நன்றி வரைத்தன்று…..

“திடீரென்றுஅலுவலகம்புகுந்தஅந்தத்தெருநாயின்சேறு படிந்தகால்தடம்நாள்தோறும்வீட்டிற்குவெளியில்கிடக்கும்அப்பாவின்சேறு அப்பியசெருப்பினைநினைவுப்படுத்துகிறது….வாலாட்டியேகடந்துபோகும்அதன்வாலசைவிற்குமண்டியிட்டதுஎன் வாழ்க்கை….” suniljogheema@gmail.com

Continue Reading →

அலைபேசியில் அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளர் வி.என்.மதியழகன்!

ம் பதின்ம வயதுகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்புச் சேவையில் ஒலித்த குரல்களில் என்னைக் கவர்ந்த குரல்களாகப் பின்வருவோரின் குரல்களைக் கூறுவேன்: இராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீட், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், வி.என். மதியழகன், சற்சொருபவதி நாதன். இவர்களெல்லாரும் தொழிலைத் தெய்வமாக மதித்தவர்கள்; மதிப்பவர்கள். கடுமையான உழைப்பினால் வானொலியில் எவ்விதம் சீராகத் தம் குரல் வளத்தைப் பாவிக்க வேண்டுமென்பதில் திறமையானவர்கள். பன்முக அறிவாற்றலைப் பெருக்கிக்கொண்டவர்கள். அதனால்தான் இன்றுவரை இவர்கள் இன்னும் எம் நினைவுகளில் நிறைந்திருக்கின்றார்கள்.

இன்று காலை என் அலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. சனி காலையே நேரத்துடன் வந்த அழைப்பைத் தவற விட்டுவிட்டேன். ஆனால் அதுவும் ஒரு விதத்தில் நன்மையாகவே முடிந்தது. தனது இன்குரலால், வானொலியில் உரையாற்றுவது போன்றே தன் தகவலையும் அலைபேசியில் பதிவு செய்திருந்தார். அக்குரலில் அத்தகவலைக் கேட்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் அவர் குரலுக்கு அடிமையாகி அவர் வாசிக்கும் செய்திகளைக் கேட்பதுண்டு. அதே குரலை அதே மாதிரி இன்றும் கேட்க முடிந்தது உண்மையில் மகிழ்ச்சியே. அக்குரலுக்குச் சொந்தக்காரர்: வி.என்.மதியழகன்.

Continue Reading →

வாழ்வை எழுதுதல் – அங்கம் 02: அஞ்சலிக்குறிப்புகள் – இலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி மறைந்தார்

எமது  இலக்கியக்குடும்பத்தின் சகோதரி தங்கேஸ்வரி மட்டக்களப்பில் மறைந்தார் என்ற செய்தி வந்ததும் சற்று அதிர்ச்சியாக இருந்தது. இலங்கைப்பயணத்தில் இம்மாதம்   ( ஒக்டோபர் ) 08 ஆம் திகதி அவரை, அவரது மட்டக்களப்பு  இல்லத்தில் சந்தித்தேன். அவர் கடந்த சில வருடங்களாக  இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர். அவ்வப்போது தொலைபேசியில் உரையாடி அவரது உடல்நலம்  பற்றிக்கேட்பதுண்டு. அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தமையால், எனக்குத்  தெரிந்த சில அரசியல் பிரமுகர்களிடம் அவர் பற்றிச்சொல்லி, சென்று பார்ப்பதற்கு ஆவனசெய்யுமாறும், அவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவுவதற்கு ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தேன்.  எனினும் எவரும் அவரைச்சென்று பார்த்திருக்கவில்லை என்பதை அன்றைய தினம் அறிந்துகொண்டேன். நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுடன் அவரை பார்க்கச்செல்லும்போது பிற்பகலாகியிருந்தது.

