கிளிநொச்சி: “ரசஞானி” லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் கிளிநொச்சியில் திரையிடல்!

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் – “ரசஞானி” கிளிநொச்சியில் திரையிடப்படவுள்ளது. கிளிநொச்சி, பழைய ஆஸ்பத்திரி மருந்தகத்துக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தப் படத்தை இயக்கிய ‘மறுவளம்’ எஸ். கிருஸ்ணமூர்த்தியும் கலந்து கொள்கிறார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் முருகபூபதி நீண்டகாலமாக வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 25 புத்தகங்களுக்கு மேல் பிரசுரமாகியுள்ளன. பல நூற்றுக்கணக்கான பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கும் முருகபூபதி, சமூகச் செயற்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.

Continue Reading →

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

கவிதை: ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

மானுடர்தம் திருநாளிந்தப் பொங்கல் திருநாள்.
இரவியின் குழந்தைகள்  நாம். 
இரவிதன் கதிர் இல்லையேல் நாமில்லை.
இவ்வுலகில்லை.
இரவியின் சிறப்பை உணர்ந்தன்றோ
இளங்கோ பாடினான் அன்று
‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’

இத்திருநாளில் நாம் இருப்பறிவோம்!
இருப்பின் அடியான கதிர் அறிவோம்.
கதிர் வழங்கும் கருணை அறிவோம்.
உலகுக்கு உணவு தரும் இரவி மற்றும்
உழவர்தம் உழைப்பறிவோம்; சிறப்பறிவோம்.
உழவருக்குதவும் எருதறிவோம்.  ஆதலினால்
ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!

பல்லினம், பல்லுயிர்  வாழும் பாரிது!
நல்லெண்ணம் நானிலத்தில் பரவட்டும்!
போர்க்குணமிழந்து பொங்கட்டும்
இன்பப்பேராறு! பொங்கட்டும்
அன்புப்பேரூற்று!

Continue Reading →

உளம் மகிழப் பொங்கிடுவோம் !

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !

Continue Reading →

வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கலைக் குறிப்புகள்’ 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 – 27.05.2003)!

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  – ‘வெப்பநில நவீனத்துவக்’ (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற ‘நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.  

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் ‘ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்’ (The Royal Institute of British Architects ) அமைப்பின் ‘அசோசியட்’ உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கலைக் குறிப்புகள்’ 1: ஜெவ்ரி பாவா Geoffrey Bawa (23.-7.1919 – 27.05.2003)!

ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa ஜெவ்ரி பாவா Geoffrey  Bawa  – ‘வெப்பநில நவீனத்துவக்’ (Tropical Modernism) கட்டடக்கலைப்பாணியின் மூலவர்!

இலங்கையின் முக்கியமான கட்டடக்கலைஞர்களிலொருவராக விளங்கியவர் ஜெவ்ரி பாவா. இவரது முழுப்பெயர் ஜெவ்ரி மான்னிங் பாவா (Geoffrey Manning Bawa ). உலகக் கட்டடக்கலையில் ஆசியாக் கட்டடக்கலையின் முக்கிய கட்டடக் கலைஞர்களிலொருவராகத் தன் கட்டடங்களின் மூலம் திடமாகத் தடம் பதித்தவர் இவர். குறிப்பாக இன்று உலகக் கட்டடக்கலையில் வெப்பநில நவீனத்துவம் (Tropical Modernism) என்று அறியப்படும் கட்டடக்கலைப்பாணிக்கு அடிகோலியவராக அறியப்படுபவர் இவர்.

இவரது தந்தையாரான பி.டபிள்யு. பாவா செல்வச்சிறப்பு மிக்க சட்டத்தரணியும், நீதிபதியுமாவார். ஆங்கில, முஸ்லிம் இரத்தக்கலப்புள்ளவர். தாயாரான பேர்த்தா மரியன்னெ ஸ்ராடர் ஜேர்மனிய, ஸ்ஹொட்டிஸ் மற்றும் சிங்கள இரத்தக்கலப்புள்ளவர். இவரது மூத்த சகோதரரான பெல்விஸ் பாவா புகழ்பெற்ற ‘நிலப்பரப்புத் தோற்றக் கட்டடக்கலைஞராக (Landscape Architect) விளங்கியவர்.

