தமிழில் கிடைத்துள்ள இலக்கியங்களில் காலப்பழமை வாய்ந்தது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களின் பின் எல்லையை கி.பி. 300 எனக்கூறுவா். சங்க இலக்கியங்களுக்குப் பின்னா் தோன்றிய நூல்களிலும் செய்திகள் பேசப்படுகின்றன. தமிழ் இலக்கியங்கள் வீரக்கற்கள் எழுப்பப்பட்ட இடங்களையும் அக்கற்களில் வீரரது உருவம், பெயா், பெருமை ஆகியவற்றைப் பொறித்து வைத்திருந்த தன்மைகளையும் அக்கற்களை வழிபட்ட தன்மைகளையும் பெரும்பாலும் காட்டுகின்றன.
இலக்கிய நூல்கள்
தெலுங்கு மொழியில் இலக்கிய வளா்ச்சி பிற்பட்ட காலங்களில்தான் ஏற்பட்டது. இருப்பினும் கி.பி. 11 – ம் நூற்றாண்டிற்குப் பின்பு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. கி.பி. 800 க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புலவா்களைப் பற்றியக் கருத்துகளும் உண்டும்.
முதல் கல்வெட்டு
கி.பி. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுகளில் தான் தெலுங்கு மொழியினை முதன் முதலாகக் காணமுடிகிறது. கடப்பா மாவட்டத்திலுள்ள கலமல்லா என்னும் இடத்தில் கண்டெடுக்கபட்ட கல்வெட்டே முதல் கல்வெட்டாகும். கி.பி 848 – ல் அதங்கி என்ற இடத்தில் கீழைச்சாளுக்கியா்களின் தலைவா்களான பாண்டுரங்காவில் அமைந்த முதல் தடவையாகத் தெலுங்கு கவிதை பொறிக்கப்பட்டுள்ளது.
வீரக்கற்கள் நடப்பட்ட இடம்
வீரக்கற்கள் பாலை நில வழிகளில் உள்ளுரிலும் நடப்பட்டமையை இலக்கியங்கள் குறிக்கின்றன. உள்ளுரில் கற்கள் நடப்பட்டதற்கான சான்றுகள் குறைவாக இருக்க பாலை நில வழிகளில் இறந்தவா்கள் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுக்கற்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 1
பாலைநில வழிகளில் வீரக்கற்கள்
பாலை நில வழிப்போவோரைக் கொன்று பொருள் பறிப்பது மரவா்களது பழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடுபோல் செய்வா். இதனை “பதுக்கை“ என சங்க இலக்கியப் பாடல்கள் பகா்கின்றன. இத்தகு பதுக்கைகளின் அச்சமூட்டும் வருணனையை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.