கவிதை: ஆறாம் விரல்

- ருக்மணி -

செவிக்கும் வாய்க்கும்
பாலமாய்  இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்

தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்

Continue Reading →

ஆய்வு: நெய்தல் திணையும் பரதவர் குடிலும்

தொல் தமிழர்கள் நிலங்களை அதன் தன்மை அடிப்படையில் மிக நுட்பமாக ஆ- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -ய்ந்து ஐந்து வகையாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள். அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவைகளாகும். இதில், கடலும் கடல்சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தின்கண் வாழும் ஆண் மக்களைப் பரதவர், நுளையர், திமிலர் என்றும் பெண்மக்களைப் பரத்தியர், நுளைத்தியர், நுழைச்சியர் என்றும் அழைப்பர். இங்ஙனம் நெய்தல் நிலத் தலைமகனைக் கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம்புலம்பன், புலம்பன் பரப்பன் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியலின் முக்கிய அங்கமான குடில்கள் பற்றியப் பதிவுகளை ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

பரதவர் எனப்படும் மீனவர் குடிலைச் சுற்றி பனைமரங்கள் நிறைந்து அடர்ந்து காணப்பட்டதை,

“ஒலிகா வோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பைஎம் அழுங்கல் ஊரே” (நற்.38:8-10)

என்று குறிக்கக் காணலாம். குடிலின் அருகில் வளைந்த கருங்கழிகளும் காணப்படும். அவற்றிலே நெய்தல் கொடிகள் மலிந்து பூத்துக் குலுங்கும் தன்மையுடையது.

“கொடுங்கழி நெய்தலும்” (ஐங்.183:5)

“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன்மீன் இருங்கழி
….. ……………………………..
தண்ணம் துறைவன்”    (குறுந்.9:4-7)

இவ்விடத்திலே தாழைப் புதர்கள் நிறைந்து வேலியமைத்ததைப் போன்று காணப்படும்.

“வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலை வேல்நாட்டு வேலி ஆகும்” (குறுந்:245:3-4)

இங்கு அடும்புக் கொடிகள் எங்கும் படர்ந்தும் பரவியும் இருந்ததை,

“………………….. தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை” (பதிற்.51:6-7)

என்னும் பாடலடிகள் வெளிப்படுத்துகிறது. மேலும் புன்னை மரங்களும் பூத்துக் குலுங்கும் புலிநகக்கொன்றையும் புதுமணம் வீசி நிற்கும்.

Continue Reading →

மரீனா இல்யாஸ் ஷாபி அவர்களுடனான நேர்காணல்! – நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத் –

மரீனா இல்யாஸ் ஷாபி01. உங்களைப் பற்றிய அறிமுகத்தை (பிறப்பிடம், குடும்பப் பின்னணி உட்பட) எமது வாசகர்களுக்காக கூறுங்கள்?

நான்  கண்டி மாவட்டத்தில் உள்ள தெஹிதெனிய மடிகே என்ற ஊரில் பிறந்தேன். என் தந்தை சிங்கள மொழி மூலம் கல்வி கற்றவர். என் சகோதரியும் ஆரம்பத்தில் சிங்கள மொழிப் பாடசாலைக்குத்தான் சென்றார். வாசிப்புத் துறையில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் நான் தமிழ் இலக்கியத்தில்  ஈடுபாடு காட்ட ஆரம்பித்தேன். நான் ஆரம்பத்திலிருந்து மரீனா இல்யாஸ் என்ற பெயரில் தான் எனது ஆக்கங்களை எழுதி களப்படுத்தி வந்தேன். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் எனது அதிகமான நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

02. உங்களது ஆரம்பக் கல்வி, பல்கலைக்கழக வாழ்வு, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் ஆரம்பக் கல்வியை எங்கள் ஊரிலும் உயர் கல்வியை மாவனல்லை சாஹிராக் கல்லூரியிலும் கற்றேன். பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு மலேஷியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் முதுமானிப் பட்டம் முடித்தேன். இலங்கைக்கு திரும்பி வந்ததும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றினேன். அதன் பிறகு நியூஸிலாந்தில் குடியேறிவிட்டேன்.

03. கலை இலக்கியத் துறைக்குள் எப்பொழுது, எவ்வாறான சூழலில் உள்வாங்கப்பட்டீர்கள்?

1980 ஆம் ஆண்டில் தினகரன் சிறுவர் உலகம் பகுதியில்தான் எனது முதலாவது ஆக்கம் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளிலும் எழுத ஆரம்பித்தேன்.

04. உங்களது முதலாவது ஆக்கம் எதில், எப்போது வெளியானது?

சிறுவர் உலகம் கட்டுரைகளை தொடர்ந்து, கவிதை, சிறுகதை, நாடகம்  போன்ற இலக்கிய வடிவங்களை 1980 களில்தான் எழுத ஆரம்பித்தேன். முதல் கவிதையும் முதல் சிறுகதையும் தினகரன் வார மஞ்சரியில்தான் பிரசுரமானது.

05. கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை எப்படியான சந்தர்ப்பங்களில் எழுதுகின்றீர்கள்?

எனது ஆரம்ப காலப் படைப்புக்களில் பல பாடசாலை மட்டத்தில் நடந்த கலை இலக்கியப் போட்டிகளுக்காக எழுதப்பட்டவை. அவை சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட போதிலும், போட்டிகளில் வெற்றி பெறுவதே என் குறிக்கோளாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிற்காலப் படைப்புக்கள் என் அனுபவங்களையும்,  என்னைப் பாதித்த சமூக நிகழ்வுகளின் உந்துதலாலும் பிறந்தவை.

06. எழுத்துத் துறைக்குள் நுழைந்ததைப் பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்?

அது ஒரு விபத்து என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஓர் அழகிய விபத்து.

07. உங்களது எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கம் தந்தவர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

என்  பெற்றோர்களே எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தனர். திருமணத்தின் பின்பு என் கணவர் எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

08. இதுவரை வெளிவந்துள்ள உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா?

1998 இல் இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறேன். அவை ”குமுறுகின்ற எரிமலைகள்” என்ற சிறுகதைத் தொகுதியும், ”தென்னிலங்கை முஸ்லிம்களின் இலக்கிய பங்களிப்பு” பற்றிய ஓர் ஆய்வு நூலுமாகும். சகோதரர் புன்னியாமீன் வெளியிட்ட அரும்புகள் என்ற கவிதைத் தொகுப்பில் எனது ஆரம்ப காலக் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

Continue Reading →