எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருடனான நேர்காணல்; கண்டவர்: எழுத்தாளர் குரு அரவிந்தன்.குரு அரவிந்தன்: வணக்கம் கே. எஸ். சுதாகர், அவுஸ்ரேலியாவில் இருந்து கனடா வந்திருக்கிறீர்கள். தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக ஏதாவது இலக்கியச் சந்திப்புக்களை இங்கே ஏற்படுத்தி இருக்கிறீர்களா?

கே.எஸ்.சுதாகர் : நண்பர்கள் வ.ந.கிரிதரன், பாலமுரளி (கடல்புத்திரன்), எல்லாளன் ராஜசிங்கம், தேவகாந்தன் என்பவர்களை கிரிதரனின் முயற்சியால் சந்தித்தேன். மற்றும் மூத்த எழுத்தாளர் கதிர்.பாலசுந்தரம், `வெற்றிமணி’ ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் (ஜேர்மனி), இன்று தங்களையும் சந்தித்திருக்கின்றேன். ரொறன்ரோவில் பலரும் இருந்ததனால், போக்குவரத்து காரணமாக பிறம்ரனில் தங்கியிருந்த என்னால் சந்திக்க முடியவில்லை. பலரைச் சந்திக்கும் ஆர்வம் இருந்தும் முடியவில்லை. தொலைபேசி மூலம் நண்பர் அகில் நீண்ட நேரம் என்னுடன் உரையாடியிருந்தார்.

குரு அரவிந்தன்: அவுஸ்ரேலியாவில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகள், இதழ்களின்; பெயர்களைக் குறிப்பிட முடியுமா?

கே.எஸ்.சுதாகர் : மெல்பேர்ணில் இருந்து `எதிரொலி’ என்ற பத்திரிகை, `அக்கினிக்குஞ்சு’ என்ற இணையமும் வெளிவருகின்றன. அதேபோல் சிட்னியில் இருந்து ‘உதயசூரியன்’, `தமிழ் ஓசை’, `தென்றல்’ என்ற சஞ்சிகைகளும், `தமிழ்முரசு’ என்ற இணையமும் வெளிவருகின்றன.

குரு அரவிந்தன்: ஏனைய புலம் பெயர் நாடுகளைப் போல வாசிப்புப் பழக்கம் தற்போது அங்கும் குறைந்து கொண்டு வருகிறதா?

கே.எஸ்.சுதாகர் : வாசிப்புப் பழக்கம் இங்கும் குறைந்துகொண்டுதான் வருகின்றது. `மெல்பேர்ண் வாசகர் வட்டம்’ என்றொரு அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றது. இதில் காலத்துக்குக் காலம் பலரும் இணைந்துகொண்டு வாசிப்புப் பழக்கத்தை ஊக்கி வருகின்றார்கள். சிட்னியில் `தமிழ் அறிவகம்’ என்னும் நூல் நிலையம் வாரத்தில் நான்கு நாட்கள் முழுநேரமாக தொழிற்படுகின்றது.

குரு அரவிந்தன்: கனடாவிலும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் தற்போது அடுத்த தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றோம். அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகள் தமிழ் வளர்ப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்.

கே.எஸ்.சுதாகர் : இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது பல மொழிகளில் இயங்கிவரும் SBS (Special Broadcasting Service) வானொலி. இது பிரதிவாரமும் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு மணித்தியால சேவையை வழங்கி வருகின்றது. கடுகு சிறிது காரம் பெரிது என்பதுபோல் பலவிதமான நிகழ்ச்சிகளை இவ்வானொலி தருகின்றது. தவிரவும் சிட்னியில் இருந்து 24 மணி நேரம் இயங்கும் இயங்கும் ATBC (Australian Tamil Broadcasting Corporation), இன்பத்தமிழ் வானொலி, தமிழ் முழக்கம், டிஜிட்டல் மூலம் இயங்கும் `தாயகம்’ என்பவற்றையும் குறிப்பிடலாம். இவற்றைத்தவிர ஒவ்வொரு மாநிலங்களிலும் பல தமிழ் வானொலிகள் இயங்கி வருகின்றன.

Continue Reading →