செவிக்கும் வாய்க்கும்
பாலமாய் இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்
தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்
செவிக்கும் வாய்க்கும்
பாலமாய் இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்
தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்
தொல் தமிழர்கள் நிலங்களை அதன் தன்மை அடிப்படையில் மிக நுட்பமாக ஆய்ந்து ஐந்து வகையாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள். அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவைகளாகும். இதில், கடலும் கடல்சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தின்கண் வாழும் ஆண் மக்களைப் பரதவர், நுளையர், திமிலர் என்றும் பெண்மக்களைப் பரத்தியர், நுளைத்தியர், நுழைச்சியர் என்றும் அழைப்பர். இங்ஙனம் நெய்தல் நிலத் தலைமகனைக் கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம்புலம்பன், புலம்பன் பரப்பன் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியலின் முக்கிய அங்கமான குடில்கள் பற்றியப் பதிவுகளை ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
பரதவர் எனப்படும் மீனவர் குடிலைச் சுற்றி பனைமரங்கள் நிறைந்து அடர்ந்து காணப்பட்டதை,
“ஒலிகா வோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பைஎம் அழுங்கல் ஊரே” (நற்.38:8-10)
என்று குறிக்கக் காணலாம். குடிலின் அருகில் வளைந்த கருங்கழிகளும் காணப்படும். அவற்றிலே நெய்தல் கொடிகள் மலிந்து பூத்துக் குலுங்கும் தன்மையுடையது.
“கொடுங்கழி நெய்தலும்” (ஐங்.183:5)
“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன்மீன் இருங்கழி
….. ……………………………..
தண்ணம் துறைவன்” (குறுந்.9:4-7)
இவ்விடத்திலே தாழைப் புதர்கள் நிறைந்து வேலியமைத்ததைப் போன்று காணப்படும்.
“வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலை வேல்நாட்டு வேலி ஆகும்” (குறுந்:245:3-4)
இங்கு அடும்புக் கொடிகள் எங்கும் படர்ந்தும் பரவியும் இருந்ததை,
“………………….. தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை” (பதிற்.51:6-7)
என்னும் பாடலடிகள் வெளிப்படுத்துகிறது. மேலும் புன்னை மரங்களும் பூத்துக் குலுங்கும் புலிநகக்கொன்றையும் புதுமணம் வீசி நிற்கும்.
01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?
நான் கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற ஊரில் பிறந்தேன். என் தந்தை சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். என் சகோதரியும் ஆரம்பத்தில் சிங்கள மொழிப் பாடசாலைக்குத்தான் சென்றார். வாசிப்புத் துறையில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் நான் தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தேன். நான் ஆரம்பத்திலிருந்து மரீனா இல்யாஸ் என்ற பெயரில் தான் எனது ஆக்கங்களை எழுதி களப்படுத்தி வந்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் எனது அதிகமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
02. உங்களது ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
நான் ஆரம்பக் கல்வியை எங்கள் ஊரிலும் உயர் கல்வியை மாவனல்லை சாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு மலேஷியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டம் முடித்தேன். இலங்கைக்கு திரும்பி வந்ததும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றினேன். அதன் பிறகு நியூஸிலாந்தில் குடியேறிவிட்டேன்.
03. கலை இலக்கியத் துறைக்குள் எப்பொழுது, எவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டீர்கள்?
1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளிலும் எழுத ஆரம்பித்தேன்.
04. உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது?
சிறுவர் உலகம் கட்டுரைகளை தொடர்ந்து, கவிதை, சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களை 1980 களில்தான் எழுத ஆரம்பித்தேன். முதல் கவிதையும் முதல் சிறுகதையும் தினகரன் வார மஞ்சரியில்தான் பிரசுரமானது.
05. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?
எனது ஆரம்ப காலப் படைப்புக்களில் பல பாடசாலை மட்டத்தில் நடந்த கலை இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்டவை. அவை சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட போதிலும், போட்டிகளில் வெற்றி பெறுவதே என் குறிக்கோளாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிற்காலப் படைப்புக்கள் என் அனுபவங்களையும், என்னைப் பாதித்த சமூக நிகழ்வுகளின் உந்துதலாலும் பிறந்தவை.
06. எழுத்துத் துறைக்குள் நுழைந்ததைப் பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்?
அது ஒரு விபத்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஓர் அழகிய விபத்து.
07. உங்களது எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் தந்தவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
என் பெற்றோர்களே எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். திருமணத்தின் பின்பு என் கணவர் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.
08. இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?
1998 இல் இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அவை ”குமுறுகின்ற எரிமலைகள்” என்ற சிறுகதைத் தொகுதியும், ”தென்னிலங்கை முஸ்லிம்களின் இலக்கிய பங்களிப்பு” பற்றிய ஓர் ஆய்வு நூலுமாகும். சகோதரர் புன்னியாமீன் வெளியிட்ட அரும்புகள் என்ற கவிதைத் தொகுப்பில் எனது ஆரம்ப காலக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில் கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டம் – புதன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் : தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. மலேசியா குழந்தை இலக்கிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, முதல் குழந்தை எழுத்து உலகமாநாடு கோலாலம்பூரில் சமீபத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், சுப்ரபாரதிமணியன் பேசியதில் :
1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் )., 2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் 3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.
சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல. அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள் காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.
குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள் இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும். என்றார்.
புலவர் சொக்கலிங்கனார் “ இலக்கிய இன்பம் “ என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார்.
சுப்ரபாரதிமணியன் மாநாட்டில் படித்த கட்டுரை பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது.
மலேசியா குழந்தை இலக்கியம் மாநாட்டில் நான் படித்தக் கட்டுரை.
பஸ்சுக்குள் நான் ஏறி உட்காரவும், பஸ் புறப்படவும் சரியாக இருந்தது. நேரத்தைக் கவனித்தேன். அதிகாலை ஐந்து மணி. முல்லைக்குடிக்குச் சென்றடையும்போது, பகல் பத்துமணி ஆகிவிடும்.
உள்ளத்திலே ஒரு படபடப்பு.
சென்ற வாரம் ஊரிலிருந்து திரும்பும்போது, அப்பாவிடம் வழிக்குவழி சொல்லிவிட்டு வந்தேன்.
“பெரியப்பா வீட்டு ஆளுங்ககூட எந்தப் பிரச்சினையும் வேணாம்பா…..”
வந்து ஒரு வாரந்தான் ஆகின்றது. அதற்குள் நேற்று மீண்டும் தகராறு. அதிகாலை மூன்று மணிக்கு பாலுமாமா போன்பண்ணுகின்றார்.
நேற்றிரவு பதினொரு மணிபோல அப்பாவும், கூட நாலைந்து பேரும், கையில் ஆளுக்கொரு வீச்சரிவாள் எடுத்துக்கொண்டு பெரியப்பா இடத்துக்குப் போக, அங்கே அவர்களின் கையிலும் வீச்சரிவாள்….!
பெரியநங்கை ஏரிக்கரையில் விளையாடியிருக்கின்றார்கள்.
நல்லவேளை, உயிர்ச் சேதம் எதுவுமில்லை. படுகாயங்களுடன் முல்லைக்குடி ஆஸ்பத்திரியில் அனைவருமே அட்மிட்.
முல்லைக்குடியிலுள்ள “பெரிய நங்கை ஏரி” எங்களது குடும்பச் சொத்து.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, எனது அப்பாவின் சந்ததியர்கள் நிலக்கிழார்களாக இருந்திருக்கின்றார்களாம்.
முல்லைக்குடி கிராமத்தின் முக்கால்பங்கினுக்கு மேல்பட்ட நிலங்கள் எங்களுக்கே சொந்தமாக இருந்தன.
வருடந்தோறும் மாரிகாலத்தில் ஏற்படுகின்ற அடைமழை காரணமாக முல்லைக்குடி குளத்திலே ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கால் முதலில் பாதிக்கப்படுவது எங்கள் வயல்களே.
இதனைத் தடுக்கவும், கோடைகாலத்துப் பாசனத் தேவைகள் கருதியும், சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில், என் அப்பாவின் பாட்டியார் “பெரிய நங்கை” அவர்களின் காலத்தில், உருவாக்கப்பட்டதுதான் இந்த “பெரியநங்கை ஏரி”.
அவரின் ஒரே மகன்தான் எனது தாத்தா.
