‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்
பதிவுகள் , ஏப்ரல் 2008 இதழ் 100
பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கத்தின் ‘பூந்துணர்’!நல்ல கலைஇலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதுதான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச்சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கினைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம்பெறப்பட்ட இலக்கியவடிவங்களை புடம்போட்டு கனகச்சிதமாக ‘பூந்துணர்’ எனும் நூலாக வெளிக்கொணந்துள்ளனர். பலரைச் சொன்னாலும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இவ் இலக்கிய வட்டம் தொடர்கிறது. ஈழத்து மட்டுவிலில் 1934 ல் பிறந்த பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக இங்கிலாந்திலும் தன் இலக்கிய பயணத்தைத் தொடர்கிறார்;. இவர் ஏற்கனவே ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பன்முகஆற்றல் உள்ளவர். நேரம் தவறாமை என்பது இவரது கொள்கைகளில் ஒன்றாகும்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் யுகசாரதி என்னும் பெயரில் அறியப்பட்ட திரு. எஸ் .கருணானந்தராஜா இவரது பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம் எனும் ஆய்வுநூலுக்காக தமிழக ஸ்ரீராம் நிறுவனத்தினரால் ‘பாரதி இலக்கிய செல்வர்’ எனும் பட்டம் பெற்றவர். நடிப்பிலும் ஆற்றல் மிக்க இவர் ஏற்கனவே நான்கு நூல்களை வெளியிட்டவர்.திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ் ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர். இவரது ஈழத்தாயின் சபதம் இன்றும் பலராலும் பேசப்படுகிறது. திரு.க. சிவானந்தன் அவர்கள் தமிழ்ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்…. தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர்.