இலங்கை என்னும் நாடு அங்கு வாழும் அனைவருக்கும் உரிய தாய்நாடு. ஆனால் நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து 2009 வரை அங்கு வாழும் சிறுபான்மையின மக்களுக்கெதிராகக் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள், அரச அடக்குமுறைகள் , பயங்கரவாதத் தடைச்சட்டத் துஷ்பிரயோகம், மற்றும் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கில் பலியாகிய தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காத நிலையில், சிறுபான்மையின மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டு இலங்கையில் அனைத்து மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாகி , அனைத்து மக்களும் நீதியின் முன் சமம் என்னும் நிலை உருவாகாத நிலையில், இழந்த காணிகள் இன்னும் முழுமையாகக் கிடைக்காத நிலையில், இன்னும் போர்க்குற்றங்களுக்கான விசாரணைகள் நடைபெற்று நீதி கிடைக்காத வரையில் இதுவரை நடைபெற்ற வன்முறைகளால பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்விதம் மனமொன்றி நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவார்கள்?
தொண்டைமண்டலம் தொல்பழங்காலம் தொட்டே ஒரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இயங்கிவருகிறது. இது பழையகற்காலம், புதியகற்காலம், பெரும்கற்காலம் என்று அதன் தொன்மையினை வரையறுத்துக் காட்டுகிறது. இப்பகுதிகளில் தொல்லுயிர்ப்படிமங்கள், தொல்மரப்படிமங்கள், கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, ஈமத்தாழி, ஈமப்பேழை எனப் பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் காணக்கிடக்கின்றன.
தொல்லுயிர்ப்படிவுகள்
தொன்மைச்சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி அழிந்துபோன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் தொல்லுயிர் படிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருமளவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருங்காட்டுக்கோட்டை, கண்ணன்தாங்கல், சிவன்கூடல் போன்ற ஊர்களில் தாவரப் படிமங்கள், பழங்கற்காலக் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன (நடன.காசிநாதன்,2010:10-11).
பழையகற்காலப்பண்பாடு
இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் (Pleistocene) காலத்தில் பழையகற்காலப்பண்பாடு தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் காடுகளிலும் மலைகளிலும் நாடோடியாக வாழ்ந்தான். அவன் கொடியமிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தம்வாழ்வின் பல உபயோகங்களுக்கும் குவார்ட்சைட் (Quartzite) எனப்படும் கூழாங்கற்களிலிருந்து செய்யப்பட்ட கடினமான கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இந்தியாவில் இப்பழையகற்காலமானது கற்கருவிகளின் பொதுத் தன்மைகளையும் தொழில்நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் முதற் பழங்கற்காலம் (Early or Lower Palaeolithic Age) எனப்படும் காலம் ஏறத்தாழ 5,00,000 – 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் கூழாங்கற்களினாலான கைக்கோடாரி (Hand Axe), வெட்டுக்கருவி (Chopper), கூர்முனைக்கருவி (Points), வட்டுக்கருவி அல்லது தட்டுவடிவக்கருவி (Discoids), கிழிப்பான் (Cleavers) போன்ற பெரியவகை கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இதற்கடுத்துவரும் இடைப் பழங்கற்காலமானது (Middle Palaeolithic Age), சுமார் 50,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிலவியதாகும். இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் சிறிது அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றவனாகமாறி இருந்தான். இக்காலத்தில் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகள் அளவில் சிறியவையாகவும் நேர்த்தியானவையாகவும் செய்யப்பட்டிருந்தன. கூழாங்கற்களுடன் செர்ட் எனப்படும் இளம்பச்சைநிற வகைக்கற்கள் ஆயுதங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கைக்கோடாரி, கூர்முனைக்கருவி, வட்டுகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், ஈட்டிகள், வாய்ச்சிகள் போன்ற பலவகை கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைப் பழங்கற்காலம் (Later or Upper Palaeolithic Age) எனப்படும் சுமார் 20,000 – 10,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்றாவது காலக்கட்டத்தில் சில்லுக்கருவிகளை (Flake tools) பயன்படுத்தியதோடு, குவார்ட்ஸ் (Quartrz), செர்ட் (Chert) போன்ற வகைக்கற்களினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கூர்மையான, நேர்த்தியான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பிளேடு (Blade), துளைப்பான் (Borer), கத்தி (Knife), சுரண்டி (Scrapper), கிழிப்பான் (Cleaver) போன்ற வகையான கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்குறிப்பிட்ட மூன்று பழங்கற்காலப் பண்பாடுகளும் நிலவிய தற்கான சான்றுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (நடன. காசிநாதன்,2010:12).
