Recently in an invitational screening of a large gathering I sat at Regal Theatre to see the new creation by…
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர். திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.
திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள், தெய்வங்களின் படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர். அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சங்கத்தலைவரின் தொடக்கவுரையையடுத்து திருமதி மங்களம் வாசன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் வாழ்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதியில் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியின் “சமூகம் சார்ந்த வாழ்வும் படைப்புலகமும்” என்ற தலைப்பில் செல்வி மோஷிகா பிரேமதாசவும்- ” பாரதியும் பெண்விடுதலையும்” என்ற தலைப்பில் செல்வி மதுபாஷினி பாலசண்முகனும் உரையாற்றினர். இந்த இரண்டு மாணவிகளும் கடந்த ஆண்டு இறுதியில் விக்ரோரியா மாநிலத்தில் நடந்த V.C.E பரீட்சை, தமிழ்ப்பாடத்தில் கூடுதல் புள்ளிகள் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் செல்வி மதுபாஷினி பாலசண்முகன் நிகழ்த்திய உரை. இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையில் தமிழ்ப்பாடத்தில் சிறந்த புள்ளிகளைப்பெற்றவர். மொனாஷ் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பயிலும் இவர், மெல்பனில் நடைபெற்ற இளம் எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற போட்டியில் சிறந்த இளம் எழுத்தாளருக்கான விருதையும் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடும் ஆர்வமும் மிக்க மதுபாஷினி பாலசண்முகன், தமிழ் இலக்கியத்திலும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்திவருபவர். -முருகபூபதி –
“நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”
பாரதியார் எழுதிய புதுமைப்பெண் பாடலில் இருந்து சில வரிகள் இவை. சுப்ரமணிய பாரதி 19 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் புரட்சிக் கவிதை எழுதிய கவிஞர் மற்றும் சுதந்திர வீரர் ஆவார். பண்டைத் தமிழ் வரலாற்றையும் பாரதப் பண்பாட்டினையும் நன்கு அறிந்திருந்த பாரதி, நாட்டின் ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களின் நிலையைக் கண்டு மனம் வெதும்பினார், வேதனைப் பட்டார். பெண் விடுதலைக்காக எழுச்சி மிகுந்த பாடல்களை பாடினார்.
பாரதியார் தமது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்ணுரிமைக் கருத்துகளை அவருக்கே உரித்தான கவியழகோடும், அழுத்தத்தோடும், வீராவேசத்தோடும், படிப்போரின் மற்றும் கேட்போரின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் கனல் தெறிக்க எழுதினார்.
நான் உங்களுடன் உரையாடவிருப்பது பாரதியாரின் பெண் விடுதலைக் கருத்துகளைப் பற்றி. உப தலைப்புகளாக, பாரதியார் சமூக சீர்திருத்த வாதத்தை, முக்கியமாக பெண் விடுதலையை ஆதரித்த காரணம், அவரது பெண் விடுதலை வாதம் சார்ந்த கருத்துக்கள் மற்றும் அவற்றுக்கு உதாரணமான பாடல்கள் என்பன பற்றிக் கலந்துரையாட உள்ளேன்.
Abstract
Any journey in life is blissfully ever sought by human travelers across the globe. However, there are certain migrations by specific ethnic groups who are left with not much choice except for a disagreeable movement, sometimes hazardous ones too. Life and journey go hand in hand in a pleasant manner for any human being with comfortable existence. Crisis occurs only when life becomes uncertain in the homeland and to enter an alien land. Srilankan Tamil people is one such ethnic group who have been going through the crisis of existence for having born in a land that coerces cruelty upon them. The writer V.N. Giritharan was born as a blessed being like others in a Tamil family in Sri Lanka. He grew up as a writer as well as an Architecture graduate with great sensitivity towards the land and people around him. However, his state of affairs did not remain the same, as there were the chaos and brutalities of the ethnic conflict between the majority Sinhalese and the minority Tamil. The only way to survive was to leave the homeland with a heavy heart and to move towards an asylum. This journey is the most pathetic one in any man’s life. His sufferings have been portrayed vividly in the novel An immigrant in which the protagonist named Ilango lives as the replica of the writer V.N. Giritharan himself.
The paper attempts to explore the existential predicament of the protagonist of the novel An Immigrant whose personal experiences demonstrate the physical, psychological multicultural, ethnic, political and socio-economic issues of such immigrants across the globe.
Key words : Canadian-Tamil Writer, V.N. Giritharan, forced migration, Diaspora, Tamil ethnic race, refugees, unwilling immigrant, identity crisis, political asylum.
“I remained, lost in oblivion;
My face I reclined on the Beloved.