ரோயல் காலேஜ் மாணவரான ஜெவ்ரி பாவா ஆரம்பத்தில் படித்தது ஆங்கிலமும் சட்டமும். ஆங்கில இலக்கியத்தில் புனித காதரின்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜில் இளங்கலைப்பட்டப்படிப்பை முடித்த இவர் பின்னர் Middle, London இல் சட்டத்துறைப்பட்டதாரியானார். இலங்கை திரும்பிய இவர் இரண்டாவது யுத்தகாலத்துக்குப் பின்னர் கொழும்பிலுள்ள சட்ட நிறுவனமொன்றில் பணியாற்றினார். பின்னர் இவரது தாயாரின் மறைவினையடுத்து சட்டத்துறையை விட்டு விலகிய இவர் சுமார் இரு வருட காலம் சர்வதேச பயணங்களிலீடுபட்டார். அமெரிக்கா, ஐரோபா என்று பயணித்த இவர் இத்தாலியில் வீடு வாங்கி நிரந்தரமாகத் தங்க எண்ணினார். ஆனால் அந்த எண்ணம் சரிவரவில்லை. 1948இல் நாடு திரும்பிய இவர் கைவிடப்பட்டிருந்த இறப்பர் தோட்டமொன்றினை வாங்கினார். அதனையொரு இத்தாலியப் பாணிப்பூங்காவாக ஆக்க விரும்பினார். ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவருக்கில்லாதது பெருங்குறையாகவிருந்தது.  

இக்காலகட்டத்தில் கொழும்பிலுள்ள எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) அவர்களது கட்டடக்கலை நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அப்பொழுது கட்டடக்கலைஞர் ரீட் மட்டுமே உயிருடனிருந்தார். அவருக்குக் கீழேயே பயிற்சியில் இணைந்தார். ரீட் மறைவினையடுத்து கேம்ரிட்ஜ் திரும்பிய இவர்  இங்கிலாந்திலுள்ள கட்டடக்கலைஞர் சங்கத்தில் மாணவராக இணைந்தார். அங்கு கட்டடக்கலைத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். அதன் பின்னர் ‘ரோயல் இன்ஸ்டிடியூட் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ்’ (The Royal Institute of British Architects ) அமைப்பின் ‘அசோசியட்’ உறுப்பினரானார். தனது 38ஆவது வயதில் நாடு திரும்பிய ஜெவ்ரி பாவா தான் பணியாற்றிய எட்வேர்ட்ஸ், ரீட் மற்றும் பெக் (Edwards, Reid & Begg) கட்டடக்கலை நிறுவனத்தைத் தனது பொறுப்பில் கொண்டு வந்து தனது கட்டடக்கலைப் பணியினைத் தொடர்ந்தார்.

Continue Reading →

சென்னை: சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’

சென்னை: சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் 'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்'

அன்பின் ஆசிரியருக்கு, இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது.  என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட,  உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், பாதித்தவையுமே என்னால் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கத்தேய ஊடகங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், மனிதாபிமானமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படும் ஆபிரிக்கர்களையே நாம் பெரும்பாலும் கண்டிருக்கிறோம்.  ஆனால் அவர்கள் உண்மையில் அவ்வாறானவர்கள் அல்ல. நேர்மையும், மனிதாபிமானமும் மிக்க அம் மக்களது நிஜ சொரூபத்தையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன. இந்த உண்மையானது, தமிழ் வாசகர்களிடத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இச் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

Continue Reading →

கோவா சர்வதேச திரைப்பட விழா 2017: சில பிணங்களும் சில சான்றிதழ்களும்!

