கவிதை: சிந்தையில் நினைக்கின்றோம்; நத்தார் இதுநாள் வித்தாம் புதுநாள்.

கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.காந்தள் மலர்கின்ற
காலத்திலே உம்மைக்
காந்தமாய் இழுக்கின்றோம்- மண்ணை
மாந்தி உயிர்க்கொடை
வாரியதா லுங்கள்
மாண்பில் உயிர்க்கின்றோம்- வண்ணப்
பூந்திரி போலுடல்
போர்கொண்டு சென்று
பொன்னாய் உருகிவிட்டீர்- உம்மை
ஏந்தி அழுகையில்
ஏர்கொண்டு கீறிய
இரத்தத்தால் எழுதுகின்றோம்!

வானக் கடல்வென்றீர்
மண்ணில் புதையுண்டீர்
மலர்முகம் எங்கையப்பா?- தமிழ்
மானப் பெயர்கொண்டு
மடியில் உறைந்துநீர்
வார்த்தனை குருதியப்பா!- அந்த
ஈன உலகெலாம்
ஒன்றாய் எரித்தனர்
இன்றென்ன கண்டாரோ?- மக்கள்
போன பின்னாலந்தப்
பேய்களின் வாலினைப்
பிடித்துமே விட்டாரோ!

Continue Reading →

குறுநாவல்: சலோ,சலோ (2)!

குறுநாவல்:  சலோ,சலோ! (1)மற்றவர்கள்,கட்டிடக்கூலிவேலைகள் தொட்டு…எந்த வேலைகளும் செய்ய பஞ்சி படாதவர்கள். வீட்டிலேயும், கெளரவம் பார்க்கிறது, தடுக்கிறது… எல்லாம் இருக்கவில்லை. வாப்பா பிரயாசைப்பட்டு ரேடியோ திருத்துறதை பழகிவிட முயல்கிறான். கற்றுக்குட்டிதான்.ஆனால் பாடாத ரேடியோவை, ஒரு கிழமை அல்லது நீள எடுத்து  எப்படியும் பிழையைக் கண்டு பிடித்து திருத்தி விடுவான்.அதை விட லயன்ஸ் கிளப்பில் வகுப்புகள் எடுத்து  வீடுகளிற்கு வயரிங், பிளமிங்… செய்கிறதுக்கு தெரிந்து வைத்திருக்கிறான். குஞ்சனின் அண்ணர் குகன் வீட்டுப்பெயின்றர். குஞ்சனும் மேசன் வேலையோடு,வீட்டுக்கு பெயின்ற் அடிக்கிறதைச் செய்கிறவன். நண்ப‌ர்கள்,அவனோடு இழுபட்டதால்… ஆதரவாளர்கள். அவனுடைய‌ தாமரை இயக்கமும் கடைசியாக கழுகால் தடை செய்யப்பட… அவனும் அநாதரவாக நிற்கிற மாஜி தோழனாகி விட்டான் “சிந்திக்கிறதை எவரால் தடை செய்து விட முடியும்?” வீம்பு மட்டும் அவர்களிற்கு குறையவில்லை.

“ஒரு கிழமை அரசியல் மாறும் என்று நினைத்தால், இந்தியனாமி வந்த பிறகும் அப்படியே கிடக்கிறதடா?”என்றான் சலிப்புடன்  நகுலன் .ஒவ்வொரு கிழமையும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து மிரட்டுவதைத்தான் அப்படி குறிப்பிட்டான். ஒன்றில் கழுகு மிரட்டும்,அல்லது இலங்கை ராணுவம் படுகொலைகள் புரிந்து நிற்கும். இந்தியனாமி வந்த பிறகும்  பதற்றமான செய்திகளே கேட்கிறார்கள். பெரிய நாடுகளின் கொளுவல்களிற்காக சிறிலங்காவில் வன்முறை செறிவாக்கப் படுகிறது தான். முழு இலங்கையையும் சிங்கள பெளத்த நாடாக்க வேண்டும் என்ற வெறி பிடித்து அலையும் இவர்கள், “ இந்த நாட்டையும்  கம்போடியா, வியட்னாம் போல …இயற்கை வளங்களை பாழ்படுத்தி அழித்தும்,, மக்களை வலது குறைந்தவர்களாக்கியும், வெடி குண்டுகள் விதைக்கப்பட்ட நாடாக்கி  விட்டிருக்கிறார்கள்” இதன் விளைவுகள், சிங்களவர்களையும் கூட விட்டு வைக்காது என்பதை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். “அடுத்தவனை நேசிக்கத் தெரிந்தவனாலே தன் மக்களையும் நேசிக்க முடியும்”என்பது எவ்வளவு உண்மை. புத்தசமயம் அதைத் தானே போதிக்கிறது.

