தொடர் : வெற்றியின் இரகசியங்கள் (1): அத்தியாயம் ஒன்று: இன்பம் என்பது என்ன?

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமிஅ.ந.கந்தசாமி நினைவு தினம் பெப்ருவரி 14!

– அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். – பதிவுகள் –


முனனுரை
அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல்களை அறிஞர் பலர் அவ்வப்போது எழுதிப் போயிருக்கிறர்கள். வள்ளுவரின் திருக்குறள், ஒளவையார் கவிகள், காலடியார் போன்றவை இத்தகையன. இவை எக்காலத்துக்கும் பொதுவான வாழ்க்கை வழிகாட்டிகளாக விளங்குகின்றன. ஆனால் தற்காலத்துக்கென்றே இன்றைய உலகின் சூழ்நிலைகளை மனதுட் கொண்டு எழுதப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல்கள் தமிழில் குறைவு. ஆங்கிலத்திலோ இத்துறையில் ஏராளமான நூல்கள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டேல் கார்னேஜி, நெப்போலியன் ஹில், ஹேர்பேர்ட் கசன், கோர்மன் வின்சென்ட் பீல் போன்றர் இத்துறையில் மிகப் புகழ்பெற்று விளங்குகிருர்கள். இவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக்கணக்கில் உலகெங்கும் விற்கப் படுகின்றன. இந்நூல்கள் பலரது வாழ்க்கையின் போக்கையே முற்றாக மாற்றி அமைத்திருக்கின்றன. இவர்களைத் தவிர வாழ்க்கைக்கு வழிகாட்டும் இத்தகைய நூல்களைப் புகழ்பெற்ற சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் சிலரும் எழுதியுள்ளனர். இவர்களில் நாவலாசிரியர் ஆர்னேல்ட் பெனட் எழுதிய “24 மணி நேரத்தில் வாழ்வதெப்படி?’ ‘மனத்திறன்’  என்பவை முக்கியமானவை. அப்டன் சிங்க்ளெயர் எழுதிய *வாழ்க்கை நூல்’ என்ற வெளியீடும் இத்தகையதே. நோபல் இலக்கியப் பரிசு பெற்ற பேட்ரன்ட் ரசலும் இத்துறையில் மிகச் சிறந்த நூலொன்றை எழுதியுள்ளார். அதன் பெயர் “இன்பத்தை வெற்றி கொள்ளல்” என்பதாகும்.

மேலே கூறிய எழுத்தாளர்களின் நூல்களோடு எனக்கேற் பட்ட பரிச்சயம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலொன்றை நானும் எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை என்னிடத்தே தூண்டியது. அதன் பலனே இன்று உங்கள் கரங்களில் தவழும் ‘வெற் றியின் இரகசியங்கள்’ என்ற இந்நூலாகும். கல்வி, கேள்வி, அனுபவம் என்ற மூன்றுடன் சிந்தனையும் சேரும் பொழுது அறிவு பிறக்கிறது. இந்நூலிலே கான் கற்றதும் கேட்டதும் அனுபவித்ததும் என் சிந்தனைச் சூளையில் புடம் போடப்பட்டு வெளிவந்துள்ளன. ஒருவன் இவ்வுலகில் இன்ப வாழ்வு வாழுதற்கு இந்நூல் உறுதியாக வழிகாட்டும் என்பதே எனது கம்பிக்கை,

கொழும்பு-2. இலங்கை.
121, மலே வீதி
அ. ந. கந்தசாமி


வாசகருக்கு நூலாசிரியர் கடிதம்

பிரிட்டிஷ் தத்துவஞானி பேட்ரண்ட் ரசல் இதுபற்றி ஒரு அருமையான கருத்தைக் கூறியிருக்கிறர். ஒரு நூலை வாசிப்பவன் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மனதுக்கு இன்பக் குளுகுளுப்பை அளிக்கும் விஷயங்களையே எதிர்பார்க்கக் கூடாது. வாசிப்பதற்குக் கஷ்டமான, சலிப்பை ஏற்படுத்தும் பல பாகங்களையும், அவன் வாசிக்கும்படியே நேரிடும். ஆனால் நூலால் பயனடைய விரும்பும் ஒருவன் அவற்றையும் வாசித்துக் கொண்டே போக வேண்டும். ரசல் இதைப் பின்வருமாறு சொல்லுகிறார் . 'மிகச் சிறந்த நூல்கள் யாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்யும். உண்மையில் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. பைபிள், கோரான், மார்க்ஸின் "மூலதனம்’ இவை யாவற்றிலும் இப்படிப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இவையே உலகில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்! ஒரு நாவல் முதலிலிருந்து கடைசிப் பக்கம்வரை ஒருவனுக்கு எக்களிப்பை ஊட்டுமானுல் அது ஒரு சிறந்த நாவலாக இருக்க முடியுமா என்பது எனக்குச் சங்தேகம்."அன்புக்குரிய வாசகரே, வணக்கம்,

இந்நூலை வாசிக்கும் நீங்கள் இதை எங்கிருந்து வாசிக்கிறீர்களோ நானறியேன், வீட்டிலா, நூல் நிலையத்திலா, ஒடும் ரெயிலிலா, விமானத்திலா, கப்பலிலா, ‘பார்க்” பெஞ்சிலா, படுக்கை அறையிலா, கடற்கரை மணலிலா,- இவற்றில் ஓரிடத்திலாக இருக்கலாம். அல்லது என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியாத வேறு ஏதாவது இடத்திலாகவும் இருக்கலாம். அது எப்படி என்ருலும் எனது நூலை நீங்கள் வாசிக்கிறீர்கள்அது எனக்கு இன்பமளிக்கும் விஷயம்; உங்களுக்கு இன்ப மளிக்க வேண்டுமென்பதே என் ஆசை. ஆனால் ஒரு நூலை வாசிப்பது இன்பத்துக்காக மட்டுமல்ல. பிரிட்டிஷ் தத்துவஞானி பேட்ரண்ட் ரசல் இதுபற்றி ஒரு அருமையான கருத்தைக் கூறியிருக்கிறர். ஒரு நூலை வாசிப்பவன் முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை மனதுக்கு இன்பக் குளுகுளுப்பை அளிக்கும் விஷயங்களையே எதிர்பார்க்கக் கூடாது. வாசிப்பதற்குக் கஷ்டமான, சலிப்பை ஏற்படுத்தும் பல பாகங்களையும், அவன் வாசிக்கும்படியே நேரிடும். ஆனால் நூலால் பயனடைய விரும்பும் ஒருவன் அவற்றையும் வாசித்துக் கொண்டே போக வேண்டும். ரசல் இதைப் பின்வருமாறு சொல்லுகிறார் . ‘மிகச் சிறந்த நூல்கள் யாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்யும். உண்மையில் மிகச் சிறந்த நாவல்கள் எல்லாவற்றிலும் சலிப்புத்தரும் பகுதிகள் இருக்கவே செய்கின்றன. பைபிள், கோரான், மார்க்ஸின் “மூலதனம்’ இவை யாவற்றிலும் இப்படிப்பட்ட பகுதிகள் இருக்கின்றன. ஆனால் இவையே உலகில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள்! ஒரு நாவல் முதலிலிருந்து கடைசிப் பக்கம்வரை ஒருவனுக்கு எக்களிப்பை ஊட்டுமானுல் அது ஒரு சிறந்த நாவலாக இருக்க முடியுமா என்பது எனக்குச் சங்தேகம்.”

Continue Reading →