சுப்ரபாரதிமணியன்கோவா சர்வதேச திரைப்பட விழா சர்ச்சைகளுடன் ஆரம்பித்தது. விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட ‘எஸ்.துர்கா’ ( மலையாளம் ) ‘நியூட்’( மராத்தி ) ஆகிய இரு திரைப்படங்களையும் நீக்கியது பிஜேபி அமைச்சரகம். ’ ..தேர்வுக்குழு, நீதிபதிகள் மூவர் தங்கள் பெறுப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து விலகிக் கொண்டார்கள். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்’ மிக உயரிய விருதைப்பெற்ற மலையாளப் ’செக்சி துர்கா’ என்ற மலையாளப் திரைப்படத்தை ‘எஸ்.துர்கா’ என்று பெயரிடுமாறு சென்சார் நிர்ப்பந்தித்தது . பின்னர் தடை. .இயக்குனர் நீதிமன்றத்திற்குச் சென்று திரையிட அனுமதியை உடனே பெற்றாலும் கடைசிவரை திரையிடவில்லை. எஸ். துர்க்கா-கடவுள் பெயர், நியூட் போன்ற பெயர்களே பிஜேபியை உறுத்தி அலைக்கழித்தது..துர்க்கா படத்தை எடுத்த சனல்குமார் சசிதரனின் படம் 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இடம்பெற்றிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டப்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரையிடாதது சென்சார் போர்டு, அரசின் தலையீடுகள் பற்றிய  சர்ச்சையைக்கிளப்பியது.

விழாவின் துவக்கவிழா படமாக அமைந்த மஜித்மஜீதின் ஈரான் இயக்குனரின் Beyond clouds -படம் முழுக்க பம்பாயில் எடுக்கப்பட்டது. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் சலவைத் தொழில் செய்யும்  ஒரு பெண் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்ற ஒரு தமிழனைக் கொல்வதும், அந்தத் தமிழ்க்குடும்பத்தின் அல்லாடலும் இதில். யாருமற்ற , ஆதரவற்ற முதிய வயது பெண், இளம் பெண் , ஒரு சிறுமி உட்பட மூவரைக் கொண்டது அந்தத் தமிழ்க்குடும்பம்.கொலைசெய்த இளம் பெண்ணின் தம்பியை ஒண்டி அந்தத் தமிழ்க்குடும்பம் ஒதுங்கியதும் படத்தில் இருந்த குறைபாடுகளும் அப்படத்தை இன்னும் சர்ச்சைக்குறியதாக்கியது.மலையா ளிகள் தொடர்ந்து தமிழர்களை கேவலப்படுத்தும் பாத்திரங்களை படங்களில் அமைப்பது போல் ஈரான் இயக்குனரின் அணுகுமுறையும் இப்படத்தில்  பார்க்கப்பட்டது.

இடம்பெற்ற தமிழ்ப்படம் “ மனுஷங்கடா “ இதன் இயக்குனர் அம்சன்குமார் பல ஆவணப்படங்களையும் கி.ராஜநாராயணின் கதை ஒன்றை மையமாக்க் கொண்டு ஒருத்தி என்ற திரைப்பட்த்தையும் எடுத்தவர்.  பொதுப்பாதையில் தலித் பிணத்தை எடுத்துச் செல்ல பிரச்சினையின் போது நீதிமன்றம் உத்தரவு தந்தாலும்  அதை அமலாக்க கவல்துறை அக்கறை எடுக்காமல் காவல்துறையினரே பிணத்தை எடுத்துச் சென்று உண்மை புதைத்த நிகழ்வை படமாக்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி , மருத்துவம் போன்றவற்றில் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் பிணத்தைப் புதைக்க கூட உரிமை இல்லாததை மனித உரிமைப்பிரச்சினையாக்கியிருக்கி றார் இயக்குனர். இதில் கதாநாயகனாக கோலப்பன் என்ற கதாபாத்திரத்தில் அம்சன்குமாரின் மகன் ஆனந்த் நடித்திருக்கிறார்.. சமத்துவம் இறப்பிலும் தரப்படுவதில்லை. தப்பாட்டத்திற்கும் கூட ஊர் விலக்கம் செய்யும் கொடுமை. உள்ளூர் நிலைமை தெரியாமல் நீதிமன்றம் ஆணை போட்டிருப்பதாக உள்ளூர் நிர்வாகம், காவல்துறை சொல்லிக்கொள்கிறது. நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கேட்கையில் மூன்று நாட்கள் பிணம் வீட்டில் கிடக்கிறது. பிணத்தை காவல்துறை எடுக்க முயற்சித்தபோது வீட்டினுள் பிணத்தை வைத்து கொண்டு காப்பதும், காவல்துறையினரின் அத்துமீறலைக்கண்டித்து வீட்டினுள் இருப்பவர்கள் மண்ணெணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வதும் கொடுமையாகவே உள்ளது. உள்ளூர் நிர்வாகம் இறுதியில் ஒத்துக்கொண்டு பொய் சொல்லி பிணத்தை வெளியே எடுத்து வரச்செய்து புதைத்து விடுகிறது. வீட்டில் இருப்போரையும் கைது செய்து விடுகிறது.. அடுத்த நாள் பால் ஊற்றும் சடங்கிற்கு முள்பாதையில் அலைந்து திரிந்து செல்லும் கதாநாயகன் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்று தெரியாமல் அல்லாடும் வேதனையுடன் படம் முடிகிறது.  ,அமரர் இன்குலாப்பின் மனுஷ்ங்கடா பாடல் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. சமரசம் உலாவும் இடமே என்ற பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலும் இடையில் சேர்க்கப்பட்டு பிணமான பின்னும் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தை இப்ப்டம் முன்வைத்திருக்கிறது.

