FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol – I

33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!

[லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள். இவற்றில் சில ‘FLEETING INFINITY  [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol – I’ தொகுப்பில் இடம் பெற்றிருப்பவை. இங்கே லதா ரமாகிருஷ்ணனின் தெரிவிலான 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இங்குள்ள  33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் தேர்வின் சிறப்பு தெரிகின்றது. இவற்றையெல்லாம் அவர் முகநூலிலிருந்து பெற்றார் என்பது முகநூலின் ஆக்கபூர்வமான பங்களிப்பை வெளிப்படுத்துவதுடன், முகநூலில் வெளியாகும் படைப்புகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது.பதிவுகள்.காம் ]


இத்தொகுப்பில் சமகாலத்தில் ஆர்வமாகக் கவிதை எழுதிவரும் 139 கவிஞர்களின் படைப்புகள் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில், மூலக்கவிதையும் அதன் மொழிபெயர்ப்புமாக இடம்பெறுகிறது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு உலகத்தரமான படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழின் தரமான படைப்புகள் ஆங்கிலத்திலும் ஆங்கிலம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் படுதலும் என்பதை கவனப்படுத்தவும் இந்த முயற்சி உதவினால் மகிழ்வேன்.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நிறைய வருடங்களாக எழுதிவருபவர்கள், தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர்கள், கவிதை தவிர இலக்கியத்தின் பிற பிரிவுகளிலும் முனைப்பாக இயங்கி வருபவர்கள், சிறுபத்திரிகைகள் நடத்தி வருபவர்கள், இலக்கியப் பங்களிப்புக்காக விருதுகள் பெற்றிருப்பவர்கள். எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில், எதிர்மறையான சூழல்களில் இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிவந்தவர்கள்; வருபவர்கள்.  அவர்களுடைய கவிதைகளை  இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கவென நான் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவை. இவற்றில்இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை மூன்று நான்கு மட்டுமே.

இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!

1. அப்துல் ஜமீல்:  சடலமாக கிடந்த இரவு

மின்கம்பியில் சிக்கி அடிபட்டுப்போன
இராட்சதவெளவால்போன்று
சடலமாகக் கிடந்தது
தனக்குள்அனேகரகசியங்களை
பதுக்கிவைத்திருந்தஇரவு

விண்மீன்கள் பூக்க மறந்து
நிலா கருமுகிலினுள் செமித்த கணத்தினிடை
கோடையில் அலைந்தது வானம்

இரவினை வாசிக்க
மின்மினிப்பூச்சிகள் சிலவற்றை
பறக்கவிட்டேன்

செத்துப்போன இரவினுள்
தொலைந்துபோன தங்களது கனவுகளை
சிலர் தேடிக்கொண்டிருந்தார்கள்

இரவினையார் கொலை செய்திருப்பார்களென்று
துப்புத்துலக்க அவகாசமில்லை

கவனிப்பாரற்றுக்கிடந்த
இரவின் வெற்றுடலை
பகலினுள் அடக்கம் செய்கிறேன்
உடன் விடிந்து விடுகிறது

Continue Reading →

FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] – A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY (Vol – I)

FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதிலதா ராமகிருஷ்ணன் (ரிஷி) ஜூன் 2016இல் நான் ஃபேஸ்புக்கில் என்னை இணைத்துக் கொண்டபோது எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. காரணம், நான் எப்போதுமே என்னுடைய ‘nutshell world’ க்குள்ளாகவே வாழ்பவள். அதையே அதிகம் விரும்புபவள். நான் இந்த நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன்….?  ஆனால், விரைவிலேயே எங்கிருந்தெல்லாமோ நட்பினர் கிடைத்தனர். அவர்களில் பலர் தமிழில் கவிதை எழுதிவருபவர்கள். அவர்கள் தங்களுடைய கவிதைகளை( தங்கள் நட்பினருடைய கவிதைகளையும் தங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளையும்கூட) அவரவர் டைம்-லைனில் பதிவேற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாசிக்கக் கிடைத்த கவிதைகளின் மொழிநடை, உள்ளடக்கம், ஆழம், விரிவு, பாசாங்கற்ற தன்மையெல்லாம் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தந்தன.  அப்படி எனக்கு வாசிக்கக் கிடைத்தவற்றில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவேற்றத் தொடங்கினேன். இதற்குக் கிடைத்த வரவேற்பு நான் எதிர்பாராதது. ஃபேஸ்புக் நட்பினர், தங்கள் கவிதை மொழிபெயர்க்கப் பட்டதோ, இல்லையோ, பதிவேற்றப்பட்ட மற்றவர்களின் கவிதைகளையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் மனமாரப் பாராட்டினார்கள்.  இந்த வரவேற்பு தந்த உத்வேகத்தில் பல கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றினேன். ஏறத்தாழ 600 கவிதைகளை மொழிபெயர்த்திருப்பேன். இரவு நேரத்தில் ஒரு நல்ல கவிதையைப் படிக்கக் கிடைக்கும்போது அந்தக் கவிதை தரும் வாசிப்பனு பவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதற்குப் பொருத்தமான படத்தை கூகுளிலிருந்து தேர்ந்தெடுத்துப் பதிவேற்றுவது வழக்கமாகியது. அப்படி மொழிபெயர்ப் பதற்காக எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் 100க்கு மேல் இருக்கும். 

என்னுள்ளிருக்கும் கவிஞர், வாசகர், மொழிபெயர்ப்பாளரின் துணையோடு நான் எனக்குப் பிடித்த கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். என் மொழிபெயர்ப்பில் குறையிருக்கலாம். மூல கவிதையோடு ஒப்பிட என் மொழிபெயர்ப்பு ஒரு மாற்று குறைவானதாகவே இருக்கலாம். ஆனாலும், என் முகநூல் நட்பினரின் கவிதைகளை மொழுபெயர்ப்பதும் பதிவேற்றுவதும் எனக்கும், என் நட்பினருக்கும் வரவாக்கும் நிறைவுணர்வு என்னை மேலும் மொழிபெயர்க்கத் தூண்டுகிறது என்பதே உண்மை.

என் முகநூல் நட்பினரின் கவிதைகள் எனக்கு அளித்த நிறைவான வாசிப்பனுபவத்திற்கு நன்றி சொல்வதாய் அவர்களுடைய கவிதைகளையும் அவற்றின் என்( ஆங்கில மொழிபெயர்ப்பையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பினேன். இந்த என் விருப்பத்தை என் டைம்-லைனில் பகிர்ந்துகொண்டபோது எல்லோரும் அதைப் பெரிதும் வரவேற்றார்கள்.

Continue Reading →

போலிச் செய்தி எனும் போர்க் கருவி!

எழுத்தாளர் க.நவம்‘போலிச் செய்தி’ தமிழுக்குப் புதிய பதமல்ல. ஆனால் அதன் ஆங்கில வடிவமான ‘fake news’ மேற்குலகில் 3 வருடங்களுக்கு முன்னர் பலரும் அறிந்திராத ஒரு வார்த்தை. இப்போது அது ஜனநாயகத்துக்கும் கட்டுப்பாடற்ற விவாதத்துக்கும் மேற்குலகின் புதிய ஒழுங்கமைப்புக்கும் அச்சுறுத்தல் தரும் வார்த்தையாகிவிட்டது. அரசல்புரசலாக அடிபட்டுவந்த அவ்வார்த்தையை அம்பலத்துக்குக் கொண்டுவந்த பெருமை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே சாரும். அவரது பெருவிருப்புக்குரிய வார்த்தையாக மட்டுமன்றி, ’2017ஆம் ஆண்டின் வார்த்தை’ என்ற விருதுக் கௌரவதையும் தன்வயப்படுத்திக்கொண்ட வல்லமை மிக்க சொல்லாகிவிட்டது! .

