படித்தோம் சொல்கின்றோம்: “தங்கத்தாரகை” – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200 ஆண்டு கால வரலாறு! வடக்கின் கல்விப்பாரம்பரியத்தை ஆவணப்படுத்தியிருக்கும் முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் படைப்பிலக்கியவாதியுமாவார்!

அதிபர் கதிர். பாலசுந்தரம் கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான பழந்தமிழ் இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், என்பவற்றின் ஊடாக தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சியில் தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆசியாக்கண்டத்திலேயே முதல் முதலில் தோன்றிய இருபாலாரும் கல்வி என்னும் செல்வத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தமிழ் சமுதாயம் அறிவார்ந்த தளத்தில் நடப்பதற்கு வெளிச்சம் வழங்கிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்த இலங்கையின் வடபுலத்தின் தெல்லிப்பழையில் தோன்றிய யூனியன் கல்லூரியின் வரலாற்று ஆவணம் தங்கத்தாரகை எம்மவரின் வாழ்க்கைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவே அமைந்துள்ளது. மைல் கல் எனக்குறிப்பிடுவதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இதனையும் நாம் கடந்துசெல்லவேண்டும். மற்றும் சில மைல்கற்களை கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. “எல்லாம் கடந்துபோகும்” என்பது வாழ்வின் தத்துவம். கடந்த அரைநூற்றாண்டு காலமாக படைப்பிலக்கியம், ஊடகம், சமூகப்பணி முதலான மூன்று தளங்களில் இயங்கிவருவதனால் இந்த மூன்று தளத்திலும் நின்றுதான் இந்த ஆவணத்தை அவதானிக்கின்றேன். இரண்டு நூற்றாண்டுகளையும் கடந்து இயங்கிக்கொண்டிருக்கும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை இதுவரையில் நான் பார்க்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இதுவரையில் எனக்கு கிட்டவில்லை. அதே பிரதேசத்திலிருக்கும் மகாஜனாக்கல்லூரிக்கும் ஒரே ஒரு தடவைதான் சென்றுள்ளேன். அங்கு பணியாற்றிய எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூலின் வெளியீட்டுவிழா 1984 இல் அங்கு அதிபர் த. சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தபோது உரையாற்றச்சென்றேன். இந்தக்கல்லூரிக்களுக்கும் எனக்கும் இருந்த மற்றும் ஒரு தொடர்பு நாம் அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக இயக்கும் இலங்கை மாணவர் கல்விநிதியத்தின் ஊடாக இக்கல்லூரிகளில் பயின்ற சில மாணவர்களுக்கும் உதவியிருக்கின்றோம்.

இந்த இரண்டு கல்லூரிகளுடனும் எனக்குள்ள மற்றும் ஒரு முக்கியமான உறவு: இங்கு பயின்றவர்கள், இங்கு அதிபர்களாக, ஆசிரியர்களாக இருந்த பலர் எனது நீண்ட கால இலக்கிய நண்பர்கள். இன்றும் தொடர்பிலிருப்பவர்கள். இரண்டு கல்லூரிகளினதும் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுவாரஸ்யமான நிழல் யுத்தங்களையும் கேள்வி ஞானத்தில் அறிந்துவைத்திருக்கின்றேன். இந்தப்பின்னணிகளுடன்தான் எனக்கு கிடைத்திருக்கும் தங்கத்தாரகை பற்றிய எனது ரஸனைக்குறிப்புகளை பதிவுசெய்கின்றேன். எமது தமிழ் மக்கள் சந்தித்த ஐந்து காலகட்டங்களையும் இந்த ஆவணம் பேசுகிறது. சுதந்திரத்திற்கு முன்னரும் அதற்கு பின்னர் வந்த காலமும், போர்க்காலமும், அதற்குப்பிற்பட்ட சமகாலமும், மக்கள் அந்நியம் புலம் பெயர்ந்த காலமும் அதன் பின்னர் தொடரும் காலமும் சித்திரிக்கப்படுகிறது. 425 பங்கங்களில் இக்காலங்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியில் அவற்றை ஆவணப்படுத்தியுமிருக்கிறது. இதனைத்தொகுத்திருக்கும் பாரிய பணியை மேற்கொண்டிருப்பவர் யூனியன் கல்லூரியின் முன்னாள் அதிபர், எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் பிரக்ஞையுள்ளவர். 90 வயதிலும் அயராது இயங்கிக்கொண்டிருப்பவர். இதுவரையில் நான் நேரில் பார்த்திருக்காத பேசியுமிருக்காத மின்னஞ்சலில் மாத்திரம் தொடர்பில் இருக்கும் நண்பர், மதிப்பிற்குரிய கதிர். பாலசுந்தரம் அவர்கள். அவரது படைப்பிலக்கியங்களின் வரிசையில் எழுதியிருக்கும் நாவல்கள், தமிழ் அரசியல் தலைவர்களின் வரிசையில் எழுதியிருக்கும் நூல்களையும் ஏற்கனவே படித்திருக்கின்றேன். சிலவற்றைப்பற்றி எனது அவதானக்குறிப்புகளும் எழுதியிருக்கின்றேன்.

