் சித்தம் அழகியார்’ ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான்…

Continue Reading →

பத்தி 13 :இணையவெளியில் படித்தவை

சத்யானந்தன்

பதாகை இணைய இதழில் ‘எதற்காக எழுதுகிறேன்?’ தொடர்

‘காசுக்குப் பிரயோஜனமில்லாத காரியம்’ என்று நிச்சயமாக எந்த ஒருவருமே ஒப்புக் கொள்வார்கள் என்றால் அது கட்டாயமாக பேனா பிடித்து எழுதுவது தான். தமிழ்ச் சூழலில் இது மிகவும் கேவலமான போக்கத்த தனமான கிறுக்கு வேலை என்றே கருதப்படுகிறது. குடும்பத்தினரால் காயப்படுத்தப் படாத எழுத்தாளர் ஆணாயிருந்தால் ஆயிரத்தில் ஒருவர். பெண்ணாயிருந்தால் யாருமே இல்லை. பதிப்பாசிரியர்களால் விமர்சகர்களின் புறக்கணிப்பால் மனச்சோர்வடையாத எழுத்தாளரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இத்தனையையும் மீறி சமகாலத்தில் எழுதுபவர்கள் எதற்காக எழுதுகிறார்கள்? அவர்களின் தரப்பை ஒரு தொடராக பதாகை இணைய தளம் வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள். இந்தத் தொடரைத் தொடங்கத் தூண்டுதலாயிருந்த ஒரு சிறு நூலின் பகுதிகளை மேற்கோள் இடுகிறார் நரோபா. அது கீழே:


அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.

“எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..

ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-

Continue Reading →

நனவிடை தோய்தல்: குருமண்காட்டு நினைவுகள் (1)

குருமண்காட்டுப்பாதையும், மன்னார் றோட்டும் சந்திக்கும் இடத்தில் தற்போது காளி கோயிலுள்ளது.அண்மையில் கூகுள் நிலவரைபட வீதித்தோற்றம் மூலம் பார்த்தபொழுதுதான் காலம் எவ்வளவு விரைவாக மாறுதல்களுடன் ஓடி விட்டது என்பது புலப்பட்டது. என் பால்ய காலத்தில் பதிந்து கிடக்கும் குருமண்காட்டுப் பிரதேசத்தின் இன்றைய நிலையைப்பார்த்தபொழுது அடையாளமே காணமுடியாத வகையில் அப்பிரதேசம் மாறிக்கிடப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. அதற்கு முக்கிய காரணங்களிலொன்றாக இலங்கையில் நடைபெற்ற யுத்தமும், அக்காலகட்டத்தில் வவுனியாப்பகுதி அடைந்திருந்த முக்கியத்துவமும்தாம் என்று நினைக்கின்றேன். வடக்குக்கும் தெற்குக்குமிடையில் அனைவரும் வந்து செல்லக்கூடிய முக்கிய நகராக வவுனியா உருமாறியிருந்ததால், யுத்தம் நடைபெற்ற பகுதிகளிலிருந்தெல்லாம குடிபெயர்ந்த மக்களால் நகர் நிறைந்து விட்டதுடன், மாற்றங்கள் பலவற்றையும் அடைந்து விட்டதெனலாம்.


ஆனால் இன்னும் என் நெஞ்சில் படம் விரித்திருப்பது என் பால்ய காலத்த்துக் குருமண்காடுதான். அந்தக் காலத்துக் குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த எங்கள் வாழ்வு பற்றி, அங்கு வாழ்ந்த மனிதர்களைப்பற்றி நினைவில் பதிந்து கிடப்பதையெல்லாம் எழுத்தில் பதிவு செய்தாலென்ன என்றொரு எண்ணம் அண்மைக்காலமாகவே அடிக்கடி தோன்றி மறைகிறது.


என்னைப்பொறுத்தவரையில் குருமண்காடு என்பது என் பால்ய பருவத்தின் சொர்க்க பூமி. ஒரு காலகட்டத்தினை வெளிப்படுத்தும் குறியீடு. மறக்க முடியாத அந்த அனுபவங்களுக்குச் சொந்தமான அந்தப்பிரதேசம் இன்று முற்றாக மாறி விட்டது. நாம் வாழ்ந்ததை வெளிப்படுத்தும் எந்தவித அடையாளங்களுமேயற்ற புதியதொரு நகராக, குடியிருப்புகளுடன், வர்த்தக நிலையங்களுடன், வீதிகளுடன் புதிய பிறப்பெடுத்து நிற்கிறது.


இந்நிலையில் என் மனதில் அழியாத சித்திரமாக விரிந்து கிடக்கும் குருமண்காடு பற்றிய நினைவுகளைப் பதிவு செய்தல் அவசியமென்று நினைக்கின்றேன். இந்தப்பகுதி பற்றியதொரு ஆவணமாகவும் இந்த நனவிடை தோய்தல் விளங்குமென்பதால் இத்தகைய பதிவுகள் அவசியமேயென்றும் தோன்றுகிறது.


குருமண்காட்டு அனுபவங்களை மையமாக வைத்து ஏற்கனவே ஒரு நாவல் எழுதியிருக்கின்றேன். அது ‘வன்னி மண்’. ‘தாயகம் (கனடா)’ சஞ்சிகையில் தொடராக வெளியாகி, தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் மூலம் வெளிவந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலுள்ள நாவல்களிலொன்று.


நாங்கள் இருந்த காலகட்டத்தில் குருமண் காடு ஒற்றையடிப்பாதையுடன் கூடிய காட்டுப்பிரதேசம்.


நாங்கள் அப்பகுதிக்குக் குடி பெயர்ந்தபோது மொத்தம் இருந்த மானிடக் குடியிருப்புகள் ஒன்பதுதான்.

Continue Reading →