சங்க இலக்கியத்தில் மருத நில வேளாண்மைப்பண்பாடு (11) –

‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள் –


 

முன்னுரை:
சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்க்கை பண்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளன.  சங்க காலத்தில் வேளாண்மைப்பண்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.  வேளாண்மை சமூக மாற்றத்திற்கான அடிகோலாய் தோன்றின எனலாம்.  சங்கச் சமுதாயம் இனக்குழு வாழ்விலிருந்து அரசு உருவாக்கத்திற்கும், நகரமயமாதலுக்கும் அடிப்படையாய் அமைந்தன.  இவ்வேளாண்மைப்பண்பாட்டை பற்றிக் காண்பதாக இக்கட்டுரை அமைகிறது.

பண்பாடு
பண்பாடு எனும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘உரடவரசந’ என்று கூறுவர்.  பண்பாடு எனும் சொல் ‘பண்படு’ என்னும் சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டது எனலாம்.  நல்ல பழக்க வழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் மனிதனைப் பண்பட்ட மனிதன் எனலாம்.  பண்பட்ட உள்ளம் கொண்டவரைப் பண்பாட்டைப் பின்பற்றுவர்கள் எனலாம்.  பண்பாடு எனும் சொல்லிற்கு ‘செம்மைப்படுத்தல்’ என்னும் பொருளும் இச்சொல்லுக்கு அமையப்பெற்றுள்ளதை அறியலாம்.  ‘பண்பாடு என்பது எண்ணற்ற கூறுகளால் இணைக்கப்பெற்ற ஒழுங்கமைப்பு ஆகும்.  கற்றுணர்ந்து பகிர்ந்து கொள்ளப்படும் நடத்தை முறைகளின் தொகுப்பே பண்பாடு என மானிடவியலாளர் கூறுவர்.  மேலும், சீர்படுதல், பண்ணுதல் என்ற பொருளும் பண்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.

மருத நில ஊர்கள்
மருத நில ஊர்கள் மருத நில வேளாண்மை பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் காட்டு நிலத்திற்கும், கடலோர நிலத்திற்கும் இடைப்பட்ட நீர் வளமிக்க ஆற்றுப்படுகையில் அமைந்த ஊர்களை மருத நில ஊர்கள் என அழைக்கபடுகிறது.  இப்பகுதியில் மருத மரங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன.  இந்நிலப்பகுதி பல்வேறு பயிர் வகைகளை வேளாண்மை செய்ய ஏற்ற நிலவளமும் நீர் வளமும் கொண்ட பகுதியாக உள்ளன.  மருத நில ஊர்களைச் சுற்றிலும் குளிர்ந்த வயல் பரப்புகள் காணப்பட்டன.  பல்வகை உணவுப் பொருட்கள் கொண்ட (நெற்கூடுகள்) குதிர்கள் வீடுகளில் இருந்தன.  மக்கள் வாழ்கை வேண்டிய பல் பொருளும் நிரம்பியிருத்தலினாலே மருத மக்கள் பசியின் கொடுமையை அறியாதிருந்தனர் என்பதை

Continue Reading →

கவிதை: சேகுவேரா!

மாவீரன் சேகுவேரா!

மானுட விடுதலைக்காகத்
தன்னுயிர் தந்த
மாவீரன்.
மறைந்தும் இவன் புகழ்
இன்னும்
மங்கவில்லை மானுடர்தம்
மனங்களில்.

மரணப்படுக்கையிலும் இவன்
மனவுறுதி மலைக்க வைப்பது.

இவன் சிந்தனைகள்,
இவன் எழுத்துகள்
இவன் வாழ்வு
போர் சூழ்ந்த உலகில்
படிக்க வேண்டிய பாடப்
புத்தகங்கள்.

Continue Reading →

’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்

’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதுபோல், இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி. ஒரு மசாலாப் படத்திற்குரிய எல்லா இலட்சணங்களும் இதற்கு உண்டு என்று அப்பட்ட உண்மைத்தனத்தோடு இந்த நிகழ்ச்சி பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறியிருந்தால், பின், இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமிருக்காது.

அப்படிக்கூட உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பெயரில் தகாததாக எந்தக் கருத்தையாவது, காட்சியையாவது ஒலி-ஒளிபரப்பினால் கண்டிப்பாக பொதுமக்கள், பார்வையாளர்கள் கேட்பார்கள் தான்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கூட்டுப் பாலியல் வன்முறை தொடர்பான காட்சிகள், வசனங்கள் ஒளிபரப்பட்டதற்காய், குடும்பத்தார் – குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சியில் அத்தகைய காட்சி ஒளிபரப்பட்டதற்காய் வழக்கு தொடரப்பட்டு அதற்காய் அபராதம் விதிக்கப்பட்டதோடு அத்தகைய காட்சியமைப்புக்காய் ஒரு வாரம் அந்த நாடகத்தின் ஆரம்பத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், ‘பிடிக்காவிட்டால் சேனலை மாற்றிப் போகவேண்டியது தானே. கைவசம் ரிமோட் இல்லையா என்ன?’ என்று கேலி பேசி கடந்துபோய்விடப் பார்ப்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் தோன்றுகிறது.

