படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் “எக்ஸைல்” குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்!

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்! அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர். அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன். இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார். ” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”

பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.

நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார். இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார். பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

Continue Reading →

வாசகர் முற்றம் – அங்கம் 04: இழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா! ஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான “சொல்லாதசேதிகள்” தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்!

இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தாபுத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் ” அமைதிப்படை” ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள். 
அவ்வாறு வந்தவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் தங்கியிருந்தவர். அண்மையில் அவர் மீண்டும் அங்கு வந்தபோது உதிர்த்த வாக்குமூலம் இது:  “நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம். எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை.”  

இந்தியப்படை அங்கு வந்திறங்கியபோது, வட இலங்கையில் உரும்பராயில் வசித்த இரண்டு ஆசிரியர்கள் – அங்கு பிரசித்திபெற்ற கல்விமான்களாக அறியப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்: ” அமைதி காக்க வந்திருப்பவர்களை நம்பலாம். இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் கைகுலுக்கியது ஒருவகையில் இராஜதந்திரம். எங்கள் தமிழ் மக்களை அவர்கள் கைகுலுக்கி அரவணைப்பது தொப்புள் கொடி உறவு. அவர்கள் பிறந்த தேசத்தின் பிதாவின் அகிம்சையால், பிரித்தானிய ஆதிக்கம் வெளியேறியது. அதுபோன்று, இங்கும் எங்கள் பிரதேசத்தில் பேரினவாத ஆதிக்கத்தை வெளியேற்றுவார்கள். தைரியமாக இருங்கள். தயக்கமிருந்தால், ஊருக்குள்ளே உறவினர் வீடுகளில் சென்றிருங்கள்” என்று வழியனுப்பிவைத்தார்கள்.

அவர்களில் ஒருவர் நவரட்ணம் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கணக்கியல் ஆசிரியர். மற்றவர் தம்பையா, யாழ். ஸ்ரான்லி கல்லூரியின் முன்னாள் அதிபர்.  ஆசிரியர் நவரட்ணம் தந்தையார். முன்னாள் அதிபர் தம்பையா, தாயின் தந்தையான தாத்தா. தந்தையும் தாத்தாவும் தங்கள் மகள்மாரை அன்று பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, வீட்டிற்கு காவல் இருந்தனர். அமைதிகாக்க வந்தவர்கள், தங்களையும் காத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியது. அதற்காக அமைதியிழந்து அலைந்தார்கள். வேட்டுக்களை தீர்த்தார்கள். உரும்பராயில் பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பறித்தார்கள்.  அந்தத் தந்தையையும் தாத்தாவையும் அதன்பின்னர் காணவில்லை!
இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகள் எங்கள் தேசத்தில் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. 

வாசகர் முற்றம் தொடரில், எதற்காக இந்தச்செய்திகள் வருகின்றன? என யோசிக்கின்றீர்களா? அந்த தாத்தாவையும் தந்தையையும் அதன்பின்னர் பார்க்கமுடியாமல்போன ஒரு தேர்ந்த இலக்கிய வாசகியைப்பற்றிய பதிவுதான் இந்த அங்கம். ஈழத்து இலக்கியவளர்ச்சியில் இன்றும் பேசப்படும் ஒரு கவிதைத்தொகுதிதான் பத்துப்பெண்கள் எழுதி, 1986 ஆம் ஆண்டில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள்.  அ.சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு சொல்லாத சேதிகள். ஈழத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையையும் இத்தொகுப்பு பெற்றிருக்கிறது.  அன்று செல்வி ரேணுகா நவரட்ணம் என்ற பெயருடன் இத்தொகுப்பில் கவிதை எழுதியிருக்கும் இவர், தற்போது மெல்பனில் திருமதி ரேணுகா தனஸ்கந்தாவாக இரண்டு பிள்ளைகளின் தாயாக எம்மத்தியில் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கிறார்.  பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியை. வசாவிளான் மத்தியகல்லூரியில் பணியாற்றியவர். இவரது ஆசான்கள் கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் மௌனகுரு. தந்தையும் தாத்தாவும் கல்விப்பின்னணிகளுடன் தேர்ந்த வாசகர்களாகவும் இருந்தமையாலும், ஆசான்கள், கலை, இலக்கியவாதிகளாகவும் படைப்பாளிகளாகவும் விளங்கியமையாலும் ரேணுகாவும் தீவிர வாசகரானார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதினார். ஒரு சில கதைகளும் படைத்தார். யாழ்ப்பாணத்தில் அன்று வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

Continue Reading →

இசைக்காணொளி அறிமுகம்: தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே!

இசைக்காணொளி அறிமுகம்: தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே!
தமிழ் அழகே எங்கள் தமிழ் அழகே! மேலும் ஒரு முயற்சி! காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. காணொளியை பார்த்தும் கேட்டும் கருத்துக் கூறுங்கள். முடிந்தளவு பகிர்ந்து கொள்ளுங்கள். இசையமைப்பாளர் சுதர்சன் மற்றும் எல்லாக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி.

பாடல் வரிகள்  & பாடல் தயாரிப்பு : கவிஞர் அகணி சுரேஸ்
இசையமைப்பாளர் : சுதர்சன்
பாடகர்கள் : மதுசிகன் , மதுசா குகதாசன், டெனின்ரா (மழலைக்  குரல்)
அணிசேர்  கலைஞர்கள் : தசா குகன்  – புல்லாங்குழல் , ரட்ணம் ரட்ணதுரை – மிருதங்கம், ரூபன், அபிஸன், வெற்றி துஷ்யந்தன்
ஒளிப்பதிவு  : வினு 

My sincere appreciation to Music Director Sutharsan and all artists. Kindly sign in to you tube and give your comments.

https://www.youtube.com/watch?v=3tqb2Dx4ZnI

Continue Reading →

ஏழு தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு! (மொழிபெயர்ப்பாளர் – லதா ராமகிருஷ்ணன்)

– இங்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ரிஷி, அநாமிகா என்னும் புனைபெயர்களில் எழுதி வருபவருமான , லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழிபெயர்த்த கவிதைகள் பிரசுரமாகின்றன. –

- லதா ராமகிருஷ்ணன் -

1. அய்யனாரின் புரவிகள்!  – ஆசு சுப்பிரமணியன் –

மனிதர் அற்ற
ஊரின் ஆற்றின் கரையில்
அய்யனார் புரவி மீது அமர்ந்து
காவலிருக்கிறார்
களவுப்போகும் புரவிகளுக்காய்
ஆற்றின் கரையில்
புரவி மீது அமர்ந்தவர்
ஒரு நாள் அடைமழையில்
அவர் அமர்ந்த புரவியை
மழையே களவாடியது
மீண்டும் அவர் எதிரேயிருந்த
ஏழெட்டுப் புரவிகளில்
ஒரு புரவி மீதமர்ந்த
அய்யனார் புரவியும்
வெயில் உரித்து
வெய்யிலே களவாடியது
மீந்த ஒன்றிரண்டுப் புரவிகளையும்
புயல் வெறித்து களவாடின
திகைத்த அய்யனார்
அச்சத்தின் பீதியில்
தானே ஒரு புரவியாகியப் பொழுதில்
தானும் அதுவுமாக காவலிருந்தார்

Continue Reading →