Siva Ananthan <atpu555@yahoo.co.uk> Today at 9:59 AM
அன்புள்ள கிரிதரன், உங்கள் பதிலுக்கு நன்றி. எனது மடலில் என் எண்ண ஓட்டத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தவில்லை என்று உணர்கிறேன். கலவரம் என்ற சொல்லுள் சாதிக்கலவரம், வகுப்புக்கலவரம், சமூகக் கலவரம், இனக்கலவரம் இப்படிப் பல்வேறு வகைகள் அடக்கம். இனக்கலவரம் என்ற சொல்லுள் இருசமூகத்தவர் ஒருவரையொருவர் தாக்குதலும் (உ+ம்: சிலவருடங்களுக்குமுன் பாக்கிஸ்தானியரும் இந்தியரும் இங்கிலாந்தில் சண்டையிட்டுக்கொண்டனர்),ஒரு சமூகத்தவரை இன்னொரு சமூகத்தவர் தாக்குதலும் ஆகிய இரு வகைகளும் அடக்கம். எமக்கு நடந்தது இரண்டாவது வகையானது என்பது தெளிவு. அதிலும் ‘கலவரம்’ என்ற சொல் அதன் கொடூரத்தை, 1000 க்கு மேற்ற்பட்ட கொலைகளைப் புலப்படுத்தவில்லை.
எனது ஆதங்கம் என்னவெனில், எவ்வாறு கலவரம் என்ற சொல் எமக்கு நடந்த அவலத்தைக் குறிக்கப் போதாத வார்த்தையோ, அதுபோலவே ‘இனக்கலவரம்’ என்ற சொல்லும் போதாது என்பதே. தவறானது அல்ல. போதாது. ஏனெனில், அச்சொல், இன்னொரு கருத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படக்கூடியது. அதாவது – இரு சமூகங்கள் ஒருவரையொருவர் தாக்குதல். அதனால், ‘தமிழினப் படுகொலை’ அல்லது ‘தமிழர் படுகொலை’ என்பது போன்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது என்ன நடந்தது என்பது விள்ங்கப்படுத்தத் தேவையில்லாமல் புரிகின்றது. குறிப்பாக, இது பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கு. அ-து, இது சிங்களவ்ர்களுக்கும் தமிழருக்கும் இடையே நடந்த ‘க்லவரம்’ அல்ல. சிங்களக் காடையகர்களால் தமிழர்கள் கொலையும் கொள்ளையும் செய்யப்பட்ட நிகழ்வு.