வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ?

வாசிப்பும், யோசிப்பும் 294 : முன்னுரை, முகவுரை மற்றும் அணிந்துரை ? எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் தனது ‘புகையில் தெரியும் முகம்’ நாவலுக்கான நூலின் ஆரம்பத்தில் கதையின் கதை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அதனைக் குறிப்பிடுகையில் முகவுரை, முன்னுரை போன்ற பதங்களப் பாவித்திருப்பார். அதிலவர் பின்வருமாறு கூறுவார்:

“அடுத்தபடியாக இந்த முகவுரையை ஏன் எழுதினீர் என்று கேட்கின்றீர்களா? சரி அதையும் சொல்லி விடுகிறேன்” என்று கூறியதுடன் ” முன்னுரையை நானேதான் எழுதவேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் – அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகின்றேன்” என்றும் கூறுவார்.

இது பற்றிய தனது முகநூல் எதிர்வினையில் எழுத்தாளர் மைக்கல் கொலின் (மகுடம் இதழாசிரியர்) பின்வருமாறு கேல்வியொன்றினை எழுதியிருப்பார்:

“நூலாசிரியர் தனது நூலுக்கு எழுதும் உரை முன்னுரையே.ஏனையோர் எழுதுவது அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை, அ.செ.மு.தனது நூலுக்கு தான் முன்னுரை எழுதியதில் என்ன புதுமை உண்டு.”

இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் முன்னுரை, அணிந்துரை மற்றும் முகவுரை விடயத்தில் பலருக்கும் ஒருவிதக் குழப்பமிருப்பதை அறிய முடிந்தது. இது பற்றிச் சிறிது சிந்தித்துப்பார்த்தேன். அ.செ.மு அவர்கள் முன்னுரையையும் முகவரையையும் ஒன்றாகக் கருதுவதாகத்தான் அவரது ‘கதையின் கதை’ என்னும் கூற்றிலிருந்து முடிவு செய்யலாமா?

ஆக்ஸ்போர்ட்டின் ‘ஆங்கில -ஆங்கில -தமிழ்’ அகராதியில் பின்வருமாறு Preface என்னும் சொல்லை விபரித்திருப்பார்கள்:

“ஒரு நூல் இன்னது பற்றியது அல்லது இன்ன காரணத்துக்காக எழுதப்பட்டது என்பதை விளக்கும் அதன் எழுத்து வடிவிலான முன்னுரை , முகப்புரை”

முகவரை பற்றி க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதியில் ” உரிய விபரங்களைத் தந்து நூலை அறிமுகப்படுத்தி நூலாசிரியரே எழுதும் கட்டுரை. ஆசிரியர் முன்னுரை”. மேற்படி அகராதியில் முன்னுரை பற்றி “நூலாசிரியரால் நூல் குறித்த கருத்துகள அடங்கிய அல்லது நூலுக்கு அறிமுகமாக அமையும் கட்டுரை preface” என்று கூறப்பட்டிருக்கும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 293 : ஒரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ மற்றும் அ.செ.முருகானந்தனின் ‘புகையில் தெரிந்த முகம்’ பற்றி…..

அ.செ.முருகானந்தன்Orhan Pamukஓரான் பாமுக் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி நாட்டவர். அவரது புகழ் பெற்ற நாவலான ‘எனது நிறம் சிவப்பு’ (My Name is Red) நாவலுக்காக அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. அதில் இறந்தவர்களே நடந்த கொலைகள் எவ்விதம் நிகழ்ந்தன என்பதை விளக்குவார்கள். பின் நவீனத்துவப்படைப்புகளில் ஒன்றாக மேற்படி நாவல் கொண்டாடப்படுகின்றது. ஆனால் இது போன்ற ஆனால் அளவில் சிறிய நாவலை இலங்கைத்தமிழ் எழுத்தாளர் ஒருவர் ‘ஐம்பதுகளின் ஆரம்பத்திலேயே எழுதியுள்ளார்.

‘சுதந்திரன்’ வாரவெளியீட்டில் தொடராக வெளியான நாவல் அது. பின்னர் நவலட்சுமி புத்தகசாலை ( 136 செட்டியார் தெரு, கொழும்பு ) பதிப்பகத்தினால் 1950இல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நூலுக்கு நூலாசிரியர் சுவையானதொரு முன்னுரையினையும் எழுதியுள்ளார். அம்முன்னுரையின் முடிவில் அவர் ” முன்னுரையை நானேதான் எழுத வேண்டுமென்று நியதி இருக்கிறதா என்று வாசகர்கள் கேட்பார்களானால் – அதற்கு சுருக்கமாகவே பதிலளித்துவிடுகிறேன். புத்தகத்தை எழுதியவரே அதற்கு முன்னுரை எழுதக்கூடாது என்று நியதி் இருக்கிறதா? 🙂 இன்னும் சொல்லப்போனால் நான் எழுதிய புத்தகத்திற்கு முன்னுரை எழுத என்னைவிட வேறு யார் அதிகமாக ஆசை கொள்ளப்போகிறார்கள்?”

சரி யார் அவ்வெழுத்தாளர்? அப்படைப்பின் பெயர் என்ன? என்று கேட்கின்றீர்களா? அதற்கு முன் மேலும் சில வார்த்தைகள்..

இவ்வெழுத்தாளர் யாழ்ப்பாணத்தமிழர்களின் வாழ்வினை மண் வாசனை கமழ, சுவையுடன் எழுதுவதில் வல்லவர். இக்கதையின் கதை சொல்லியான ராமலிங்கம் சுருட்டொன்றைப் பற்ற வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கின்றார். புகையை வட்ட வட்ட வளையங்களாக விட்டுக்கொண்டிருக்கின்றார். அச்சமயம் அச்சுருட்டுப் புகையினூடு அழகிய முகமொன்று தெரிகின்றது. அந்த முகத்துக்குரியவள் வேறு யாருமல்லள். புகையிலை வியாபாரி பொன்னுச்சாமியின் மகளான காந்திமதியே் அவள்.

காந்திமதியையும் அவளது அத்தானான காதலன் முருகேசனையும் பொன்னுச்சாமி அவர்களது காதலை எதிர்த்ததனால் கொன்று விடுகின்றார். அதன் மேல் தென்னம்பிள்ளையொன்றையும் வளர்த்து விடுகின்றார். அவ்விதம் அவரால் கொல்லப்பட்ட அவரது மகளான காந்திமதியும், அவளது காதலான முருகேசனுமே கதை சொல்லியான ராமலிங்கத்துக்குத் தங்களது கதையினைக் கூறுகின்றார்கள்.

Continue Reading →