வாசிப்பும், யோசிப்பும் 350 : மறக்க முடியாத காண்டேகர்!

‘காந்தியப் பண்பும் ‘வெண்முகில்’ நாவலும் ‘ என்னும் தலைப்பில் எழுத்தாளர் காண்டேகரின் நாவலான ‘வெண்முகில்’ பற்றிய திருமதி.பா.சுதாவின் ஆய்வுக்கட்டுரை ( தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளிலொன்று; பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது) காண்டேகர் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி விட்டதெனலாம்.

என் பதின்ம வயதுகளில் வாசிப்பு வெறி பிடித்துத் தேடித்தேடி வாசித்த எழுத்தாளர்களில் காண்டேகருக்கு முக்கியமானதோரிடமுண்டு. மராட்டிய எழுத்தாளரான காண்டேகர் தமிழில் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களிலொருவராக அறுபதுகளில், எழுபதுகளில் விளங்கிக் கொண்டிருந்தார். எழுத்தாளர் கா.ஶ்ரீ.ஶ்ரீயின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான காண்டேகரின் நாவல்களைத் தமிழ் வாசகர்கள் விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்தார்கள். காண்டேகரின் பல படைப்புகள் பல தமிழில் வெளியான பின்னரே மராத்தியில் வெளியாகின என்று எழுத்தாளர் ஜெயமோகன் காண்டேகர் பற்றிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகின்றது. அவ்வளவுக்குக் காண்டேகரின் புகழ் தமிழ் இலக்கிய உலகில் பரவியிருந்தது.

Continue Reading →

ஆய்வு: காந்தியப் பண்பும் ‘வெண்முகில்’ நாவலும் (7)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


மொழிபெயர்ப்பு நாவல்களில் முதன்மை இடத்தில் சிறப்புற்று விளங்குவது மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர் நாவல்களாகும். இவருடைய வெண்முகில் எனும் நாவலில் அரசியல் கூறுகள் உள்ளிட்ட பல கூறுகள் காணப்படுகின்றன. இக்கூறுகளில் முதன்மையிடத்தில் விளங்குவது காந்தியக் கொள்கைகள் என்பதாகும். ஏனெனில், குமரி முதல் இமயம் வரை மகாத்மா காந்தியடிகளைப் பற்றியும், அவருடைய கொள்கைகளைப் பற்றியும் அறியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதனால் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் காந்தியக் கொள்கையினைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான காரணம் தற்காலத்தில் காந்தியத்தை மறந்துபோகின்ற தருணத்தில் மக்கள் இருக்கின்றார்கள். இதனை வலியுறுத்தும் விதமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது
.
காந்தியக் கொள்கை
இந்திய வரலாற்றில் திலகரின் ஆதிக்கத்திற்குப்பின் ஈடு இணையற்ற ஒரே மாபெரும் தலைவராக இருந்தவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார். அவரின் சமயம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றி பலரும் சிறை சென்றனர். அவ்வரலாற்று நிகழ்வுகளைத் தம் படைப்பில் பதிவு செய்தனர் எழுத்தாளர்கள். அவ்வகையில், சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்பினைக் காண்டேகரும் தன் படைப்பினுள் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவ்வகையில் காந்தியக் கொள்கையினைப் பிரதிபலிக்கும் விதமாக இவருடைய வெண்முகில் நாவல் அமைந்துள்ளது.

Continue Reading →

ஆய்வு: ‘மானவர்மன்’ வரலாற்று நாவலில் தமிழர் உணர்வு (6)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


நாவல் படைப்பதற்கென்று தனிப்பட்ட மரபு முறைகளை இலக்கிய உலகம் வகுத்தமைத்துள்ளது. வரலாற்று நாவலைப் படைக்கும்போது மொழிக்குரிய பற்றுணர்வும்  தேவைப்படுகின்றது. அதாவது இலக்கிய பெயர்கள், இலக்கிய வசன நடை அமைப்பு, அகம் மற்றும் புறம் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு வரலாற்று நாவலை பெரும்பாலான படைப்பாசிரியர்கள் படைக்கின்றனர். அதேபோல மானவர்மன் என்னும் இவ்வரலாற்று நாவலிலும் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு குறித்த செய்திகளை ஆசிரியர் உதயணன் அமைத்துள்ள விதத்தைக் கண்டறிந்து கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர் உணர்வு

மனித இனம் மொழிவுணர்வு கொண்டவையாகத் திகழ வேண்டும் எனப் பல்வேறுபட்ட அறிஞர்கள் தங்கள் எண்ணத்தில் ஒரே போல எடுத்துக்கூறி நின்றதைக் கண்டுணர்ந்துள்ளோம். அவ்வாறு இருப்பதனால்தான் தத்தம் படைப்புகளில் கூட தமிழர் என்ற உணர்வு மேலோங்கி நிற்கின்றது. இன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் அன்றைய காலத்திலிருந்தே இந்நிலை தொடர்கிறது. கவிஞர்கள், கதையாசிரியர்கள் என அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கின்றனர். இத்தன்மையைப் பற்றி, ‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவற்கோர் குணம் உண்டு, அமிழ்தம் அவனுடைய வழியாகும், அன்பே அவனுடைய மொழியாகும்’ (நாமக்கல் வெ.இராமலிங்கம், நாமக்கல் கவிஞர் கவிதைகள், ப.71) மேலும், ‘தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ் எங்கள் உயிர்’ (கல்பனாதாசன், பாரதிதாசன் பாடல்கள், ப.85) என்று கவிதைகளின் பாடியிருப்பதற்கேற்ற வகையில் படைப்பாளிகளும் திகழ்கின்றனர்.

Continue Reading →