சவ்வாது மலை மலையாளிப் பழங்குடியினர் பற்றிய வரலாறு

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனித இனம் தோன்றி நாகரிக வளர்ச்சி பெற்ற அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் கலைகளும் தோன்றிவிட்டன என்று கூறலாம். நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும் இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்க்கை முறைகளையும், வரலாற்றின் குறைகளையும் நிரைகளையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்களே எனில் மிகையன்று. அவை மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் வாழ்வில் நெறிமுறைகள் ஆகியவற்றை வெளிப்படையாக காட்டும் கண்ணாடி என்று கூறலாம்.

ஆய்வு பொருள்
திருவண்ணாமலை மலை மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினாக விளங்கும் இந்து மலை மலையாளி மக்களின் வாழ்வியல் முறைகளை ஆய்வதே இவ்வாய்வின் பொருள் ஆகும்.

ஆய்வு நோக்கம்
திரு+அண்ணாமலை = திருவண்ணாமலை என்றாயிற்று. இந்த மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தொலைவில் சவ்வாது மலை உள்ளது. சந்தனம், சவ்வாது போன்ற வாசனை பொருட்கள் அங்கு விளைந்த காரணத்தால் சவ்வாது மலை என்று பெயர் பெற்றது. இந்த சவ்வாது மலையில் மலையாளி எனும் சமூகத்தினர் தங்களது வாழ்வியல் சடங்கு முறைகளை மரபு வழுவாமல் தங்கள் முன்னோர்களின் வழியே பின்பற்றி செய்து வருகின்றனர். இதுவரை எவ்வித ஆய்வும் செய்யவில்லை. இவ்வாய்வே முதன் முறையாகும். அம்மக்களின் வாழ்வில் கடைபிடிக்கும் சடங்கு முறைகளை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பிற மலைவாழ் மக்களிடமிருந்து இவ்வினத்தினர் வேறுபடும் தன்மையைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வு மூலங்கள்
இக்கட்டுரையின் ஆய்விற்காக கள ஆய்வில் சேகரித்த தரவுகளே முதன்மை ஆதாரங்களாக விளங்குகின்றன.

ஆய்வுகளம்
தென் தமிழகத்தில் பரவலாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மையமாகக் கொண்டு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியிலுள்ள இந்து மலையாளி, மலையாளி இன மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அன்றாட வாழ்க்கை முறை ஆகியவற்றைச் சேகரிக்க இக்களஆய்வு துணைபுரிந்தன.

ஆய்வு எல்லை
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சவ்வாது மலை.

Continue Reading →

சிறுகதை: கனத்த நாள்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -மயிலண்ணையைக் காணவில்லை!

இதிலேதான் படுத்திருந்தார்… விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்… இந்த இரவு நேரத்தில்?

விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவதுபோலத் தெரிகிறது. அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார் மயிலண்ணை?

நல்ல உன்னிப்பாகக் கவனித்தேன். அட, அது மயிலண்ணையில்லை… மங்கலான நிலா வெளிச்சத்தில் காற்றில் அசையும் செடிகளின் நிழல்கள் யாரோ அசைவதைப் போலத் தோற்றமளிக்கிறது!

வாசற்படியில் நாய் படுத்திருக்கிறதா என எட்டிப் பார்த்தேன். வீட்டிலிருந்து யாராவது இரவில் வெளியே இறங்கிப் போனால் நாயும் பிறகாலே போய்விடும். திரும்ப வந்து அவர்கள் படுத்த பிறகுதான் அதுவும் படியிலே படுத்துக்கொள்ளும். நாய் அங்கேதான் கிடக்கிறது. அப்படியானால் மயிலண்ணை வெளியேயும் போகவில்லை. உள்ளேயும் இல்லையென்றால் ஆளுக்கு என்ன நடந்தது?

அம்மாவை எழுப்பி விஷயத்தைச் சொல்லலாமா என எண்ணினேன். அம்மா எவ்வித அங்க அசைவுகளுமின்றி ஒரு பக்கம் சரிந்த வாக்கில்… நல்ல உறக்கம் போலிருக்கிறது. எத்தனை நாட்கள் கெட்ட உறக்கமோ?

‘தம்பி உன்னை நினைச்சு நினைச்சு ராவு ராவாய் நித்திரையில்லையடா!”

‘சும்மா கனக்க யோசிச்சு மண்டையைப் போட்டு உடைக்காதையுங்கோ… நான் அரசாங்க உத்தியோகக்காரன் எண்டு அத்தாட்சி காட்டினால் பிடிக்கமாட்டாங்கள்.”