வீட்டின் கதவை தட்டியபோது,  உள்ளிருந்து  “ யார்..?  “ என்ற அவரது குரல் கேட்டது. எமது பெயரைச்சொன்னதும்  “ கதவு சும்மாதான் சாத்தியிருக்கிறது வாருங்கள்  “  என அழைப்புக்குரல் கொடுத்தார். அவர், தரையில் ஒரு துணியை விரித்து படுத்திருந்தார். பார்த்ததும் நெகிழ்ந்துவிட்டேன். “  என்னம்மா… இப்படி தரையில் படுத்திருக்கிறீர்கள்..?  “ எனக்கேட்டேன்.

“தரையில் படுத்திருப்பது சுகமாக இருக்கிறது “  என்றார். நாமும் அவர் அருகில் தரையில் அமர்ந்துகொண்டோம்.  

“ அவருக்கு வாழைப்பழம் ஒவ்வாமையானது. வாங்கவேண்டாம். “  என்றார் நண்பர். அதனால் அப்பிள் பழங்களுடன் சென்றேன்.

“ உங்களுக்கு ஏனம்மா வாழைப்பழத்தின் மீது கோபம் ? “  எனக்கேட்டேன்.

“ அதில் அதிகம் பொட்டாசியம் இருக்கிறது. சிறுநீரக உபாதையுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பழம்.  அதில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதனால், குடலிலிருந்து அதிகம் தண்ணீரை உறிஞ்சிவிடும்   “  என்றார்.  அவரது உடல்நிலையறிந்து கவலைப்பட்டோம். எஞ்சியிருந்த ஒரு பூர்வீக காணியையும் விற்று மருத்துவச்செலவுகளை கவனித்ததாகச் சொன்னார்.  கதிர்காமம் பற்றிய பூர்வீக வரலாற்றை எழுதி முடித்திருப்பதாகவும், என்னுரைதான் எழுதவேண்டியிருக்கிறது. அதற்கிடையில் கண்பார்வை குறைந்துவிட்டதாகவும், இனி கண் சிகிச்சையும் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது என்றார்.

Continue Reading →

குழாய்க்கிணற்றினுள் குழந்தை! மீண்டு வர வேண்டுவோம்!

மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள்  தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்காக அனைவரும் போரடிக்கொண்டிருக்கின்றார்கள். தற்போது ஆழ்துளக்கிணறுக்கருகில் இன்னுமொரு துளையிட்டுச் சென்று காப்பாற்றும் வகையில் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. குழந்தையை விரைவில் மீட்டெடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்; வேண்டுதல் செய்வோம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 353: எழுத்தாளர் நந்தினி சேவியரின் கடல்புத்திரன் பற்றிய முகநூற் பதிவு!

எழுத்தாளர் நந்தினி சேவியர்எழுத்தாளர் நந்தினி சேவியர் தான் படித்த சிறுகதைகள் மூலம் அறிந்த எழுத்தாளர்களையும், அவர்களது சிறுகதைகளில் தனக்குப் பிடித்த சிறுகதையையும் பற்றி முகநூலில் எழுதிவரும் சுருக்கக் குறிப்புகள் முகநூலில் மிகுந்த வரவேற்பைப்பெற்றவை. அவற்றில் அவரது ஆரம்ப அறிமுகக் குறிப்புகளை உள்ளடக்கிய தொகுதி ஒன்று ஏற்கனவே இலங்கையில் கொடகே பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. நந்தினி சேவியரின் இம்முகநூற்  குறிப்புகள் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தவை. அதற்காக அவருக்கு தமிழ் இலக்கிய உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.

