நூல் அறிமுகம்: கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

நூல் அறிமுகம்: கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் எஸ். பாயிஸா அலிஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.

விடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வைக்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.

அக்கறையின் வெகு தொலைவில்
சிறு புள்ளியாய் தெரிகிறது
விடியல்

பேயுலவும் கரிய இரவாய்
இருண்டு கிடக்கிறது
மா கடல்

Continue Reading →

ஆய்வு: அகநானூறும் பாலைத்திணையும்

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

அகநானூறு
சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:

1.களிற்றியானை நிரை (1 – 20)
2.மணிமிடை பவளம் (121 – 300)
3.நித்திலக்கோவை (301 – 400)

என்பனவாகும். இப்பகுப்பினை, 

“களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு 
அத்தகு பண்பின் முத்திறமாக 
முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை”

என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது.

இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.

Continue Reading →

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
திருமணம் என்பது பழங்காலந் தொட்டே இருந்து வருகின்ற ஒன்று. இத்திருமணம் பற்றித் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் களவியல், கற்பியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் தலைவன் தலைவிக்குரிய ஒப்புமைகளையும் ஒப்பில்லா குணங்களையும் தொல்காப்பியர்கூறியுள்ளார். அவற்றில் தலைமக்களுக்குரிய ஆகாத குணங்களை அகநானூற்றோடு ஒப்பிட்டு ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் உணர்த்தும் தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்’ எனும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

தலைமக்களுக்கு ஆகாத குணங்கள்
இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பன்னிரெண்டு தன்மைகளையும் தொல்காப்பியம் கூறியுள்ளது. தற்பெருமை, கொடுமை, தன்னை வியத்தல், புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக் கூடாது, மறதி, ஒருவரையொருவர்ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பன்னிரெண்டு தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்றார். இதனை, 

“நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறைப்போ டொப்புமை
என்றிவை யின்மை என்மனார்புலவர்.” (நூ.26)

எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். மேலும் இதனைக் குறித்து தமிழண்ணல் அவர்கள், “தொல்காப்பியர் பன்னிரண்டு ஆகாப் பண்புகளைக் கூறி, அவற்றைப் போக்க வேண்டும் என்று கூறுகிறார். திருமணத்திற்கு முன் இத்தகைய தீய குணங்கள் இல்லாதவர்களாகப் பார்த்து மணம் பேச வேண்டும். திருமணமாகிவிட்டாலோ, இத்தீய குணங்களை அறிவுரை கூறித் திருத்த வேண்டும். இன்றேல் இல்லறம் இனிதாக அமையாது.” (தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், ப.37) எனக் கூறியுள்ளார். அதாவது மேற்கண்ட குணங்கள் இல்லாதவர்களைப் பார்த்து திருமணம் செய்ய வேண்டும் இல்லையேல் திருமணம் என்பது இனிமை பயப்பதற்கு பதிலாக துன்பத்தை – துயரத்தைப் பயப்பதாகவே அமையும் என்பது அவர்தம் கருத்தாக உள்ளது.

நிம்பிரி
நிம்பிரியாவது பொறாமை, பிறர்நல்வாழ்வு கண்டு பொறுக்க முடியாத சிறுமை. இதன் தோற்றத்தினை, “இளையோர்பருவத்தில் G+ப்பின் மாற்றங்கள் ஏற்பட்டு விட்ட பின்னர் எதிர்பாலினர் பற்றிய அக்கரை வளரும் போது பொறாமைக் குணங்களும் தோன்றுகின்றன.” (இளையோர்உளவியல், தொகுதி -2, ப.88) மேலும், “பொறாமை என்பது சினம், அச்சம், அன்பு, இழப்பு ஆகியவைகள் இணைந்த மனவெழுச்சியாகும்.” (மேலது, ப.87) என அ. அப்துல்கரீம் கூறியுள்ளார். இது குறித்தப் பாடல் அகநானூற்றில் காணப்படவில்லை.

Continue Reading →