அம்மாவின் ஆறுதலுக்காக இப்படிச் சொல்லுவேன். சிறிய அரச உத்தியோகத்துக்காக கிளிநொச்சி வந்தவன் நான். மிகுதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் கிளிநொச்சியிலே காணி வேண்டி வீடு கட்டி ஸ்திரமானவன்.

‘நல்ல கதை பேசுகிறாய்… உன்ரை வயசில எத்தனை பெடியளை.. அவங்களும் அரசாங்க உத்தியோகக்காறர்தானே… பிடிச்சுக்கொண்டு போனவங்கள்.. பிறகு என்ன கதி எண்டு இன்னும் தெரியாது!”

நடுச் சாமங்களிலும் இருள் அகலாத விடியப்புற நேரங்களிலும் தேடுதல்வேட்டை நடக்கிறது. இதனால் அம்மாவுக்கு உறக்கமில்லை. என் வயசு நல்ல பதமான வயசு! அம்மா எனக்காக கண்களில் எண்ணெயை ஊற்றிக் காத்திருப்பாள். படலைப் பக்கம் போய் ஏதாவது அசுகை தென்படுகிறதா என்று பார்த்திருப்பாள். நான் உறங்கும் பொழுதெல்லாம் அவள் விழித்திருப்பாள்.

இதனால் அம்மாவின் நித்திரையைக் குழப்ப மனம் வரவில்லை. இன்னும் சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்கலாம்… மயிலண்ணையின் கதி என்னவென்று.

மயிலண்ணை எனக்கு நெடுநாட் பழக்கமுடையவரல்ல.

Continue Reading →

மக்கள் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி: அ.ந.க! (அ.ந.க நினைவு தினம் பெப்ருவரி 14)

அறிஞர் அ.ந.கந்தசாமி

அறிஞர் அ.ந.க என்று அழைக்கப்பெறும் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. தனது நாற்பத்து நான்காவது வயதில் மறைந்து விட்ட அ.ந.க தனது குறுகிய கால வாழ்வினுள் ஆற்றிய இலக்கியப் பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு என்று அவர் ஆற்றிய இலக்கியப்பங்களிப்பு ஈழத்தமிழர்தம் இலக்கிய வரலாற்றில் நன்றியுடன் நினைவு கூரப்படும். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்த அ.ந.க இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று எழுத்தே மூச்சாக வாழ்ந்து மறைந்த படைப்பாளி. இவரது படைப்புகள் கூறப்படும் மொழியினால், சமுதாயப் பிரக்ஞை மிக்க பொருளினால், படைப்புகள் வெளிப்படுத்தும் தகவல்களினால் முக்கியத்துவம் பெறுபவை. சிந்தனையைத்தூண்டும் இவரது எழுத்தின் வீச்சு வாசகர்களின் உள்ளங்களைச் சுண்டி ஈர்க்கும் தன்மை மிக்கது.

அ.ந.க வெறும் இலக்கியவாதி மட்டுமல்லர். இலக்கியத்தைத் தான் நம்பிய சிந்தனைகளுக்கமைய வடித்த சிந்தனைச் சிற்பி. செயல்வீரர். தொழிற்சங்கங்கள் பலவற்றில் இணைந்து தொழிலாளர் நலன்களுக்காகப் போராடியவர். வீரகேசரி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான தொழ்ற்சங்கம் அமைய அ.ந.க.வே காரணம் என்பர். மார்க்சியவாதியான இவரது எழுத்துகள் பிரச்சார வாடையற்றவை. அதனாலேயே அனைவரையும் கவர்பவை. இவரது புகழ்பெற்ற ‘மனக்கண்’ நாவல் தினகரனில் வெளியானபோது வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் இவரது நெருங்கிய நண்பரும் , எழுத்தாளருமான சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலி சேவையில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது. மேடையேற்றப்பட்டபோது மிகுந்த வரவேற்பைப்பெற்ற பல தடவைகள் மீள மேடையேற்றப்பட்ட ‘மதமாற்றம்’ நாடகம் மதம் என்னும் கருத்தாடலை அங்கதச்சுவையுடன் விபரிக்கும் ஈழத்தமிழ் இலக்கியத்தில் மேடையேற்றப்பட்ட சிறந்த நாடகங்களிலொன்று. இந்நாடகத்தைப்பற்றிப் பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கன் பின்வருமாறு கூறுவார்:

“சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும். கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை. பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் “மதம், காதல்” என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம். ‘மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் – கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார், நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில். இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது” –  (  ‘எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக ‘மதமாற்றம்’ வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரையிலிருந்து).

