தொடர் நாவல் (2): பேய்த்தேர்!

அத்தியாயம் இரண்டு: காலவெளிக் குழந்தையின் பயணம்!

தொடர் நாவல் (1): பேய்த்தேர்! - வ.ந.கிரிதரன் -குருமண்காடுப்பகுதியெங்கும் இருள் கவிந்திருந்தது. மன்னார் வீதியிலிருந்து ஒற்றையடிப்பாதை மட்டுமே காணப்பட்ட அப்பகுதியில் நாலைந்து வீடுகள் மட்டுமே சுற்றிவர அடர்ந்திருந்த கானகச்சூழலின் மத்தியில் காணப்பட்டன. வெளவால்கள் அவ்வப்போது பறந்துகொண்டிருந்தன. இருண்ட வானில் சுடர்கள் சுடர்ந்துகொண்டிருந்தன. எங்கிருந்தோ விட்டு விட்டு நத்தொன்று கத்திக்கொண்டிருந்தது. அப்பா வழக்கம் போல் முற்றத்தில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தபடி நட்சத்திரங்கள் சுடர்ந்துகொண்டிருந்த இரவு வானத்தைப்பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இயற்கையை இரசிப்பதில், வாசிப்பதில் மிகுந்த விருப்பம். அவரது அந்தக்குணம் கேசவனுக்கும் அப்படியே வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. அப்பாவின் சாறத்தைத்தொட்டிலாக்கி அவனும் படுத்திருந்தபடி தலைக்கு மேல் கவிந்திருந்த  இரவு வானைப்பார்த்துக்கொண்டிருதான். அப்பொழுது அப்பா விண்ணில் எதையோ சுட்டிக் காட்டினார்.

“அதோ பார். அந்த நட்சத்திரத்தை..”

அவர் சுட்டிக் காட்டிய திசையில் நோக்கினான் கேசவன். நட்சத்திரமொன்று ஏனைய நட்சத்திரங்களினூடு விரைந்துகொண்டிருந்தது. ஏனைய நட்சத்திரங்களெல்லாம் இருந்த இடத்தில் இருந்தபடி சுடர்ந்தபடியிருக்க அந்த ஒரு நட்சத்திரம் மட்டும் அவற்றினூடு விரைந்துகொண்டிருந்தது.

“அந்த நட்சத்திரம் ஏனப்பா அப்படி ஓடுது?” என்றான்.

அதற்கவர் கூறினார்: “அது நட்சத்திரமல்ல. செயற்கைக்கோள்”

“செயற்கைக்கோளா? அப்படியென்றால் என்ன அப்பா?”

“நட்சத்திரங்கள் மிகத்தொலைவிலுள்ள சூரியன்கள். செயற்கைக்கோள்கள் அப்படியல்ல. அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் விண்வெளிக்கனுப்பியவை. பூமியின் வானிலை போன்றவற்றை அறிவதற்காக அனுப்பியவை. அவற்றில்படும் சூரிய ஒளிதான் அவற்றையும் ஒளிரச்செய்கின்றன”

இவ்விதமாக அலுக்காமல், சலிக்காமல் அப்பா அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதிலிறுப்பார். அப்போது நகரில் எம்ஜிஆரின் ‘எங்க வீட்டுப்பிள்ளை’ நியூ இந்திரா டாக்கீஸில் ஓடிக்கொண்டிருந்தது. பாடசாலைக்குச் செல்லும் போதும் வரும்போதும் யாழ் கண்டி வீதியும், ஸ்டேசன் வீதியும் சந்திக்குமிடத்திலிருந்த சினிமா விளம்பரங்களிலொன்றாக எங்க வீட்டுப்பிள்ளையின் விளம்பரமும் இருந்தது. போதாதற்கு நகரில் அடிக்கடி ஆங்காங்கே ‘நான் ஆணையிட்டால்’ பாடல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருந்தது. அவனுடன் வவுனியா மகாவித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர் ‘எங்க வீட்டுப்பிள்ளை’யைப் பார்த்து விட்டிருந்தார்கள். அது பற்றி அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்கள். அதுவரை அவன் திரைப்படமெதனையும் பார்த்திருக்கவில்லை.

“அப்பா..”

“என்ன மகனே!” சில வேளைகளில் அப்பா அவனை மகனே என்பார். குஞ்சு என்பார். செல்லமே என்பார். அவ்வப்போது வாய்க்கு வரும் அன்பு தவழும் சொற்களால் அவனை அழைப்பார்.

“எப்ப எங்களை எங்க வீட்டு பிள்ளைக்குக் கூட்டிப்போகின்றீர்கள்?”

அப்பா அவனை வியப்புடன் பார்த்தார். அன்றுதான் முதல் முறையாக அவன் அவரிடம் திரைப்படம் பற்றிப் பேசியிருக்கின்றான்.

அவர் கூறினார்: “கெதியிலை போகலாம். ஆச்சியிட்ட  சொன்னால் உங்கள் எல்லாரையும் கூட்டிச் செல்வார்”

அவர் ஆச்சி என்றது அவர்களது வீட்டுக்கு அருகில் , காடழித்துக் குடிசை கட்டித் தனிமையில் வாழ்ந்துவரும் மலையகத்தைச் சேர்ந்த ஆச்சி பற்றியது.

அவனுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. முதன் முறையாகத் தமிழ்ச்சினிமாப்படம் பார்க்கப்போகின்றான் என்னும் நினைவே இன்பத்தைத்தந்தது. சிறிது நேரம் அவர்களுக்கிடையில் மெளனம் நிலவியது. அப்பா இரவு வானின் எழிலில் தன்னை மறக்கத் தொடங்கினார். அவனது கவனமும் மீண்டும் விரிந்திருந்த இரவு வானின் மீது திரும்பியது. அப்பா வாங்கித் தந்திருந்த ஆங்கில ‘நர்சரி’ப் பாடல்களை உள்ளடக்கிய புத்தகத்தின் நினைவு தோன்றியது. அதிலுள்ள ஒரு பாடல் அவனுக்கு மிகவும் பிடித்த பாடல். அப்பாடலை நினைத்ததுமே அவனது மனக்கண்ணில் சுடரும் நட்சத்திரங்களும், தொலைவு வரை வியாபித்துக்கிடக்கும் உலகும் தோன்றி இன்பத்தைத்தந்தன.

Twinkle twinkle littel star.
How I wonder what you are?
Up above the world so high
Like a diamond in the sky.

இப்பாடலில் வரும் இம்முதல் நான்கு  வரிகளைக் கேட்டதுமே அவனது மனம் இன்பத்திலாழ்ந்து விடுவது வழக்கம். அதுவும் Up above the world so high என்னும் வரி ஒருவிதக் கிளுகிளுப்பையும், புதிரொன்றினைத்தாங்கி உயர்ந்து நிற்கும் இவ்வுலகத்தைப்பற்றியதொரு சித்திரத்தையும் அவனது சிந்தையில் ஏற்படுத்துவது வழக்கம். இருண்ட வானினூடு நட்சத்திரங்கள்தாம் எவ்வளவு அழகாகச் சுடர் விடுகின்றன.

Continue Reading →

“பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்”

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்நாளில் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள். இனிய பொங்கல் நன்னாளில் நாமும் ‘பதிவுகள்’ வாசகர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தவர்களுக்கும் அவர்கள்தம் வாழ்வில் மங்கலம் பொங்கிட வாழ்த்துகின்றோம்.  நினைவு தெரிந்த நாள் முதலாக இத்தினம் தமிழர் திருநாளாகத்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. வழக்கிலுள்ள சொற்களை உள்வாங்குவது இலக்கணம். அதுபோல் வழக்கிலுள்ள இது போன்ற நிகழ்வுகளை உள்வாங்குவது எம் மரபு.  இத்தினத்தைத் தமிழர்தம் திருநாளாகவே கருதுகின்றோம். அவ்விதமே தெரிந்த நாளிலிருந்து கொண்டாடி வந்தோம்; வ்ருகின்றோம்; வருவோம்.

தமிழர்தம் திருநாள்களில் மிகவும் பிடித்த திருநாளாக இதனையே கூறலாம். இதற்குக் காரணம் இந்நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள். கதிரவன் ஒளியும், உழவர்களும் இல்லாவிட்டால் இவ்வுலகில் எவையுமே நடைபெறாது. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதுதான் இத்தினத்தின் சிறப்பு. அது மட்டுமல்ல உழவர்களுக்கு உறுதுணையாக விளங்கிய எருதினையும் நன்றியுடன் நினைவு கூர்வதற்காகக் கொண்டாடப்படுவதுதான் ‘மாட்டுப்பொங்கல்’.

Continue Reading →

பொங்கற் கவிதை: வாழ்த்தி நின்று பொங்கிடுவோம் !

பொங்கற் கவிதை:  வாழ்த்தி நின்று  பொங்கிடுவோம் !

மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !

Continue Reading →

பொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்!’’

கவிதை: பொங்கலோ! பொங்கல்!

வானத்தில்  இருளே  பொங்க,
வரும்மழை  ஆற்றில்  பொங்க,
வரண்டமண்  வாய்க்கால்  பொங்கி,
வயலிலே  பயிர்கள்  பொங்க

Continue Reading →

வாசகர் முற்றம் – அங்கம் 03 : படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லா! சாகாவரம்பெற்ற நூல்களையும் சாகசக் கதைகளையும் சமகாலத்தில் படிக்கும் வாசகரின் அனுபவங்கள்!

படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லாபல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், மெல்பனில் எனது வீட்டுக்கு வந்தார். சிட்னியில் வசிக்கும் அவரது மகளிடம் வந்திருந்த சந்தர்ப்பத்தில் அவரை மெல்பனுக்கு அழைத்திருந்தேன். ஒருநாள் இரவுப்பயணமாக பஸ்ஸில்தான் வந்தார். அவரது கையிலிருந்தது ஒரு ஆங்கில துப்பறியும் நாவல். தந்திரபூமி, குருதிப்புனல், காலவெள்ளம், சுதந்திரபூமி முதலான பல நாவல்களும் பல கதைத்தொகுப்புகளும் சிறந்த நாடகப்பிரதிகளும் எழுதியிருக்கும் அவர் எனது அபிமான எழுத்தாளர். இவருக்கு எப்படி துப்பறியும் நாவல்களில் ஆர்வம் வந்தது எனக்கேட்டபோது, தான் பயணங்களில் விறுவிறுப்பான அத்தகைய நூல்களைத்தான் படிப்பது வழக்கம் என்றார். பயணக்களைப்பை அது போக்கிவிடுமாம். தேர்ந்த வாசகர்களினால் விரும்பிப்படிக்கப்படும் பல எழுத்தாளர்களிடத்தில் இவ்வாறு விசித்திரமான இயல்புகளும் இருக்கின்றன. ஜெயகாந்தனிடம், “நீங்கள் சரித்திர நாவல்கள் படிப்பதில்லையா?” என்று, கல்கியையும் சாண்டில்யனையும் , அகிலனையும் மனதில் வைத்துக்கொண்டு யாரோ கேட்டார்களாம். அதற்கு ஜெயகாந்தன், ” நான் அவற்றை படிப்பதில்லை. அதனைவிட தனக்கு அம்புலிமாமா கதைகள்தான் விருப்பம்” என்றாராம்.

பாரதியியல் ஆய்வாளரும் , மக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலை தமிழுக்குத்தந்தவரும், தமிழகத்தின் மூத்தபடைப்பாளியுமான சிதம்பர ரகுநாதனிடத்தில் வித்தியாசமான ஒரு இயல்பை அவதானித்திருக்கின்றேன். பாரதியின் பாடல்களில் பெரும்பாலானவை அவருக்கு மனப்பாடம். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றும் இருந்தது. அதுதான் இலங்கையில் புகழ்பெற்ற சிங்கள பொப்பிசைப்பாடல்: ” சுராங்கணி, சுராங்கணி, சுராங்கணிட்ட மாலு கெனாவா”

தமிழ்வாசகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல எழுத்தாளர்களிடத்தில் விசித்திரமான இத்தகைய இயல்புகளை அவதானித்திருக்கின்றேன். எழுத்தாளர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் எனச்சொல்லமுடியாது, சிறந்த படைப்பிலக்கிய நூல்களை விரும்பிப்படிக்கும் வாசகர்களிடத்திலும் அத்தகைய விசித்திரமான இயல்புகள் இருக்கின்றன.

சமகாலத்தில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளை படிக்கின்ற அதே சமயத்தில் ஆங்கிலத்தில் வெளிவரும் சாகசக்கதைகளை படிப்பதிலும் ஆர்வம் காண்பிக்கின்ற ஒரு வாசகர் பற்றிய அறிமுகம்தான் இந்த அங்கம். அவரது பெயர்: இரகமத்துல்லா. தமிழ்நாட்டில் செங்கல்பட்டைச்சேர்ந்த ஷேக் தாவூத் – காதர் பீ தம்பதியரின் புதல்வர். காரைக்குடியில் புகழ்பெற்ற அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்றவர்.  படிக்கின்ற காலத்தில் இவருக்கு இலக்கியத்தில் அதிகம் ஈடுபாடில்லை. தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் பயிலும்போது தமிழ்ப்பாடத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தமையால் அங்கு தமிழ் இலக்கிய மன்றத்தின் செயலாளராக பல ஆண்டுகள் இயங்கியிருக்கிறார். இரகமத்துல்லா எனக்கு அறிமுகமானது மெல்பனில்தான். வாசகி சாந்தி சிவக்குமார் மெல்பனில் மாதாந்தம் ஒருங்கிணைக்கும் வாசகர் வட்டத்தின் சந்திப்புகளில்தான் இவரை பார்த்துபேசியிருக்கின்றேன். வாசிப்பு அனுபவங்களில் மற்றவர்கள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும்போது இரகமத்துல்லா மாத்திரம் வேறு ஒரு திசையில் பயணித்து கருத்துச்சொல்வார். இவரது வாசிப்பு அனுபவம் ஏனையவர்களின் அனுபவத்திலிருந்து முற்றாக மாறுபட்டிருக்கும். ஒருகாலத்தில் நக்சலைட் தீவிரவாதத்தை ஆதரித்தவரும், அதனாலேயே வீட்டைவிட்டு வெளியேறி பசி பட்டினியோடு தேசாந்தரியாக அலைந்துழன்றவரும், பின்னாளில் கேரள இலக்கிய உலகில் கவிஞராக கொண்டாடப்பட்டவரும் திரைப்பட நடிகரும் பாடலாசிரியருமான பாலச்சந்திரன் – சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ரகசியம் நூலைப்படித்துவிட்டு, தமிழகப்பயணங்களில் பஸ்நிலையங்களில் யாராவது எழுத்தாளன் பரட்டைத்தலையுடன் சித்தன்போன்று அலைந்துகொண்டிருக்கிறானா? என்பதை கூர்ந்து அவதானித்திருப்பவர்தான் இரகமத்துல்லா.

Continue Reading →