Continue Reading →

அழகியல் நோக்கில் க.நா.சுவின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?‘செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகெனப்படுமே”1 (தொல் செய்யுளியல் 1492 நூற்பா)

அழகு என்பது செய்யுள் உறுப்புகளில் ஒன்று. செய்யுளுக்குரிய சொல்லால் சீரைப் புனைந்து தொகுத்து வருவது அழகு என்று தொல்காப்பியம் கூறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டில் (இரஷ்யாவில்) பல கலைக் கோட்பாடுகள் உருவாகின. அவற்றுள் அழகியலும் ஒன்றாகும். அழகியலில் ‘என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அழகியலின் அடிப்படை”.2 (தி.சு. நடராசன், தமிழ் அழகியல்) தமிழில் அழகியலை முருகியல் என்றும் அழைப்பர் இது ஆங்கிலத்தில் ஈஸ்தடிக்ஸ் (யுநளவாநவiஉள) என்று வழங்கப்படுகிறது. இதனை பொற்கோ, ‘அழகியல் அல்லது முருகியல் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்ற துறை இன்றைய சூழலில் நமக்குப் பெரிதும் புதியது என்றாலும் அணி இலக்கணமும் இலக்கணங்களில் பல்வேறு சூழல்களில் பேசப்பட்டிருக்கின்ற  பொருள்கோளும் நடையியலும் அழகியலுக்கு நெருக்கமானவை என்று நாம் குறிப்பிடுதல் பொருந்தும்”3 என்று ஆராய்ச்சி நெறிமுறைகள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அழகு என்பதற்கு திரு, அம், அணி, ஏர், நோக்கு, ஐ, காமர், தகை, மதன், மைந்து, மா, பொற்பு, பொலிவு, சீர், வடிவு, கோலம், வண்ணம், கவின், முருகு, வனப்பு, எழில் எனும்  பல பொருள்கள் உள்ளன. முருகு என்பது தொன்மை வாய்ந்த ஒரு தமிழ்ச்சொல். ஈஸ்தடிக்ஸ் எனும் ஆங்கில சொல்லிற்கு தமிழில் புலனுணர்வு, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு என்ற பொருள்களும் உள்ளன.  மேலும், முருகு எனும் சொல் கலித்தொகை,  ஐங்குறுநூறு, புறம்.4, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முருகு என்பது பலபொருள் குறிக்கும் சொல். சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை,

அ) மனம் ஆ) இளமை இ)கடவுட்டன்மை  ஈ) அழகு என்பன.
‘கை புனைந்தியற்றா கவின்பெறு வனப்பு|4 (திருமுருகாற்றுப் படை)
‘சுருங்க சொல்லல், விளங்க வைத்தல்……
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்தல்|5 (நன்னூல், பத்து அழகுகள், நூற்பா 13)