1. சிதறிப்போன ஆசைகள்
பனி பொழிந்ததின்று மாலையிங்கு
பள்ளிச்சிறுவர் பனியள்ளி வீசினர்
பார்க்கப் பார்க்க என்நினைவுகள்
புலத்து வாழ்வை எண்ணியேங்கின
சின்னச் சின்ன ஆசைகள்
சிதறிப் போன ஆசைகள்
வாலிபத்தில் இழந்து விட்ட
வசந்த காலப் பொழுதுகள்
ஊர்க்காற்றை சுவாசித்திட ஆசை
உருண்டு மண்ணில்புரள ஆசை
மழையில் கப்பல்விடவும் ஆசை
மாங்காய் எறிந்துவீழ்த்த ஆசை
நடந்து சென்று கொண்டிருந்தோம்
இருவருமே அவரவர் எண்ண ஓட்டத்தின் பாதையில்
வலப்புறம், இடப்புறம் என்று மாறிமாறி
வயிறு சற்று கணத்துப் பசிக்கத் தொடங்கியது.
‘நண்பா பசிக்குதுடா” என்றேன்
‘உம்” என்றான். உம் வலுவாயில்லாதிருந்தது.
அடிவயிற்றை அவ்வப்போது வருடியபடி நடக்கத் தொடங்கினேன்.
தேடுவாரற்றுக் கிடந்த
அடர்ந்த மணற்புதருக்குள்
இருந்து எடுத்துவந்தார்கள்.
முகம் சிதைந்திருந்தது.
உடல் அமைப்பைக்கொண்டு
அடையாளம் கண்டு
முடியாமல் இருக்கிறது என்றார்கள்.
அவசரவண்டியுடன்,
காவல்துறையினரும்
வருவதாக
பேசிக்கொண்டார்கள்.
ஆங்காங்கே குண்டுகள் பட்டு
குருதியின் அடையாளத்தையும் கண்டார்கள்..
கள்வனாக இருக்குமோ?
“இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக்கோலம்”
இந்த பாடல் திரையிலும் வானொலியிலும் ஒலித்தவேளையில் சங்ககால தமிழர் நாகரீகம் தழைத்த ” கீழடி” அமைந்துள்ள மதுரையில் கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த இந்தக்குழந்தைக்கு தற்போது 45 வயதாகிவிட்டது.
இந்தப்பாடலில் கவியரசு கண்ணதாசன் இப்படியும் ஒரு வரி எழுதியிருப்பார்: “கவிஞர் சொன்னது கொஞ்சம் – இனி காணப்போவது மஞ்சம்” இதே கவிஞர், பார்மகளே பார் திரைப்படத்திலும் ஒரு பாடல்வரியை இவ்வாறு எழுதியிருந்தார். “நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே. அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே”. இந்தப்பத்தியில் இடம்பெறும் முதலாவது பாடல் வரிகள் வரும் திரைப்படம் எங்கள் தங்கராஜா வெளியான காலத்தில், அந்த அம்மாவுக்கு பிரசவ வலி கண்டுள்ளது. கட்டிலில் கவிதை படித்ததால் , தொட்டிலுக்கு வந்தது அந்தக்குழந்தை. அதனால் ராஜா எனப்பெயரிட்டார்கள்.
இந்த ராஜா பிறந்த கல்லுப்பட்டியைச்சுற்றியிருக்கும் ஆறு விவசாயக் கிராமங்களைச்சேர்ந்த மக்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றுகூடி கொண்டாடும் முத்தலம்மன் திருவிழாவிற்காகவும், மழைவேண்டி விழா எடுக்கும் மாரியம்மன் திருவிழாவிற்காகவும் சப்பரம் கட்டுதல், ஓவியம் தீட்டுதல், பேப்பர் கூழால் பொம்மைகள் செய்தல், கதாகாலட்சேபம் மற்றும் நாடகத்திற்கு வேஷம் கட்டி ஆடுதல் இவை அனைத்திலும் தனது பெற்றோரும் உற்றோரும் இணைந்து தணியாத ஆர்வத்துடன் கலந்துகொள்வதையே பார்த்துவளர்ந்தவர்தான் இந்த ராஜா.
தமிழர்களின் தொன்மையான கலையை ஆராதித்து கொண்டாடிய மண்ணையும் மக்களையும் நேசித்த குடும்பத்தில் கருப்பையா – லட்சுமி தம்பதிக்கு 1973 இல் கடைசியாக பிறந்த இந்த கடைக்குட்டி ராஜா, பூவுலகை கண்டு அழுது – சிரித்தவேளையில், திரையில் ஓடுகிறது சிவாஜி – மஞ்சுளா இணைந்து நடித்த எங்கள் தங்கராஜா. அது திரையில் ஓடட்டும்!
