வரலாற்றுச் சின்னங்கள்: தொண்டைமானாறு கரும்பாவளியில் சித்தர்களின் சமாதிகள்

வரலாற்றுச் சின்னங்கள்: தொண்டைமானாறு கரும்பாவளியில் சித்தர்களின் சமாதிகள்தேடலில் இணைந்தவர்கள் : சு. குணேஸ்வரன் (ஆசிரியர்), செல்லத்துரை சுதர்சன்(விரிவுரையாளர்), வே. பவதாரணன்(தனு வெளியீட்டகம்)

சித்தர்களின் சமாதிகளையும் கரும்பாவளிக் கேணிக்கு அருகில் மேலும் ஒரு ஆவுரஞ்சிக்கல்லையும் அண்மையில் நண்பர்கள் மூவர் தேடிக் கண்டுகொண்டோம். கடந்த 07.08.2018 அன்று  சு. குணேஸ்வரன், செல்லத்துரை சுதர்சன், வே. பவதாரணன், ஆகிய மூவரும் வரலாற்றுத் தொன்மை மிகுந்த கரும்பாவளிப் பிரதேசத்திற்கு ஒரு தேடலுக்காகச் சென்றோம்.

பண்பாட்டுப் பாரம்பரியமும் வரலாற்றுத் தொன்மையும் மிகுந்த தொண்டைமானாறு பிரதேசத்தில் அண்மையில் கரும்பாவளி கேணி மற்றும் ஆவுரஞ்சிக் கல் தொடர்பான செய்திகளும் கரும்பாவளி என்ற ஆவணப்படம் வெளியிடப்பட்ட செய்தியும் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.

கடந்த வாரம் கரும்பாவளியில் குப்பைகளுக்கு மத்தியிலும் பற்றைகளுக்கு மத்தியிலும் அமிழ்ந்து போயிருக்கும் மேலும் பல வரலாற்றுத் தொன்மை வாய்ந்த எச்சங்கள் இருந்திருக்கின்றன என்ற மூத்தவர்களின் கதைகளைக் கேட்டபின்னர் அங்கு ஒரு தேடுதலைச் செய்வதற்காகத் திட்டமிட்டுச் சென்றோம்.

உடுப்பிட்டி வீராத்தை அமைத்த கேணிக்கு அருகில் மூன்று வரையான ஆவுரஞ்சிக் கற்கள் இருந்தனவெனினும் கடந்த 2012 ஆம் ஆண்டு பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளிட்ட குழுவினர் ஒரு ஆவுரஞ்சிக் கல்லையே அடையாளப்படுத்தினர். அக்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டே அக்குளத்தை வீராத்தை அமைத்த செய்தியையும் எடுத்துக்காட்டினார். எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த ஒரு ஆவுரஞ்சிக்கல்லை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கொடுத்ததாக தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றும் மணிவண்ணன் ‘கரும்பவாளி’ என்ற ஆவணப்படத்தில் குறிப்பிடுகிறார்.

Continue Reading →