– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –
உலகியல் வழக்கினும் நாடக வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல்)
அறிமுகம்
சங்க இலக்கியம் மக்களின் மூச்சாக உள்ளது. பண்பாடுகள் – கருத்தின் நாகரீகங்களாகவும் அமைந்துள்ளது. போற்றுதல் மரபினதாகவும் திகழ்ந்துள்ளது. விருந்தினரை உறவுகளாக கொள்வதுதான் மேன்மைகளாகும். புகழுக்காக வாழ்வதுதான் உயிர்களின் நிலைகளாகும்.
இயற்கைகளாலான இவ்வுலகில் வாழ்வோ தனித்துவமானது. தன்னம்பிக்கைகளோ எதிர்விசைகளை மூழ்கடிப்பது. உண்மை – பொய்மைகளை வெல்வது. நீதிநெறி தழுவாமல், ஒழுக்க விதிமுறைப்படி வாழ்வதுதான் மக்களினம். வாழ்க்கை முறையினை காலங்களுக்கேற்றார் போன்று இயைவதுதான் நற்றிணையின் சிறப்பமைவாகும். இத்தகைய தகவலோடும் கருத்தமைவின் ஒழுங்கியலையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.