என்பன அழகு குறித்துப் பேசப்படும் நூல்கள். மேலும்;, திரு.வி.கவின் முருகன் அல்லது அழகு நூலும், பாரதிதாசனின் அழகின் சிரிப்பும், வாணிதாசனின் எழிலோவியம் நூலும் அழகு என்ற பெயரில் அமைந்த நூல்கள், மேலும், அழகு குறித்து திருவாசகம் – சித்தம் அழகியார் என்றும், குமரகுருபரர் ‘அழகு ஒழுக| எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திறனாய்வில் அழகியல் என்பது உருவம், உள்ளடக்கம் இரண்டைப் பற்றியதாகும். இவற்றில் எது முக்கியமானது? எது முதன்மையானது? என்பது நீண்ட காலமாக இருந்துவரும் விவாதம்.

Continue Reading →

அகநானூற்றுப்பாடல்களில்; முல்லைத்திணை மரங்களும் மலர்களும்!

சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -முன்னுரை
சங்க இலக்கியநூல்களின் மூலம் தமிழர்கள் வாழ்வியல் சு10ழலைப் பற்றிய செய்திகள் புலவர்களின் பாடலடிகளில் காணமுடிகிறது. மரங்களும், மலர்களும் அதன் தன்மையை பல புலவர்கள் தம் பாடலடியின் வழியாக ஆராய்ந்து எடுத்தாளப்பட்டதையும், புலவர்கள் தம் பாடலடிகளின் மூலமாக தலைவன் தலைவியின்  வாழ்வியலைத் தாவரங்களில் மீது செலுத்திய அறிவுதிறனைப்பற்றியும் அகநானூற்றுப்புலவர்கள்  முல்லைத்திணையின் வழியாக  இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

முல்லை மலர்களும் மரங்களும்
வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மைபெறுவது மரஇனமாகும். பொது மரஇனம் அதன்கண் அமைந்திருக்கும் வலிமையையுடைய உள்ளீட்டைக்கொண்டே வரையறுக்கப்படுகிறது. “ திண்மையான உள்ளீட்டை பதினைந்திலிருந்து இருபதடி உயரமேனும் வளர்வதுமாகிய தாவரம் மரம்” என்று தாவரவியலார் குறிப்பிடுகிறார்.

முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்களான பிடா, காயா, குருந்து முதலியன  மரங்கள் மிகவும் உயரமற்ற குறுமரமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் முல்லைநிலத்தில் உள்ள மரங்களின் பூக்கள் தலைவனின் கார்கால வரவினை உணர்த்தும் கற்கால மரமாகவும், முல்லைநிலத்தில் காட்டின் அழகினைக் கூட்டுவதற்கும் ஆயர்கள் அம்மரத்தில் உள்ள செடிப்பூக்களைக்கொய்து தலையில் கூ10டிக்கொள்வதற்கும் பயன்பட்டுள்ளது. மேலும் மயிலினங்கள் கூடி ஆடக்கூடிய முல்லைநிலக்காடானது மரங்கள் அடர்ந்துக்காணப்படும் என்பதை,

மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் (அகம்.344:6)
என்ற தொடர் சுட்டுகிறது.

பிடவம்
பிடவம், முல்லைநிலத்தில் வரைக்கூடிய குறுமரம். அகநானூற்றுப்பாடல்களில் இதனைப் பிடா, பிடவு எனக் குறிப்பிடுகின்றனர். குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலக்காடுகளில் செழித்து வளரக்கூடிய பிடவமரத்தின் மலர்கள் கார்காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மணத்தால் பெயர்பெற்ற மரங்களும் பிடவமரமும் ஒன்றாகும். இதனுடைய பூ வெண்மை நிறத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையதாகும். வினைவயிற்சென்ற தலைவன் மீண்டு வருவதாக கூறிச்சென்ற கார்பருவத்தைத் தலைவிக்கு உணர்த்தும் மலராகவும். பாசறையில் இருக்கும் தலைவனுக்குக் கார்கால வரவை உணர்த்தித் தலைவியை நினைவூட்டும் அடையாளமாகவும் பிடவம் திகழ்கிறது. பிடவமலர் பற்றிய குறிப்பைத் தொல்காப்பியர் கூறுகையில், ‘யாமரக் கிளவியுமு பிடாவும் தளாவும் (தொல்.எழு:230)’ என்ற நூற்பா வழித்தந்துள்ளார்.