All ceased and I abandoned myself,
Leaving my cares forgotten among the lilies.” (St. John of the Cross)
மார்ச் மாதம்; 8-ம் திகதி. சர்வதேச மகளிர் தினம் எங்கும் சம்பிரதாயமாகக் கொண்டாடப் படுகின்றது. ஆனால் இன்றுகூட உலக நாடுகள் எவற்றிலும் பெண்களையும் ஆண்களையும் எம் சமுதாயங்களும் அரசாங்கங்களும் வேலை செய்யும் இடங்களிலோ இல்லங்களிலோ பொதுஇடங்களிலும் நிகழ்ச்சிகளிலுமோ சரிசமமாகக் கருதுவதும் இல்லை> நடத்துவதும் இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் என்னவெனில் இன்றும் எஞ்சியுள்ள ஆணாதிக்கமே. பெண்களின் உதாசீனப் பிரயாசைக் குறைவும் இன்னொரு காரணமாக இருக்கலாம் என்பதையும் நாம் மறுக்க முடியாது.
கீழைத் தேசங்களாகிய ஆசிய நாடுகளில் ஆண் பெண் வேற்றுமை மிகக் கூடுதலாக இன்னும் நிலைக்கிறது. ஒரு கொடூரமான உதாரணம்: இந்திய இந்துப் பெண்கள் கணவன்மார் இறந்து அவர்களுடைய சடலம் எரியும் பொழுது மனைவிமாரையும் நெருப்பில் வீழ்ந்து மாளச் செய்கிற வழக்கம் இன்னமும் உண்டு. இதைச் சில காலமாக அரசாங்கம் சட்ட முறையாக நிறுத்தி வந்தாலும் ஒருசில கிராமங்களில் இப்பொழுதும் இந்த அநியாயம் குறைந்த அளவில் எனினும் நடக்கவே செய்கிறது. மேலும் அங்கு பலர் தம் மனைவிமாரை அடிமைகளாகக் கருதி மனிதப் பிறவிகளைப் போல் நடத்துவதே இல்லை. எனினும் மேல் நாட்டாரின் வாழ்க்கை முறைகளையும் அவர்கள் பெண்களை நடத்தும் வகையையும் அறிந்து மேலும் கல்வி மேம்பாட்டாலும் அரசாங்கக் கட்டுப் பாட்டினாலும் இவ்விதமான அநீதிகள் குறைந்து கொண்டு வருவது ஒரு நற்செய்தியே.
2008இல் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 1.3 பில்லியன் தொகை வறுமையில் வாழும் உலகமக்களில் நூற்றுக்கு 70-வீதம் பெண்களே எனக் குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணம் பெண்களுக்கு இன்றும் மனிதஉரிமைகள் முழுமையாகக் கொடுக்கப்படவில்லை என்பதே. அத்துடன் ஆண்கள் பெண்களைக் கீழ்த் தரமாகக் கருதி வேலை வீடு பணம் முதலியவற்றில் பூரண சமத்துவம் மறுக்கப்படுகிறது. மேலும் உலகில் தொழில் செய்பவர்களில் பெண்ணினம் மூன்றில் இரு பங்காக இருந்தாலும் உலகின் வருமானத் தொகையில் நூற்றுக்கு 10-வீதமான வருமானத்தையே பெறுகிறார்கள். அரை மில்லியனுக்குக் கூடிய பெண்கள் கர்ப்பத்திலும் பிள்ளைப் பேற்றிலும் மரணம் அடைகிறார்கள். உலகின் அரசாங்க சபைகளில் பெண்கள் நூற்றுக்கு சராசரி 14-வீதம் இடத்தைத் தான் கைப்பற்றி இருக்கிறார்கள்.
உலகில் குடும்பங்களில் மிகக்கூடியதாக முக்கியமாக ஆண்களின் தாக்குதலால் காயப்படுவதும் மரணமடைவதும் பெண்களே. இவை ஆராய்ச்சிப் புள்ளிவிவரங்கள்.
அழகான தலைப்புக்கொண்ட நூல். மகரந்தம் பறந்து சிதறிப் பூக்களிலிருந்து பூக்களுக்குத் தாவிச் சூல் கொள்ள வைக்கின்றது. நவஜோதி ஜோகரட்னம் ஈழத்தில் தோன்றிய மகரந்தம். இன்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இலண்டனில் தன் மகரந்தத்தைப் பலவாயிரம் புலம்பெயர் பெண்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தவும் தமிழ் பணியை உறுதியுடன் செய்யவும் பயன்படுத்துவது யாவரும் அறிந்ததே. பிரித்தானியாவில் பெண்கள் உயர்வுக்காகக் குரல் கொடுக்கும் நவஜோதி ‘மகரந்தச் சிதறல்’ ஊடாக வானொலியால் பெண்களின் பங்களிப்பை முன்னிலைப்படுத்திப் பின்னர் நூல்வடிவில் நூல்வடிவில் பதிவுகளாக வெளிக்கொணர்ந்து பேசாப் பொருளைப் பேசத் துணிந்து தூண்டியுள்ளார்.