என் தாத்தாவுக்குத் திருமணமாகி, என் அப்பா பிறந்த பின்புதான் – தாத்தா பற்றிய ஒரு உண்மை தெரியவந்தது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி ( 08-07-2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் இரவு 7.00 மணிவரையில்…
வணக்கம்! பீல் குடும்ப ஒன்றியத்தின் (SCREEN OF PEEL Community Association) கனடாதினக் கொண்டாட்டம் எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் சனிக்கிழமைää யூன் மாதம் 30 ஆம்…
ராகவன் காலனி ஜாபர்கான்பேட்டை கிளை நூலகத்தில் தொடர் நிகழ்வு முதல் நிகழ்வினை துவக்கி வைப்பவர்: திரு. ச. இளங்கோ சந்திரகுமார் Bsc. MLIS, மாவட்ட நூலக அலுவலர்…
கல்வெட்டுகளில் நந்தா விளக்கு எரிக்க 90/96 ஆடுகள் அல்லது 32 பசுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏன் நந்தா விளக்கு எரிக்கப்பட்டது என்ற காரணம் அறியாமல் இதுவரை இருந்தது. சோழர் குடும்பத்தவர் நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்யும் பின் புலத்தை ஆராயுங்கால் அது ஒருவர் நோய் நீங்கி நலம் பெற வேண்டியோ அல்லது இறந்த பின்னர் நற்கதி எய்த வேண்டியோ ஏற்றுவதற்கு உற்றாரால் ஏற்பாடு செய்யப்படுகிறது. பின் வரும் கல்வெட்டுகளில் அது புலனாகிறது.
ஸ்வஸ்திஸ்ரீ கச்சியுங் தஞ்சையுங் கொண்ட ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருப[த்தே]ழா[வது] பல்குன்றக் கோட்டத்[து] / த[ரை]யூர் நாட்டு மாம்பா[க்க]த்து கோதண்ட மன்றாடி திருவோத்தூர் மஹாதேவர்க்கு பகல் விளக்குக்கு வைத்த சாவா [மூ]வா பேர்[ஆடு அ]ஞ்பது
விளக்கம்: இராட்டிரகூடன் 3 ஆம் கிருஷ்ணனுக்கு 27 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.966) பல்குன்றக் கோட்டத்து (போளூர் செங்கம் வட்டம்) தரையூர் நாட்டில் அமைந்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்ட மன்றாடி என்பான் திருவோத்தூர் மகாதேவர்க்கு பகல் பொழுதில் விளக்கு எரிக்க 50 இளம் ஆடுகளை கொடுத்துள்ளான். ஒரு முழு நந்தா விளக்கு எரிக்க 96 ஆடுகள் கொடுப்பர். அதில் பாதி 48 ஆகும். இவன் இரண்டு ஆடுகள் கூடுதலாக கொடுத்து பகலில் மட்டும் எரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறான். அப்படி என்றால் 50 ஆடுகள் அரை நந்தா விளக்கு கணக்கில் வருகிறது. கல்வெட்டில் நந்தா விளக்கு என்ற சொற் பதிவு இல்லை.
உத்தம சோழன் நினைவில்
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேஸரி பந்மர்க்கு யாண்டு 14 வது திருவோத்தூர் மஹாதேவர்க்கு திருநந்தா விளக் கெரிப்ப / தற்க்கு வைத்த ஆடு உத்தம சோழமாராயந் சூறையிற் போக உடையார் செம்பியன் மஹாதேவியார்க்கு விண்ண / ப்பஞ்செய்ய அருளுச்செய்ய மீண்ட ஆடு இருனூறும் உடையார் வைத்த திருநந்தா விளக்கினுக்கு சாவா மூ / வாப் பேராடு ஸந்த்ராதித்தவரை இரண்டு திருநந்தா விளக் கெரிப்பதற்க்கு பஞ்சவாரக் காலோடொக்கு நாழியால் திங்கள் / பதிநாறு நாழி உரி ஆழாக்கு நெய்[யு]ம் கோயிலுக்கே கொண்டு சென்று திருவுண்ணாழிகை யுடையார்களு
விளக்கம்: முற்றுப்பெறாத கல்வெட்டு. உத்தம மாராய சோழன் தனது 14 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.984) சூளை நோயில் கிடந்த போது நலம் வேண்டி திருவோத்தூர் மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தந்தான். நலம்பெறாமல் இறந்தும் போகிறான். விளக்கு எரிப்பது நிறுத்தப்படுகிறது. இதை அவன் தேவி செம்பியன் மாதேவிக்கு வேண்டுகோள் வைக்க அவள் மீண்டும் 200 ஆடுகள் கொடுத்து இரண்டு நந்தா விளக்கு எரிக்க ஒவ்வொரு மாதமும் 16 நாழி, ஓர் உரி அதனோடு ஓர் ஆழாக்கு நெய் கோவிலுக்கே சென்று கருவறை பொறுப்பாளர்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளாள். இவனது இன்னொரு தேவி ஆரூரன் அம்பலத்தடிகள் இவனது 15 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.985) இதே போல 25 கழஞ்சு பொன் கொடுத்து இடையன் மூலம் கருவறைக்கே நெய் கொண்டு செலுத்த ஏற்பாடு செய்கிறாள் என்பது இன்னொரு கல்வெட்டில் பதிவாகி உள்ளது. [பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி XI, திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோவில்]
“இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது. எனினும்
சிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை என்பது தவிர யாதான கடல் போல் தான் தோன்றுகிறது.
தரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள் அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும்
அலைகள் குற்றுத்தாவரங்கள் அழிபட்ட மொட்டைக்கரை. இதுவல்ல எனது கடல்”. – பிரம்மராஜன்.
இம்மாத ஆரம்பத்தில் 6 நாட்களாக (8th to 13th June 2018) இங்கு இலண்டனில் Whitechapel Gallery இல் கவிஞரும் புகைபடக் கலைஞருமான தோழர் சுகுணசபேசனின் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. “Transnational Proximities – நாடு கடந்ததும் அண்மையும்” என்ற கருத்தாடலில் ஒழுங்குபடுத்தப்பட்ட இக்கண்காட்சியில் சுவீடனை சேர்ந்த அனா லெயின் உம் தனது புகைப்படங்களையும் காட்சிப் படுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று பார்வையிடுவதற்கும், இரு கலைஞர்களுடன் சந்தித்து உரையாடுவதற்குமான ஒரு ஏற்பாட்டினை தோழர் எம். பௌசர் அவர்கள் மேற்கொண்டிருந்தார். அதன்படியே 09 ஜூன் 18, சனிகிழமை மாலை 4 மணியளவில் ஈஸ்ட்ஹாம் புகையிரத நிலைய வாசலில் சந்தித்து 12 பேரடங்கிய பேரணியாக ?? அந்நிகழ்வில் போய் கலந்து கொண்டோம்.
அழகானதும் அடக்கமானதுமான Gallery இல் அனைவரும் அமைதியாக புகைப்படங்களை ரசித்தனர். அனா லெயின் தனது புகைப்படங்களாக தமிழகத்தின் தலித்திய பெண்களின் காலடிகளை மட்டும் காட்சிப்படுத்தியிருந்தார். அழகற்றதும் அழுக்கு நிறைந்ததுமான வடுக்கள் நிறையப் பெற்ற காலடிகள் தலித்தியப் பெண்களின் ஆயிரமாண்டு கால அடக்குமுறைகளையும் சாதீயக் கொடுமைகளையும் புகைப்படங்களாக பேசி நின்றன.
சுகுணசபேசன் எமது வலி மிகுந்த சமூகத்தின் துயர் படிந்த கதைகளின் எச்சங்களை The last walk to the beach என்ற தலைப்பில் புகைப்படங்களாக பதிவு செய்திருந்தார். 2009 இல் ஒரு மானிட அவலமாக முற்றுப் பெற்ற எமது இனப்படுகொலையின் இன்னமும் மீளாத துயரங்களை, 2016 இல் அங்கு சென்ற அவர் அதனை படமாக்கியிருந்தார், அதனையே அவர் இங்கு காட்சிப்படுத்தியிருந்தார். ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. துயரங்களின் வடுக்கள் இன்னும் அகலவில்லை. இடுபாடுகளின் சிதைவுகள் இன்னமும் அகற்றப் பட வில்லை. மீள்கட்டுமானம் இன்னும் முறையே நடந்து முடிக்கப்படவில்லை. இவை பற்றியே இவரது படங்கள் எம்முடன் உரையாடி நின்றன. முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதையின் இன்றைய தோற்றமானது இங்குதான் அனைத்துமே நடந்தது என்பது போல் மௌனமாக காட்சியளித்தது. இவையனைத்துக்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அவர் எதேச்சையாக சந்தித்த ஒரு சிறுவனின் Negative தோற்றத்தில் அமைக்கப்பட்ட புகைப்படமானது ஒரு அசாதாரணமான அழகியலைக் கொண்டிருந்தது. ஒரு முகமறியாச் சிறுவனாக (A unknown Boy ) அந்தக் கடற்கரையில் அவர் சந்தித்துக் கொண்ட அந்தச் சிறுவனின் தோற்றமானது முடிவற்ற துயரங்களின் பதிவுறாத சாட்சியங்களில் ஒன்றாக எமக்குக் காட்சியளித்தது.