Continue Reading →

பாரதிதாசன் கவிதைகளில் இயற்கை!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?பாவேந்தர் பாரதிதாசன் அற்புதமான கவிதை வரிகளில் இயற்கை மூலம் நமது மானிட குலத்தின் வழி நடத்தலை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறார். அவரை இயற்கை கவிஞன் என அழைப்பது சாலச் சிறந்தது. தமிழ், தமிழன் என்னும் வார்த்தைகளை வானளாவிப் பிடித்து தமிழினத்தைத் தலை நிமிர்த்திய பாரதியின் தாசனாவார். அவருடைய கவிதை வரிகளில் இயற்கை பற்றி ஈங்கு இனி காண்போம்.

மயில்:-
மயில் என்னும் நமது தேசியப் பறவையின் அழகை வருணிக்க அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தோகை புனையா ஓவியம். முனதின் மகிழ்ச்சியை உச்சியில் கொண்டையாய் உயர்த்தி வைத்ததாகவும், ஆயிரம் ஆயிரம் அம்பொற்காசுகளைக் கொண்டதாகவும் ஆயரமாயிரம் அம்பிறை நிலவுகளின் சாயலைக் கொண்டதாகவும் கூறுகின்றார்.
மேலும், மரகதப் பச்சையை உருக்கி வண்ணத்தால் உனது மென்னுடல் அமைந்துள்ளது என்றும், நீயும் பெண்களும் நிகர் பிறர் பழி தூற்றும் பெண்களின் கழுத்து உன் கழுத்து என்றும் வருணித்துள்ளார்.

சிரித்தமுல்லை:-
மாலைப் பொழுதில் சோலையின் பக்கம் அவர் செல்லும் போது அவ்வேளையில் குளிர்ந்த மந்த மாருதம் வந்தது அது அவரைத் தழுவி வாசம் தந்தது. அந்த வாசத்தில் அதன் வசம் திரும்பியதாகவும், சோலை நடுவே பச்சைப்பட்டு உடை போர்த்தினார் போன்று புல் பூண்டுகள் படர்ந்து கிடக்க. அதில் குலுக்கென்று ஒரு முல்லைத் தன் முன்னால் சிரிப்பதைக் கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அணில்:-
கத்திக் கொண்டு கிளைக்குக் கிளை தாவும் அணில் கீச்சென்று அதன் காதலன் வாலை வெடுக்கென்று கடித்ததாகவும் காதலன் ஆச்சென்று சொல்லி காதலியை அணைக்க நெருங்கியதாகவும் கூறியுள்ள பாவேந்தர். மேலும் கொல்லர் உலையிலிட்டுக் காய்ச்சும் இரும்பின் இடையே நீர்த்துளி ஆகக் கலப்பது போல் கலந்திடும் இன்பங்கள் எவ்வளவு துன்பத்திலும் காதலன் அணைப்பில் காதலியும் துன்பம் மறந்து மகிழ்வாள். கூச்சல் குழப்பம் கொத்தடிமைத்தனம் செய்யும் மனிதர்கள் போல் அணில் இனத்தில் அப்படி ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வானும் முல்லையும்:-
நம் எண்ணங்களைப் போல் விரிந்துள்ள என்ன தெரியுமா?அது வான். நமது இருகண்களைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள் சேர்ந்து தரும் ஒளி வானாகும்.
இந்த வண்ணங்களைக் கருமுகிற் கூட்டங்கள் மறைத்து இடி என்னும் பாட்டையும், மின்னலையும், வானவில்லையும் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.
மழை மேகக் கூட்டங்களைக் கண்டு தோகை விரித்தாடும். வெண் முத்து போன்ற மழைத்துளி மல்லிகை கண்டு சிரிக்கும் என்பது போன்ற இயற்கை வருணனைகள் அழகுபடப் படைத்துள்ளார்.

Continue Reading →