ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு!

ஐபிசி தமிழ் இணையத்தின் இலக்கியத்திருட்டு! ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்  கவிஞர் செழியனைப்பற்றிப்பின்வருமாறு செய்தியொன்று வெளியாகியுள்ளது: “ஈழத்தின் முன்னணிக் கவிஞராக அறியப்படும் தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார். தாயக விடுதலைப் போராளியும், கவிஞரும், எழுத்தாளரும், நாடகருமான செழியன் காலமானார்! அண்மையில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று கனடாவில் காலமானார். இவர் தாய்வீடு பத்திரிகையில் எழுதி வந்தவர். அத்தோடு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’, ‘வானத்தைப் பிளந்த கதை’, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார்.தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’ என்னும் ‘தாயகம்’ பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது.” [https://news.ibctamil.com/…/poet-writer-and-playwright-seli…]

இச்செய்தியிலுள்ள “இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’, ‘வானத்தைப் பிளந்த கதை’, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை’ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர் இவராவார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்கள், பகை முரண்பாடுகளாகிய நிலையில் அவற்றிலிருந்து தப்பிய தனது அனுபவங்களை ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு’ என்னும் ‘தாயகம்’ பத்திரிகைத் தொடரில் ஆவணப்படுத்தியவர் செழியன் என்பது, குறிப்பிடத்தக்கது.” என்னும் வரிகள் எனது முகநூற் பதிவிலுள்ள வரிகள். யார் இவர்களுக்கு என் பதிவின் வரிகளை மூலம் குறிப்பிடாமல், என் அனுமதியின்றிப்பாவிக்க அனுமதியளித்தது? இதனைச்சுட்டிக்காட்டி ஐபிசி தமிழ் நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். இதுவரை அவர்களிடமிருந்து பதிலெதுவுமில்லை. எனவேதான் இந்தப்பதிவு.

Continue Reading →