வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவையின் 32ஆவது தமிழ் விழா

அன்புடையீர் வணக்கம்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்  பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது   உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும்  சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள்  முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக்  கொண்டாடப்பட்டன.  இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக‌. வட  அமெரிக்கத் தமிழர்  வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது.  உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை  அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன்,  அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை  திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்  திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.

பேரவை விழா மற்றும் 10வது  உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொருளுதவி செய்த  புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள்  உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர்   வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு  விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

Continue Reading →