கலாநிதி கைலாசபதியும் தான் பார்த்த தமிழ் நாடகங்களில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ் நாடகமாக இதனைக்குறிப்பிடுவார். இந்நாடகம் கொழும்பில் பல தடவைகள் மேடையேற்றப்போது பல வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்துள்ளன.

Continue Reading →

கட்டடக்கலைக் குறிப்புகள் 6: ‘குறைவில் நிறையச் (Less is more) சாதித்த கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)

லட்விக்  மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies Van der Rohe)ஜேர்மனியில் பிறந்து 1938இல் அமெரிக்கா குடிபுகுந்து அமெரிக்காவில் நவீனத்துவக்கட்டடக்கலையின் முக்கிய கட்டடக்கலைஞராக விளங்கியவர் ‘லட்விக் மீஸ் வான் டெர் ரோ’ (Ludwig Mies Van der Rohe).  இவர் தனது கட்டடக்கலைத் தொழிலை ஜேர்மனியில் ஆரம்பிப்பதற்கு முன்னர் அமெரிக்கக் கட்டடக்கலைஞரான பீட்டர் பெஹ்ரென்ஸுடன் (Behrens) பணி பழகுநராகச் சேர்ந்து தன் கட்டடக்கலைத் தொழிலினை ஆரம்பித்தவர்.

கனடியர்களுக்குக் குறிப்பாகட்த் தொரோண்டோ வாசிகளுக்கு மீஸ் வான் டெர் ரோ என்றால் உடனே ஞாபகத்துக்கு வருவது நகரின் வர்த்தக மையத்தில் உயர்ந்து நிற்கும் TD Dominiyan centre  (1964)  தான். இதுபோல் அமெரிக்க வாசிகளுக்கு, குறிப்பாக நியுயார்க் வாசிகளுக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது அவரது ‘சீகிரம்’  (Seagram Buillding) கட்டடடம்தான் (Seagram Building 1958). இவ்விரு கட்டடங்களைப் பார்த்ததுமே இவரின் தனித்தன்மை உடனே புலப்படும்.

இவர் உருக்குச் சட்டங்கள் (Steel Frames), கண்ணாடி (Glass)  போன்ற புதிய கட்டடப்பொருட்களைப் பாவிப்பதில் முன்னோடிகளிலொருவராக விளங்கினார். அதில் மிகுந்த தெளிவுடனிருந்ததுடன் தனது பாணியினை ‘ட்தஓலும், எலும்பும்’ (Skin and Bones) என்றும் அழைத்தார். தேவையற்ற கட்டட அலங்காரங்களை இவர் தவிர்த்ததுடன் , கட்டடங்களின் உள்வெளியினை (interior space)  முழுமையாக, தேவைக்கேற்ப  திரைச்சுவர்கள் (curtain walls) மூலம் பிரித்துப் பாவிக்கும் வகையில் தனது கட்டட வடிவமைப்புகளை உருவாக்கினார்.

1929இல் பார்சலோனா கண்காட்சியிலிருந்த ஜேர்மன் விளையாட்டரங்கில் பச்சைக்கண்ணாடிகளைக் கொண்டு வடிவியல் ஒழுங்கில்  பச்சைக் கண்ணாடி, பளிங்குக் கல் (marble), ‘குரோம்’ தூண்கள் (chrome columns), ஒனிக்ஸ் எனப்படும் ஒருவகை இரத்தினக் கல்,  இத்தாலி நாட்டில் காணப்படும் travertine என்னும் ஒருவகைக் கிறிஸ்டல் அல்லது படிகக் கல் ஆகியவற்றைப் பாவித்து அமைக்கப்பட்ட தளங்கள் (planes) ஆகியவற்றைப் பாவித்திருக்கின்றார் இவர்.

இவரது புகழ்மிக்க கட்டடமான சீகிரம் கட்டடம் எளிமையானதும், பொதுவாகத் தேவையற்ற (superfluous)  மிதமிஞ்சிய அலங்காரங்களால் மறைக்கப்பட்டிருக்கும் நிலை  தவிர்க்கப்பட்டு கட்டுமான உறுப்புகள் (structural elements)  வெளியில் தெரியும் வகையில் அமைந்த வானுயரக் கட்டடங்கள் உருவாவதற்குரிய புதிய சகாப்தமொன்றினைக் கட்டடக்கலை வரலாற்றில் உருவாக்கி வைத்ததெனலாம்.