தொலைக்காட்சி மெகாத்தொடர் நாடகங்கள் முன்வைக்கும் பெண் குறித்த பிற்போக்குக் கருத்துகள் கொடூரமானவை. அதற்காக, அவற்றோடு ஒப்பு நோக்கி நாங்கள் குறைவாகத்தானே பழித்தோம் என்று BIGG BOSS தப்பித்து விட முடியாது. அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், Promotional செயல்பாடு கள், ஏதோ அண்டப் பேரதிசயம்போல் அதைப் பற்றி ஊடகவெளிகளி லெல்லாம் ஒரே முழக்கமாயிருந்தது,

Continue Reading →

பதிவுகளில் அன்று: மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்!

திலகபாமா

பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்


பதிவுகள் மே 2008 இதழ் 101

பெண் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்ல எங்கெங்கும் இரண்டாவது பிரஜையாக, இரண்டாவது பாலினமாக குறைத்து மதிப்பிடப் படுவதும், வாய்ப்புகள் மறுக்கப் படுவதும் உடைமைப் பொருளாக ஆக்கப் படுவதும் அவளது உடல் நுகர்வுப் பொருளாக உருமாறியிருப்பதும் கண்கூடு. இத்தன்மை ஒட்டு மொத்த சமூகத்தின் நாளைய எதிர்கால வளர்ச்சிக்கு எதிரான ஒன்றாகும். எந்த ஒரு மனிதனும் இன,பால் அடையாளங்களினாலோ அல்லது சாதிய , வர்க்க , மத வேறு பாடுகளினாலோ குறைவாக மதிப்பிடப் படுதல் , ஆதிக்க மனோ நிலைக்கு வித்திடுமொன்றாகிப் போகின்றது. ஆதிக்க மனோ நிலை அடிமைத் தனம் உருவாவதற்கு காரணமுமாகின்றது

அதுவும் நமது கலாசாரத்திற்குள் இருந்தும் நமது வாழ்வியலில் இருந்தும் பெண் எந்தெந்த இடத்தில் எல்லாம் வேதனைக் குள்ளாக்கப்படுகின்றாள் என்பதை இக்கட்டுரை பேசுகின்றது. காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் என்று பாரதி சொன்னதற்கிணங்க நமக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணங்களை உணராததையே இயல்பாக மாற்றிக் கொண்டிருப்பதையும் யோசிக்க வேண்டியிருக்கின்றது. சம்பவங்களின் இடமும் சாட்சியங்களின் நிகழ்வும் பிரதேச அரசியலை பேசினாலும் அதன் உணர்வுகள் பிரதேச இன எல்லைகளை கடந்து ஒடுக்கப் படுபவர்களின் அடிமைத் துயரங்களை சொல்லி ஆதிக்க மனோ நிலைக்கெதிரான குரலாக, பொதுமையடையக் கூடும்

சுயமிழத்தல்
மனிதன் எனும் ஒட்டு மொத்தத்திற்குள் பெண் தன்னை காலம் காலமாக இரண்டறக் கலந்தபடியும் பெண் தன் சுயத்தை இழந்து ஆணுக்கானவளாக வடிவமைக்கப் பட்ட படியும் இருந்திருக்கின்றாள். அவளுக்கான மனித இருப்பு சமூகம் கலாசாரம் , பண்பாடு என்னும் பெயரால் மறுக்கப் பட்ட படியே இருக்கின்றது.

காலம் காலமாக முன்னோர்களால் சமூக நல்வாழ்விற்காக வடிவமைக்கப் பட்ட கலாச்சாரங்களும் , பண்பாடும் மாறுகின்ற காலங்களின் போது அதன் மாறுதல்களை மறந்து மறுத்து காலாவதியாகி வெறும் சடங்குகளாக பலநேரங்களில் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது. வெற்றுச் சடங்குகள் சிந்தனையின் திசை மாற்றி மேலும் மேலும் பெண்ணை புதிய மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியாதவளாக உறைய வைத்து விடுகின்றது ஆயிரம் அறிவியல் தொழில் நுட்பங்களின் பின்னரும் சுயாதீனமாக செயல் பட முடியாதவளாக பெண்ணை முடக்கி விடுகின்றது.

Continue Reading →