மானுட ஈரம் கசியும் தமிழச்சியின் (தமிழச்சி தங்கபாண்டியன்) ‘ எஞ்சோட்டுப் பெண்’

மானுட ஈரம் கசியும் தமிழச்சியின்  ' எஞ்சோட்டுப் பெண்'  முனைவர் சு. செல்வகுமாரன்,  இணைப் பேராசிரியர், தமிழியல் துறை,  அண்ணாமலைப் பல்கலைகவிஞனின் ஆழ்மனக்கடலில் நிகழ்ந்த அதிர்வில் மேலெழுந்த அலை வீச்சே கவிதைமொழி. ஆழிப்பேரலையாய் கவிஞனிடமிருந்து வெளிப்பட்டு வாசகனை தம்வசப்படுத்தும் ஆற்றல் கவிதைக்கு உண்டு. கவிதை மானுடத்தின் ஈரத்தை மெல்ல தம் மௌன மொழிகளால் கசியச்செய்யும். தேவைப்படின் இரத்தத்தையும் கசியச் செய்யும். இரத்தக் கசிவினுள் மானுடத்தின் அடிமைச் சங்கிலிகளின் கண்ணிகள் நெகிழ்ந்து அவிழ்படும் ஓசையை கேட்கமுடியும். கவியின் மனதில் கன்னல்பட்டு கருக்கொண்ட நிகழ்வு / அனுபவங்களின் மொழியே கவிதையாகிறது. கவியின் மனச்சட்டகத்தைப் பொறுத்து வார்க்கப்படும் கவிதைகள் கவிக்கு கவி வேறுபடுமெனின் அது மிகையல்ல. தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண்ணோ முழுமையும் மானுட ஈரம் கசிந்து பெரும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.

“எஞ்சோட்டுப் பெண்” தமிழச்சியின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது. முற்றிலும் தன்னைச் சுற்றியே நகரும் இக் கவிதைகள் அப்பா, அம்மா, அப்பத்தா, தோழி, அக்கா, காமாச்சிப்பாட்டி, சிலம்பாயி, சேத்தூர் சித்தப்பா, சித்தி, முடியனூர்க்கிழவி, கொத்தனார் பாக்கியம், கச்சம்மா, கருப்பையா, குழந்தை வேல் ஆசாரி எனும் மனிதச்சித்திரங்களோடு தமக்கிருந்த அன்பை, அவர்கள் தம்மீது கொண்டிருந்த அன்பை கவிதையில் பரிமாறுகிறது.

கவிதையில் ஒவ்வொரு மனிதனும் மானுட ஈரத்தை நேசமாய் கசிவிப்பது என்னமோ அருவி நீரின் குளிர்ச்சியாய் உள்ளுணரச் செய்கின்றது. கவிதையில் உலாவும் மனிதர்கள் கல்வியின் மூலம் சூட்சுமங்களை கற்றுக் கொள்ளாத, மனதில் கபடமற்ற, உண்மையான அன்பை ஒளிரச் செய்பவர்களாக காட்சிப்படுகின்றனர். நெஞ்சில் ஈரம் கசியும் அந்த மனிதர்கள் குறித்த காட்சிப் படிமங்களின் வழியாக தமிழச்சியின் மானுட ஈரமும் நம்மை கவர்கின்றன. இது ஒருநிலை.

இன்னொருபுறம் தீப்பெட்டி பொன்வண்டு, கம்பங்கூழ், பனைநுங்கு, பதனீர், பெயர் எழுதிப்பார்த்த நெட்டிலிங்கம் மரம், சினை வயிற்றோடு மேய்ந்த சிவப்பி, ஆலமரம், கனகாம்பரம், கலர்ப்பூந்தி, அணில், வெண்கலச் செம்பு, பாம்படம், மார்கழி காலையின் பூசணிப்பூ, மருதாணி விரல்கள், காத்து கருப்பு, மயிற்பீலி, பரண், பொங்கல், திண்ணை, கைக்கடிகாரம், வளையல், கிளி, சாமியாகிப்போன தங்கச்சிப்பாப்பா, சைக்கிள் என கவிஞரின் வாழ்வைக் கொண்டு செலுத்திய பலவும் கவிதையை சுவீகரித்து நிற்கின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 345: மன ஓசை வெளியிட்ட மூன்று நூல்கள் பற்றிய குறிப்பு!

எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன்அண்மையில் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின் ‘மனஓசை’ பதிப்பக வெளியீடுகளாக வெளியான மூன்று நூல்கள் கிடைத்தன. இதற்காக அவருக்கு என் நன்றி. இவற்றில் இரு நூல்கள் அவர் எழுதியவை. அடுத்தது அவரது கணவரும் எழுத்தாளரும், ஓவியருமான மூனா (ஆழ்வாப்பிள்ளை தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்) எழுதியது. இவற்றில் சந்திரவதனாவின் ‘நாளைய பெண்கள் சுயமாக வாழ’ அவரது பதினைந்து கட்டுரைகளையும், ‘அலையும் மனமும் வதியும் புலமும்’ பத்தொன்பது சிறுகதைகளையும் , மூனாவின் ‘நெஞ்சில் நின்றவை’ இருபத்தியிரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கியவை. அழகாக வடிவமைக்கப்பட்ட வன் அட்டைகள் நூலுக்கு மேலும் சிறப்பைத்தருகின்றன. இவற்றுக்கான ஓவியங்களை வரைந்திருப்பவர் இவரது கணவரான ஓவியர் மூனா. மேலும் அட்டைகளை வடிவமைத்திருப்பதும் அவரே. புகலிடத்தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்களிலொருவர் எழுத்தாளர் சந்திரவதனா செல்வகுமாரன். அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் கட்டுரைகள், சிறுகதைகளை உள்ளடக்கிய இந்நூல்கள் அண்மையில் வெளியான முக்கிய வரவுகள்.