Continue Reading →

கலைக் களஞ்சியன்: இ.மயூரநாதன் (தமிழ் விக்கிப்பீடியா முன்னோடி)

ஆனந்த விகடன் சஞ்சிகையின் 2016 டாப் நபர்கள்; பட்டியலில் இலங்கையைச்சேர்ந்த கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனும் இடம் பெற்றிருக்கின்றார். வாழ்த்துகள். நண்பர் மயூரநாதன் விக்கியபீடியா (தமிழ்) பிரிவுக்கு கடந்த பல…

Continue Reading →

மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !

அனைவருக்கும் மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள். உங்கள் மனதிலுறுதி உண்டாகட்டும். உங்கள் வாக்கினிலே இனிமை பரவிடட்டும். நல்ல நினைவுகள் கூடி நெருங்கின பொருள் கைப்படட்டும். உங்கள் கனவுகள்…

Continue Reading →

ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்

முன்னுரை
ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்    உலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. அதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது மனிதா்களே. ஏனெனில், தனது சுயநலத்திற்காகவும், தனது மகிழ்ச்சிக்காகவும் மனிதன்  இயற்கையை எப்போது தொட நினைத்தானோ அப்போதே பிரச்சனைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. அப்பிரச்சனைகளிலிருந்து, மனிதன் மீண்டுவர நினைத்தால்கூட அது முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது.

நமது பூமி இன்று மோசமான ஒரு வானிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குளிர்காலங்களில் மழையும், வெயில் காலங்களில் பனிப்பொழிவும், மழைக்காலங்களில் வெயிலின் தாக்கமும் பார்த்தோமேயானால் இவையெல்லாம் நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாகவே நாம் கருத வேண்டும். இன்று உலகநாடுகளின் பெரும் பிரச்சனையாக இருப்பது வெயிலும் வெப்பமும். ஏனெனில் வெயிலின் உச்சமும், வெப்பத்தின் தாக்கமும், மனிதா்கள், விலங்குகள், செடிகொடிகளை மட்டுமல்ல இந்த பூமியையும் ஆட்டிப்படைக்கிறது. வெயிலையும், வெப்பத்தையும்  குறித்த செய்திகள் நம் இலக்கியங்களில்கூட காணக்கிடைக்கின்றன. அந்த வகையில், சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெயிலின் தாக்கங்கள் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை வழிக் காண்போம்.

இலக்கியங்களில் வெயிலும் வெப்பமும்
முற்காலத்தில் மக்கள் வெயிலையும், வெப்பத்தின் கடுமையையும் உணா்ந்திருந்த போதிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெினில் அக்காலத்து மக்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்து அதன் தன்மையோடு பொருந்தி வாழ்ந்துள்ளனா். குறிஞ்சியை, மலையும் மலைசார்ந்த இடமாகவும், முல்லையை, காடும் காடு சார்ந்த இடமாகவும், நெய்தலை, கடலும் கடல் சார்ந்த இடமாகவும், மருதத்தை, வயலும் வயல் சார்ந்த இடமாகவும்  பிரித்தும், பாலையை மட்டும் குறிக்குமிடத்து,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயா் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் “       ( சிலம்பு – காடு.காண். காதை  64-66 )      

Continue Reading →