பௌவியமாகத் தெரிவு செய்து எழுதப்பட்ட இந்நூலில் உள்ளடக்கப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மூன்று விடயங்களை விவாதத்திற்கு உள்ளாக்கலாம். முதலாவதாக இலைமறைகாய்களாக இருந்த சில பெருமாட்டிகள் பற்றி எழுதப்படவில்லை எனவும், வாழ்ந்துகொண்டிருப்போரில் முக்கியமான சிலர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனவும் அடுத்ததாக, அடுத்தவர் அறியாது பிரித்தியானியாவில் வந்து அவலப்பட்ட அகதிகளுக்கான உதவிகளைச் செய்தவர்களையும், பெண்கள் மீதான வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருந்தும், தாய் மண்ணின் அநாதைகளின் வாழ்வு உயரவும், கல்வி பெறவும் பணி செய்து வாழ்ந்த, வாழும் உத்தமிகளது பதிவுகள் இடம்பெறவில்லை என்ற ஆதங்கங்களும் எழலாம். ஒரே நூலில் எல்லாமுமே இடம்பெறமுடியாது. அவை இடம்பெறவேண்டும் என்ற தேவையை இந்நூல் வற்புறுத்துகிறது எனலாம்.
‘நாங்கள் லண்டனுக்கு கப்பலால்தான் பயணம் செய்து வந்தோம். கறிக்குப் போடுகிற மிளகாய்த்தூள், சமைக்கிறதுக்கு கருவாடு, கோப்பி போன்ற சாமான்களை யாழ்ப்பாணத்திலிருந்துதான் கொண்டு வருவோம். அப்படிக் கொண்டு வந்தால்தான் எங்கட சாப்பாட்டை கொஞ்சம் சுவைபடச் சாப்பிடலாம். இலங்கையிலிருந்து மேற்படிப்புக்கென்று வருகிறவர்கள் எல்லோரும்; கட்டிக் காவிக் கொண்டுதான் வருவோம். யாழ்ப்பாணத்தை இறக்குமதி செய்தது போலல்லவோ இப்போது லண்டனில் எல்லாப் பொருட்களும் இருக்குது.
என்னுடைய பிள்ளைகள் லண்டனில் படித்துப் பட்டம் பெற்றார்கள். ஆனால் திருமணம் என்பதில் நாட்டம் கொள்ளாது இருந்துவிட்டார்கள். இப்ப துயர உணர்வில் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். திருமணத்தை விரும்பாது சுதந்திரமாக வாழவேண்டும் என்று தனிமையில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவர்களில் மோகங்கொண்டு கல்யாணம் செய்தவர்களும் உண்டு. சிலர் சிறப்பாக இருக்கிறார்கள். சிலரின் வாழ்க்கை இடையில் முறிந்தும், சீர்கெட்டுப்போயும்; இருக்குது. நவீன உலகில் திருமண வாழ்வும் புதுப்புது உருவம் பெற்றுக்கொண்டுதான் வருகின்றது. என்ன இருந்தாலும் என்ர பிள்ளைகள் தனித்து வாழ்வது என் சிந்தனையை எந்த நேரமும் அரித்துக்கொண்டுதான்; இருக்குது’ என்று இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கும் அன்ரி எப்போதும் தான் படிக்க வந்த பெருமையையும்;, தனது பிள்ளைகளின் கவலையையும் கூறிக்;கொண்டே இருப்பார்.
ஷாலினியுடன் அன்ரியின்; ஆதங்கத்தைக் கதைத்துக் கொண்டிருந்தேன். திருமணங்கள் பற்றித் திரும்பியது பேச்சு.
இலங்கையில் பெற்றோர் விருப்பத்தின்படி திருமணம் முடித்து வந்தவள் ஷாலினி. லண்டனில் பிறந்து வளர்ந்தவர்தான் மாப்பிள்ளை. தற்போது ஷாலினி லண்டனில் தனியார் வைத்தியசாலையில் தாதியாக வேலை பார்க்கிறாள். பட்டப்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டும் இருக்கின்றாள் ஷாலினி.
“சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதியது.நீளத் தொடர்”. – கடல்புத்திரன்)
அத்தியாயம் 3
வடக்கராலியில், இதைப் போல நாலு ஐந்து குறிச்சிகள் இருக்கின்றன. செட்டியார்மடம், மையிலியப்புலம், பள்ளிக்கூடத்தடி, சந்தையடி. இங்கே மட்டும் தான் ‘பைப்புகள் இருக்கின்றன.மற்றையவற்றில் இல்லை. சிலவேளை, சந்திரா இருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற…வயல்ப் பக்கமிருந்த குடவைக் கிணற்றுக்கு நகுலன் சைக்கிளிலே போய் குடத்திலே நீர் பிடித்து வாரவன்.அது தூரம்.இரண்டொரு வீட்டிலே இடைப்பட்ட தர நிலையில் கிணற்று நீர் பரவாய்யில்லையாகவும் இருந்தன.அங்கே இருந்தும் எடுத்துக் கொண்டார்கள்.நகுலன் வீட்டிற்குப் பின் வீட்டிலும் பரவாய்யில்லையான நீர்.அங்கே இருந்தும் சிலவேளை எடுத்தார்கள்.
நகுலன் வீட்டு கிணற்று நீரை பாத்திரங்கள்,கழுவ..மற்றைய தேவைகளிற்கு.. மாத்திரமே .பாவித்தார்கள்.சமைக்க குடிக்கவெல்லாம் மற்றைய நீர் தான்.
“எங்க வீட்டுத் தண்ணீர் பாசி மணம்..!”என்றான்.
“பரவாய்யில்லை”என அவன் வீட்டிலேயே தண்ணீர் எடுக்க வந்தார்கள். ஆபத்திற்கு தோசமில்லை என்றாலும் பாசி மணம் போய் விடாது. ‘சரி அப்ப வாருங்கள்”என கூட்டிச் சென்று துலாகிணறி லிருந்து நீர் அள்ளி விட்டான்.இரண்டு குடத்தில் பிடித்துச் சென்றார்கள்.
விடியிறப் பொழுதிலே, பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் வந்து விட்டார்கள் யாழ்ப்பாணத்தில் எல்லாப் பகுதிகளிலும் இத்தகையக் குழுக்கள் கட்டப்பட்டி ருக்கின்றன.”என்ன வேண்டும்”என கேட்டவர்கள், சமைக்கிறதுக்கு விறகு, தேயிலை, சீனி, அரிசி, மற்றும் காய்கறிகள்… சரக்குச் சாமான்கள் எல்லாவற்றையும் கொஞ்ச நேரத்திலேயே சூழவுள்ள வீடுகளிலிருந்து சேகரித்து வந்து “சமைத்துச் சாப்பிடுங்கள் “என கொடுத்தும் விட்டார்கள்.
எழுத்தாளர்களின் பால்ய காலத்து அனுபவங்களை, வாசிப்பு அனுபவங்களை, மொத்தத்தில் அவர்கள்தம் வாழ்க்கை அனுபவங்களை வாசிப்பதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வமுண்டு. முக்கிய காரணம் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்கள் வெறும் அபுனவுகளாக மட்டும் இருந்து விடாமல் இலக்கியச்சிறப்பு மிக்கதாக, கலைத்துவம் மிக்கதாகவும் இருக்கும். ஒளிவு, மறைவு இல்லாமல் அவர்கள் எழுத்தில் வெளிப்படும் நேர்மை நெஞ்சினைத்தொடும்.
எழுத்தாளர்களின் அபுனைவுகளில் மட்டுமல்ல அவர்கள்தம் புனைவுகள் கூட சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாக அப்புனைவுகள் இருந்து விடுவதுதான். புகழ் பெற்ற உலகப்பெரும் எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகள் அவர்கள் சிந்தனைகளின், வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்திருப்பதை அவர்களது படைப்புகளை வாசிக்கும்போது அறிய முடிகின்றது.
மேலும் அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் தெரிவிக்கும் புதுத்தகவல்கள் ஒரு காலகட்ட வரலாற்றுச்சின்னங்களாக விளங்கும். காலமாற்றத்தில் காணாமல் போனவற்றையெல்லாம் அவர்கள்தம் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிப்பின்பத்துடன் எம்மையும் எம் கடந்த காலத்துக்கே அழைத்துச்சென்று விடுகின்றன.
அண்மையில் என் நெஞ்சினைத்தொட்டதொரு எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவங்களினை வெளிப்படுத்தும் புத்தகமொன்றாக எழுத்தாளர் கலாப்ரியாவின் வாழ்வு அனுபவங்களின் தொகுப்பான ‘ ‘ என்னும் நூலினைக் குறிப்பிடலாம். இன்றுதான் டொராண்டோவிலுள்ள நூலகக் கிளையொன்றில் அதனை இரவல் பெற்றேன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இதுவரை வாசித்த நூலில் வரும் அவர் வாழ்வில் வந்து போன மனிதர்கள் பற்றிய அனுபவங்கள் நெஞ்சினைத்தொட்டன என்று மட்டும் கூறிவிடமுடியாது. வாசித்த பின்னரும் நெஞ்சினை வாட்டும் வகையில் கலாப்ரியாவின் அனுபவங்கள் நெஞ்சினை உலுக்கு விட்டன என்றே கூற வேண்டும்.