அண்மையில் அவர் எழுதிய நானூற்றி எண்பத்தியேழாவது குறிப்பினை வாசித்தேன். பதிவுகளில் தனது சிறுகதைகள் மூலம் அறியப்பட்ட எழுத்தாளர் கடல்புத்திரன் (ந.பாலமுரளி) பற்றியத் அக்குறிப்பு. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கடல்புத்திரனின் நாற்பத்தியொரு சிறுகதைகளை சிறுகதைகள்.காம் இணையத்தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: http://www.sirukathaigal.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/5/


முகநூற் பதிவு: பிடித்த சிறுகதை. – 487 – நந்தினி சேவியர் –

நான் ஒரு மா.ஓ வாத இடது சாரி இயக்கத்தைச் சேர்ந்தவன். 50 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல், இலக்கிய அனுபவத்துடன் இன்றும் நிறம்மாறாது இருப்பவன். தமிழ் தேசிய இயக்கங்கள் தலையெடுத்த காலத்திலும் அந்த அலைகளில் அள்ளுண்டு போகாதவன். தமிழரசுக்கட்சியின் தீவிர விமர்சனாக இருந்தபோதும் அவர்களின் அபிமானிகள் மத்தியில் எனக்கான நட்புவட்டம் இருந்தது. அதேபோல் இயக்க காலத்திலும் சகல இயக்கக்காரர்கள் மத்தியில் உள்ள இலக்கியக்காரர்களிடம் எனக்கான ஆதரவு இருந்தது. அவர்களுக்கு நான் யாரையும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்ற நம்பிக்கை இருந்தது. நான் அரச அராஜக நடவடிக்கைகளுக்கு எதிரானவன் என்பதை அவர்கள் அறிவார்கள். இலக்கிய ரீதியான நட்புடன் என்னோடு பழகிய சிலரை நான் இழந்து விட்டேன். அவர்களில் சகோதரப்படுகொலை செய்யப்பட்டவர்கள் அதிகம். நான் எழுதப்போகும் இவர் ஒரு இயக்கக்காரர். இடதுசாரி சிந்தனையை ஏற்றுக்கொண்ட இயக்கக்காரரே என்னோடு நிறைந்த உறவுடன் இருந்தனர். ஈரோஸ், புளட், ஈபிஆர்எல்எவ். என்எல்எவ்ரி இயக்கங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டியவை. நான் ‘ஈழமுரசு ‘ பத்திரிகையிலும் சில காலம் கடமையாற்றியிருக்கிறேன். என் சுயத்தோடு. இவர் முன்நாள் ‘புளட் ‘ இயக்கத்தைச்சேர்ந்தவர். எனக்கு அறிமுகம் இல்லாதவர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 352: கடல்புத்திரனுடன் சில நிமிடங்கள்….

கடல்புத்திரன்– அண்மையில் முகநூலில் எழுதிய பதிவும் அதற்கான எதிர்வினைகள் சிலவும் இங்கு ஒரு பதிவுக்காக. – பதிவுகள் –


அண்மையில் எழுத்தாளர் கடல்புத்திரனுடன் அவரது ஆரம்ப கால இயக்க அனுபவங்களைப்பற்றிய உரையாடலொன்றின் போது அவர் கூறிய ஒரு விடயம் ஆச்சரியத்தைத் தந்தது. இவர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் கற்கை நெறி கற்று விட்டு ‘பில்டிங் சுப்பர்வைச’ராக யாழ்ப்பாணத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனமொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இவருடன் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் அதே கற்கை நெறி கற்ற இன்னுமொருவரும் இவருடன் அதே நிறுவனத்தில் அதே வேலை பார்க்கத்தொடங்கினார். பின்னர் அந்நிறுவனத்தில் வேலை முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து இருவரும் இயக்கங்களில் இணைந்து போராட முடிவெடுக்கின்றார்கள். இவரது நண்பர் புலிகளுடன் இணைய முடிவெடுக்கின்றார். இவருக்கு எந்த இயக்கத்தில் இணைவது என்பதில் குழப்பம். போதிய விளக்கமில்லை. இன்னும் விளக்கம் வேண்டுமென்று நினைக்கின்றார். இச்சமயத்தில் இவரது நண்பர் தனது மச்சானொருவன் ‘புளட்’ட்டில் இருந்ததாகவும்,, ஆனால் அவன் மேற்கு நாடொன்றுக்குச் சென்று விட்டதாகவும், வேண்டுமானால் அவன் வைத்திருந்த அரசியல் பிரசுரங்கள் எல்லாம் தன்னிடமிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு வந்து தருவதாகவும் கூறுகின்றார். இவரும் அதற்குச் சம்மதிக்கவே இவரது நண்பர் அப்பிரசுரங்கள், நூல்களையெல்லாம் கொண்டுவந்து இவரிடம் கொடுக்கின்றார். அவற்றை வாசித்து விட்டு இவர் முடிவெடுக்கின்றார் ‘புளட்’டில் இணைவதாக. அதே சமயம் இவரது நண்பரோ புலிகளுடன் இணைந்து விட்டார். பின்னர் அவர் போராட்டத்தில் மரணித்தும் விட்டார்.

