ஆய்வு: நற்றிணை – வாழ்வியலின் நாகரிகம் (5)

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


உலகியல் வழக்கினும் நாடக வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
(தொல்)

அறிமுகம்
சங்க இலக்கியம் மக்களின் மூச்சாக உள்ளது. பண்பாடுகள் – கருத்தின் நாகரீகங்களாகவும் அமைந்துள்ளது. போற்றுதல் மரபினதாகவும் திகழ்ந்துள்ளது. விருந்தினரை உறவுகளாக கொள்வதுதான் மேன்மைகளாகும். புகழுக்காக வாழ்வதுதான் உயிர்களின் நிலைகளாகும்.

இயற்கைகளாலான இவ்வுலகில் வாழ்வோ தனித்துவமானது. தன்னம்பிக்கைகளோ எதிர்விசைகளை மூழ்கடிப்பது. உண்மை – பொய்மைகளை வெல்வது. நீதிநெறி தழுவாமல், ஒழுக்க விதிமுறைப்படி வாழ்வதுதான் மக்களினம். வாழ்க்கை முறையினை காலங்களுக்கேற்றார் போன்று இயைவதுதான் நற்றிணையின் சிறப்பமைவாகும். இத்தகைய தகவலோடும் கருத்தமைவின் ஒழுங்கியலையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

Continue Reading →

நனவிடை தோய்தல்: நடிகர் திலகத்துடன் நான்!

ஓவியர் கெளசிகன் வரைந்த நடிகர் திலகம்.இலங்கையில் வசிக்கும் ஓவியர் கெளசிகன் நடிகர் திலகத்தின் பிறந்ததினத்தையொட்டி அனுப்பிய நினைவுக் குறிப்புகள் இவை. 1997இல் நடிகர் திலகம் இலங்கை வந்தபோது அவரைச் சந்தித்ததையும், அவருக்குத்  தான் வரைந்த ஓவியத்தைக் கொடுத்ததையும் நினைவுகூர்கின்றார். அத்துடன் அந்நிகழ்வுக்கான காணொளியினையும் பகிர்ந்துகொள்கின்றார். மேலும் அந்நிகழ்வில் நடிகர் திலத்தை வைத்துத் தான் வரைந்த இன்னுமோர் ஓவியத்தையும் காட்டி அதில் நடிகர் திலகத்தின் ‘ஆட்டோகிராப்’பையும் வாங்கிக் கொள்கின்றார். அவ்வோவியத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றார் கெளசிகன். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. – பதிவுகள் –


சுமார் 22 வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் அவர்களை நான் சந்தித்த நிமிடங்களை , அனுபவங்களை தொகுத்து சிவாஜி சாரின் பிறந்ததினத்தன்று தருகிறேன். இதற்கு முன் நான் இவ்வளவு பெரிதாக எதையும்  எழுதியது கிடையாது. வாசிப்பவர்களுக்கு ஒருவேளை சலிப்பை உண்டாக்கும் என்ற நினைப்பில் படங்களை மட்டுமே முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

இதோ எனது அந்த மிக இனிமையான அனுபவம், வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாத சந்தோஷமான தருணங்கள்…

1997வருடம், ஜூலை மாதம்.

என் வாழ்நாளில் மறக்கவே முடியாத வருடம். அப்போது நான் ‘ மெட்டல் எம்போசிங் பெயின்டிங் ‘(metal embossing painting) எனப்படும் ஓவியக்கலையை  பயின்றுகொண்டிருந்தேன். திடீரென பத்திரிகைகளின் ஒரு செய்தி. நடிகர் திலகம் இலங்கை வருகிறார். “நடிகர் திலகத்திற்கு மீண்டும் முதல் மரியாதை” என்றவொரு பெரிய விழா அவருக்காக ஏற்பாடாகி வருகிறது என்று.

Continue Reading →