‘நாளைய பெண்கள் சுயமாக வாழ’ நூலிலுள்ள கட்டுரைகள் புகலிடப் பெண்கள், பெண்கள் சுயமுடன் , சமூகத்தில் அவர்களை அடக்கி வைத்திருக்கும் எழுதப்படாத சட்டங்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு சுதந்திரமாக வாழ வேண்டுமென்பதை வலியுறுத்தும் கட்டுரைகள். பெண்களுக்கு பெண் விடுதலை விடயத்தில் சிந்தனைத்தெளிவை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டும் சேவையினை ஆற்றும் கட்டுரைகளிவை. ‘பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் விடுதலை. மானுடத்தின் விடுதலை’ என்று நூலுக்கான தன்னுரையில் அறை கூவல் விடுக்கும் சந்திரவதனா நூலின் தாரக மந்திரங்களாக ‘ நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய இளம் பெண்களே வழி கோலுங்கள்’ என்ற கூற்றினையும், ‘பெண்ணே நெருப்பாயும் வேண்டாம். செருப்பாயும் வேண்டாம். உனது இருப்பு , உனது விருப்போடு, உனதாய் இருக்கட்டும்’ என்னும் கூற்றினையும் முன் வைக்கின்றார். பெண்ணுரிமையினை வலியுறுத்தும் தன் எண்ணங்களை இக்கட்டுரைகளில் வலியுறுத்தும் சந்திரவதனா , அவை ஆண்களுக்கு எதிரானவை அல்லவென்றும் குறிப்பிடுகின்றார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 344 : நண்பர் வேந்தனார் இளஞ்சேயின் கடிதங்கள் மூன்று!

வேந்தனார் இளஞ்சேய்அண்மையில் நண்பரும், எழுத்தாளருமான வேந்தனார் இளஞ்சேய் என் படைப்புகள் சிலவற்றை வாசித்துத் தன்  கருத்துகளைப் புலனம் (Whatsup) மூலம் தெரிவித்திருந்தார். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். என் படைப்புகளை வாசித்துத் தன் கருத்துகளைத் தெரிவித்த நண்பருக்கு என் மனம் நிறைந்த நன்றி.


1. 05.08.2019

நல்லது கிரி. உங்கள் குறுநாவலான “சுமணதாஸ பாஸ்” ஜ தற்போது வாசித்தேன். இயற்கையை இரசிக்கும் தன்மை – அடர்ந்த காடு – கடும்மழை- குளங்கள்- ஆறுகள்-பறவைகள்-விலங்குகள் – இவற்றை ரசிக்கும்  மனப்பாங்கு , பொதுவாகவே எழுத்தாளர்களுக்கு அதிகம். அது உங்கள் எழுத்தில் நன்கு தெரிகின்றது. கதை ஓட்டம் , ஆற்றொழுக்காக இயற்கை காட்சிகள் வர்ணனைகளுடன் தங்கு தடையின்றி செல்கின்றது.வாழ்த்துக்கள்.நீங்கள் தந்த உங்கள் நூல்களையும் விரைவில் வாசிப்பேன். நிற்க. இக் கதையின் உட்கருத்து – மனிதாபிமானமிக்க சுமணதாஸ் பாஸ் கொல்லப் பட்டதும் , அவனுடன் சேர்ந்து அவன் குடும்பமும் கொல்லப்பட்டதும் தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பும், ஆதங்கமுமே. இதை நான் நன்கு உணர்கின்றேன். ஏற்றுக் கொள்கின்றேன்.

சம்பவம் 1
நானிருந்த கந்தர்மடத்தில் ,  1969-73 பகுதிகளில், என் வீட்டிற்கு மூன்று வீடு தள்ளி ஓர் குடும்பம்  வசித்து வந்தது. மூத்த இரு ஆண் பிள்ளைகள்.கடைசி பெண்பிள்ளை. மூத்த ஆண் பிள்ளைக்கு என்னிலும் 3 வயது குறைவு. மற்றவனுக்கு 5 வயது குறைவு. கடைசிப் பெண் பிள்ளை 12 வயது இளமையானவள். இரு பெடியன்களும் எங்களுடன் துடுப்பெடுத்தாட்டம்- உதைபந்தாட்டம்  விளையாடுவார்கள். அவர்களுடன் வரும் சிறுமியை, என் சிறிய தமக்கையார் தூக்கிக் கொண்டு திரிவார்.

Continue Reading →