“எங்கள் வீட்டில் ஓடவும் ஆடவும் பாடவும் வந்துபிறந்திருக்கிறான் எங்கள் தங்கராஜா. இந்தச் செல்வத்திற்கு ராஜா பெயர் சூட்டி ராஜாவாக்குவோம் என நினைத்தனர் மஞ்சத்தில் கவிதை எழுதியவர்கள்.
ராஜாவின் அப்பா, பணிநிமித்தம் திண்டுக்கல்லில் இருந்தமையால் அங்கும் வாழ்ந்திருக்கும் ராஜாவுக்கும் சகோதரங்களுக்கும் அங்கிருந்த மலைக்கோட்டை வார விடுமுறை நாட்களில் தங்களுக்கானவை என்று பெருமிதம் பொங்கச்சொல்கிறார். அங்கு அப்பா தற்புனைவுகளோடு சொல்லித்தந்த கதைகள் ஏராளம். ராஜாவின் தாய்மாமனார் இயற்கை வைத்தியர். கோயம்புத்தூரில் அவருக்கு உதவியாக இருந்த ராஜாவின் மூத்த சகோதரர்தான் இவருக்கு வாசிக்கும் ஆர்வத்தை ஊட்டியவர் என்கிறார்.
முன்னுரை
பழந்தமிழ் இலக்கியத்தின் இமயம் போல இருப்பது சங்கப்பாடல்களே. காதலையும் வீரத்தையும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்று சங்கப் பாடல்கள் உள்ளன. காதல் பாடல்கள் அனைத்தும் அகப்பாடல்கள் என்றும் போர்ப்பாடல்கள் புறப்பாடல்கள் எனப் பிரித்துச்சொல்லப்படுகின்றன. மனித வாழ்க்கையில் இயற்கைக்கு நிகராக இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை உணரமுடிகின்றன. நீரின் தன்மையைப் பற்றி பல்வேறு பாடல்களின் மூலமாகப்புலவர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். தம் பாடலடிகளின் மூலம் கூறிய செய்திகளை சங்க இலக்கிய நூல்கள் மூலமாகக் கூறியுள்ளார்கள். பருவநிலையேற்றப் போல நீரின் தேக்கத்தைப் பற்றியும் இயற்யையாக உருவாக்கும் மழை நீர் தன்மையையும் பற்றியும் மனிதனின் ஆக்கப்பூர்மான ஓவ்வொரு செயலுக்கு இன்றியாமையாக ஒன்றாக நீர். நீர் பற்றிய செய்திகளை பழந்தமிழ் நூலின் அடிகளின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரை நோக்கமாக முற்படுகிறது.
ஐம்பூதங்கள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஐம்பூதங்கள் சமநிலையில் இருக்குமாயின் எந்த விதமானப் பாதிப்புகள் எப்போதும் மனிதனுக்கு வருவதில்லை. இயற்கையின் அமைப்பு ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பவற்றைச் சார்ந்தது. இங்கு மக்கள் நிலத்தை நிலமகள் என்னும் புவிமடந்தை என வழிபட்டனர். திருமகள் பற்றி கூறுவதை,
வரிறுதல் எழில்வேழம் பூநீர் மேல்சொரிதர
புரிநெகிழ் தாமரை மலர் அம்கண் வீறு எய்தி
திருநயந்து இருந்தன்ன தேம்கமழ் விறல் வெற்ப (கலித்.44:5-7)
என கபிலர் கலித்தொகைப்பாடலடிகளின் வழியாகச் சுட்டுகின்றார்.
நீர் என்பதும் இயற்கையின் மற்றொரு முக்கியக் காரணியாகும். கடலைச் சேரும் ஆறுகளை எல்லாம் தெய்வமாக எண்ணி மக்கள் வழிபடுகின்றனர். மக்கள் ஆறுகளுக்கு பெயர் வைத்து கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி, கிரு~;ணா, காவிரி, வைகை முதலியன ஆறுகளெல்லாம் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து இருந்துள்ளன. கங்கையைத் தன் தலையில் சூடியவர் சிவன் என்பதை,
அமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலித்.38:1)
என்ற பாடலடியின் மூலமாகக் கலித்தொகைக் கூறுகின்றது.
நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டி, அணங்குகள் (தெய்வங்கள்) காவல் புரிந்ததாக மக்கள் நம்பியுள்ளனார். அணங்கு மூலமாகச் சொல்லுகின்ற போது மக்கள் தவறாக ஏற்படுத்த மாட்டார்கள் என்ற சூழல் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். நீர் மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உண்பதற்கு நீர் எடுத்தனர். எந்தொரு நோயினை வராமல் இருக்க பிறச்செயல்பாடுகள் அங்கு நிகழாமல் பாதுகாத்தனர். தெய்வங்கள் தங்கும் குளிர்ந்த நீர்த்துறையை,