போலிச் செய்தி என்னும் பதத்தை 2017 இறுதியில், டொனால்டு ட்ரம்ப் தனது மிகப் பிரியமான சமூக ஊடகமான ட்விட்டரில் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினார். பிரபல முன்னணி ஊடகங்களான New York Times, Washington Post, CNN போன்றவற்றைப் போலிச் செய்திகளின் கருவூலங்கள் எனக் குறிப்பிட்டார். CNN, ABC, NBC நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகள் யாவும் போலிச் செய்திகள் எனச் சாடினார். தமக்குப் பிடித்தமற்ற செய்திகளனைத்தும் போலிச் செய்திகளே எனப் பிரகடனம் செய்தார். ட்விட்டரில் இச்சொல்லை இற்றைவரை உபயோகித்துவரும் அவர், ஊடகங்கள்மீது தொடர்ந்தும் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.

தம்மைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் எல்லாமே போலிச் செய்திகள் என அங்கலாய்த்துத் திரியும் அமெரிக்க அதிபர், தேர்தல் காலம் முதற்கொண்டு தமக்கு ஆதரவாக மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உண்மைச் செய்தியாக நற்சான்று வழங்கி வருகின்றார். ஊடகங்களை மக்களது எதிரிகள் என்கின்றார். அவர் தொடர்பான அநேகமான CNN, CBS, NBC செய்திகள் எதிர்மறையானவை என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் போலிச் செய்திகள் என்பதுதான் தவறு. உண்மையறவற்றை அவர் போலிச் செய்திகள் என்பதில்லை. பதிலாக, தமக்கு அசௌகரியமானவற்றையும் பாதகமானவற்றையுமே அவர் போலிச் செய்திகள் என்பதுதான் வேடிக்கை! இது ஊடக சுதந்திரத்தின் மீதான, ஆதாரமற்ற தாக்குதலென விமர்சிக்கப்படுகின்றது. 

முற்றுமுழுதாகப் புனையப்பட்ட கதைகளே போலிச் செய்திகள் எனப்படுகின்றன. இவை பொய்யானவை; இட்டுக்கட்டப்பட்டவை; ஆதாரங்களற்றவை. வாசகர்களைத் தவறாக வழிப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார மார்க்கமாகப் பயன்படுத்தப்படுகின்றவை. அண்மைக்கால உண்மைச் செய்திகளினதை விட, போலிச் செய்திகளின் உலகு மிகமிக விசாலமானது. சிலவற்றுள் சில உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எவ்வித சூழ்நிலைப் பொருத்தப்பாடும் இருப்பதில்லை. உறுதி செய்யத் தேவையான உண்மைகள், அடிப்படை ஆதாரங்கள் இருப்பதில்லை. வேண்டுமென்று ஆத்திரமூட்டும் மொழியில், முக்கியமான விபரங்களைத் திட்டமிட்டுத் தவிர்த்து, ஏதோ ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்துவதாகப் போலிச் செய்திகள் வரையப்படுகின்றன. சிலவேளைகளில் தவறுதலாக அல்லது கவனக் குறைவாக உருவாக்கிப் பரப்பப்படுகின்ற போதிலும், போலிச் செய்திகள் பொதுவாகத் தவறானவை; நேர்மையற்றவை; நேர்த்தியற்றவை; ஏமாற்றுவதை அல்லது பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு, உருவாக்கிப் பரப்பப்படுபவை; உண்மையை மூடி மறைப்பவை: பொதுசன அபிப்பிராயத்தின்மீது செல்வாக்குச் செலுத்துபவை; தமக்கான ஆதரவைப் பெருக்கவும் எதிர்ப்பை நசிக்கவும் முற்படும் அரசாங்கங்களதும் அதிகாரம் மிக்கவர்களதும் ஆயுதமாகப் பயன்பட்டு வருபவை.

Continue Reading →