Continue Reading →

ஆய்வு: புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலகில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தாங்கள் வாழ்கின்ற புவியியற் சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சுற்றிலு காணப்படுகின்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றுள் மனிதனின் அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் உணவே முதன்மையாக இருக்கிறது. இக்கட்டுரையானது உணவுகளை உண்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்த கலன்களைக் குறித்ததாக அமைகிறது.

பண்பாடு
பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை ஆகும் என்கிறார் சீ. பக்தவத்சல பாரதி (1980: 160). மனிதன் சமூக உறுப்பினன் என்ற நிலையில் அவன் பயன்படுத்தும் பொருட்கள் அவை பற்றிய கருத்தாக்கங்கள் இவைகளின் கூட்டுச் சேர்க்கைப் பண்பாடாகும். இது புவியியல் பரப்பு, நாடு, மொழி, இனம் போன்றவற்றிற்கேற்றபடி வழங்கும் இயல்புடையது.பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்ற சொல்லிலிருந்து உருவானது எனலாம். ஏனெனில் பண்பாடு என்ற சொல் மனிதனோடு மட்டுமே தொடர்புடையது. இது பிற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை என்று பக்தவத்சலபாரதி (1980:160) குறிப்பிடுகிறார்.

பண்பாட்டினை மானிடவியலார் இரண்டாக வகைப்படுத்துகின்றனர். அவை, 1. பொருள்சார் பண்பாடு , 2. பொருள்சாராப் பண்பாடு என்பனவாகும். மக்கள் தங்களின் தேவைகளுக்காகச் செய்து கொள்ளும் அனைத்து வகையானப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள்சாராப் பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக்கூறுகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் புழங்குபொருட்கள் அனைத்தும் பொருள்சார் பண்பாட்டினை அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன.

புழங்கு பொருள்
புழங்கு என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழியகராதி (1990:1047) வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் (1982:2793) கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகின்றன. எனவே புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்தி வந்த,வருகின்ற பொருட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தொன்று தொட்டே செய்துவருகின்ற கைவினைப் பொருட்கள் யாவும் புழங்குபொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன. லூர்து(1997:297), இயற்கை வளங்களைப்பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும்  மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள்சார் பண்பாடு என்றும்; மானுடக்குழு ஒன்றின் தொழில் நுட்பத்திறனும் புழங்குபொருள் சார்ந்தகலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்களும் புழங்குபொருள்பண்பாட்டில் அடங்குகின்றன என்றும் குறிப்பிடுகின்றார்.

புழங்கு பொருட்கள் குறித்து ஆய்வுச் செய்த ரெஜித்குமார் (2009: 2)  மூன்றாக வகைப்படுத்தி கூறியுள்ளார். அவை, 1. உணவு சார்ந்த புழங்குபொருட்கள், 2. வீட்டுஉபயோகப் புழங்குபொருட்கள், 3. தொழிற்கள புழங்குபொருட்கள்என்பனவாகும்.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்: ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல் – அறிவியல் தமிழ் 2

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“கம்பராமாயணத்தில் மேலாண்மை” – பேராசிரியர் சு.பசுபதி
“தமிழியல் பாரம்பரியத்தில் அறிவியல் தடங்கள்” – கலாசூரி ஆ.சிவநேசச்செல்வன் MA
“திருமந்திரத்தில் அறிவியல் தடங்கள்” – வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

ஐயந்தெளிதல் அரங்கு

“புத்தகம் புதிது” – முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ்

நாள்: 30-06-2018
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough, M1B 5k9  (Dr. Lambotharan’s Clinic – Basement)

Continue Reading →

கவிதை: பாரைவிட்டுப் போனதேனோ !

எழுத்தாளர் பாலகுமாரன்

– அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுக் கவிதை. –

குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்
எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்
எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ
அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்
வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி
வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை
அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்
வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்
வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

Continue Reading →