இது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. புலிகளுடன் இணைந்து போராடச் சென்ற ஒருவர் தன் நண்பருக்கு புளட்டிலிருந்த மச்சானின் அரசியல் பிரசுரங்கள், நூல்களைப் படிக்கக் கொடுக்கின்றார். தன்னுடன் வா என்று அவர் அழைக்கவில்லை. இவ்விதம்தான் 83 இனக்கலவரத்தையடுத்து ஆயிரக்கணக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப்போராடப் புறப்பட்டார்கள். அதற்குக் காரணம் அன்றைய ஜே.ஆரின் அரசின் அடக்குமுறைகள். அவ்விதம் புறப்பட்டவர்களுக்கிடையில்; இயக்கரீதியான முரண்பாடுகள் எவையுமிருக்கவில்லை. இயக்கமெதுவானாலும் போராடச் சென்றால் சரி என்ற எண்ணமே இருந்தது. ஆனால் பின்னர் இவ்விதம் போராடப்புறப்பட்டவர்கள் ஒருவரையொருவர் கொன்று குவிக்கும் நிலை ஏற்பட்டது துரதிருஷ்ட்டமானது.

Continue Reading →

ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டி நிற்போம் !

தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !

Continue Reading →

ஆய்வு: காப்பியமாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை தமிழ் இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் அற இலக்கியங்கள் காப்பிய இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்குரிய காப்பிய இலக்கியங்கள்.

அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அற இலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்துக்; கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப் பதிவாய் அமைந்ததும் தனிச் சிறப்பாகும். தாம் தோன்றிய சமூகக் கட்டமைப்புக்குக் உட்பட்டு அதே நேரத்தில் சமூக மேன்மைக்குக் காரணமான தங்களது உள்ளக்கிடக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் படைப்புகளின் வழி பதிவு செய்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காப்பியப்;பெருமக்கள். இது இவர்களுடைய ஆளுமைத்திறனாகும். இவ்வாளுமைப்பண்பை உணர இவர்கள் தம் படைப்புகளை ஆழ்ந்து நோக்கவேண்டும்.

படைப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே படைப்பின் நோக்கம் பற்றியும் அறியஇயலும். அவற்றின்வழி அப்படைப்பு தோன்றிய சமூகம் பற்றியும் உணரவியலும். சமுதாயத்திற்குத் தன் உருவாக்கத்தின் வழி ஏதோ ஒன்றைக் கூறவியலும் ஆசிரியனின் உள்ளக்கிடக்கையை உணரமுடியும். அவ்வாறில்லாமல் ஓர்காப்பியத்தைச் சுவைக்காகப் பொழுதுபோக்கிற்காகப் புத்திலக்கியம் என்ற நிலையில் மட்டும் காண்பது சரியானதல்ல. காப்பிய ஆசிரியனின் ஒவ்வொரு படைப்பும் நல்லகருத்து உருவாக்கத்திற்கே. அந்த சமூகநோக்குச் சிந்தனையைக், கருத்தினைத் தான் உருவாக்கிய மாந்தர் படைப்புளின் வழி அவ்வாசிரியன் வெளிக்கொணருகின்றான்.

Continue Reading →