அன்பார்ந்த பனுவல் வாசகர்களே, சென்னை BOOK FAIR 2018, Y.M.C.A மைதானம், ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. உங்களுக்குத் தேவையான அனைத்து தமிழ் புத்தகங்களும் “பனுவல்” புத்தகக் கடையில்…
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்: 8/5/18 அன்று இரு கவிதை நூல்கள் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்பில் ஒடியக்கவிதைகள் ” அகதி முகாமில் ஓர் இரவு ”, ஜே. மஞ்சுளா தேவியின் “ நிலாத் தெரியாத அடர் வானம்”
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * ஆகஸ்ட் மாதக்கூட்டம் 5/8/18.ஞாயிறு மாலை.5 மணி.. , பி.எஸ் சுந்தரம் வீதி, (மில் தொழிலாளர் சங்கம்.), , திருப்பூரில் நடைபெற்றது. .* சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்பில் ஒடியக்கவிதைகள் ” அகதி முகாமில் ஓர் இரவு ” என்ற நூலை டாக்டர் .( முனைவர்) மஞ்சுளாதேவி வெளியிட்டார்.. கருணாநிதி, ஓவியர் கிருஷ்ணசாமி, செம்பருத்தி விஸ்வாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் . * ஜே. மஞ்சுளா தேவியின் “ நிலாத் தெரியாத அடர் வானம்” நூலை மனோகரன்( வங்கி ஊழியர் சங்கத்தலைவர் ) வெளியிட சசிகலா பெற்றுக்கொண்டார்.
கவிஞர் மஞ்சுளாதேவி உரை.பெண் கவிதை உலகமும் ஆண்மையமும் என்றத் தலைப்பில் பேசினார். டாக்டர் .( முனைவர்) மஞ்சுளாதேவி உரையில்….. பெண் கவிதை உலகம் இன்று சமையலறையைத் தாண்டிச் சென்று விட்டது. மிக சாதாரனமாக வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது…. பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிறது என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் பெண்களின் பிரசினைகள் மையமாகக் கொண்டு பெண்கள் நிறைய எழுதுகிற பொற்காலமாக இருக்கிறது
வணக்கம். ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிடவிரும்புகிறேன். புதிதாக,எங்கும் வெளிவராத,நூலில் ஒரு பக்கத்துள் வரக்கூடிய மாதிரி கவிதைகளை அனுப்பலாம். தனி நபர் வாழ்த்தாக,யாரையும் சாடாத கவிதைகளாக இருத்தல் வேண்டும். சமூக அக்கறையுடன் கவிதைகள் இருப்பின் நன்று.
இலங்கையின் மூத்த தமிழ் அறிஞரும் கல்வி அமைச்சின் முன்னாள் வித்தியாதிபதியுமான அமரர் கி. லக்ஷ்மணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு “சிப்பிக்குள் முத்து” தமிழகத்தில் வெளியாகியுள்ளது. கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை பிரபல ஓவியர் பத்மவாசன் வரைந்துள்ளார். கி.லக்ஷ்மணன் அவர்கள் இலங்கை – தமிழக தமிழ், ஆங்கில இதழ்களிலும் சிறப்பு மலர்களிலும் முன்னர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு: சிப்பிக்குள் முத்து.
இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களம் மற்றும் பொது நூலகங்களிலிருந்து தேடி எடுத்த கட்டுரைகளின் தொகுப்பான இந்த அரிய நூலில் தமிழ், கல்வி, இலங்கை வாசனை, சமயம், தத்துவம் ஆகிய தலைப்புகளில் 64 கட்டுரைகளும் ஆங்கிலத்தில் 9 கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
477 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்நூலை கி.லக்ஷ்மணன் அவர்களின் புதல்வி திருமதி மங்களம் வாசன், தொகுத்துள்ளார். கி.லக்ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டு கடந்த மே மாதம் தொடங்கியிருக்கிறது. இதனை முன்னிட்டு இந் நூல் வெளியாகியிருக்கிறது.
வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ( அமரர் ) க. சிவப்பிரகாசம், வடமாகாண முதல்வர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் திரு. டி. எம்.சுவாமிநாதன் ஆகியோர் உட்பட பலர் கொழும்பு றோயல் கல்லூரியில் கற்ற காலத்தில் இவர்களின் தமிழ் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் கி. லக்ஷ்மணன் அவர்கள், தமிழ் ஊடகங்களில் தமிழ் மொழியை சரியாகவும் பிழையின்றியும் எழுதவேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருப்பவர்.
torontotamilsangam@gmail.com