கவிதை: என்ன சொல்லிவிடுகிறது மழைத்துளி…!!!

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -தனித்தனியாய் விழுகிறோம்
தண்ணீராய் எழுகிறோம்…
வறண்டுவிட்ட பூமிக்காய்
வக்கணையாய் அழுகிறோம்..

வானத்தையும் வையத்தையும்
நீர்நூலால் கோர்க்கிறோம்…
முகிலோடு முகிலுரச
நன்னீராய் வேர்க்கிறோம்…

மெல்லமாய் விழுந்தாலும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்போம்…
ஆறு குளம் அத்தனையும்
செல்லமாய்ச் சிறையெடுப்போம்..

காதலுக்கும் தூது உண்டு
கல்லறைக்கும் தூது உண்டு – இது
சாதிமத பேதமின்றி நாங்கள்
சரிசமமாய்ச் செய்யுந் தொண்டு…

Continue Reading →

வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

வரலாறுதமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

1.    ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
2.    நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
3.    பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
4.    அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
5.    ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
6.    இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

Continue Reading →

வாசகர் கடிதங்கள்!

வாசகர் கடிதங்கள்

Kuru Aravinthan <kuruaravinthan@hotmail.com>
May 14 at 9:01 p.m.
அன்பின் கிரிதரன்,
வணக்கம்

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைப் போட்டி முடிவுகளைத் தங்கள் இணையத்தளத்தில் சிறப்பாக வெளியிட்டமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
குரு அரவிந்தன்


Letchumanan Murugapoopathy <letchumananm@gmail.com>
Jan. 28 at 12:25 a.m.
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நேற்று பாரிஸில் பண்டிதர் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக நடந்தது. இலங்கையிலிருந்து தகைமைசார் பேராசிரியர் சிவலிங்கராஜாவும் லண்டனிலிருந்து பேராசிரியர் பாலசுகுமாரும் வந்திருந்தார்கள். நீங்கள் உங்கள்  “பதிவுகளில் ” நூற்றாண்டு பற்றிய எனது கட்டுரையும் செய்தியும் வெளியிட்டமை குறித்து தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இங்கு சில இலக்கியவாதிகளையும் மற்றும் சமூகப்பணியாளர்களையும் சந்தித்தேன். எனது புதிய நூல் வெளியீடு எதிர்வரும் 3 ஆம் திகதி நடு இணைய இதழின் ஏற்பாட்டில் நடக்கிறது. அச்செய்தியை நீங்களும் பதிவேற்றியமைக்கு மிக்க நன்றி.
அன்புடன்
முருகபூபதி

Continue Reading →