சிறுகதை: ஒரு கதையின் ஸ்டோரி

சிறுகதை: ஒரு கதையின் ஸ்டோரி– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் பெப்ருவரி 2005 இதழ் 62

ஆகஸ்ட் மாதத்தில் ஓலைச்சுவடி இதழில் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் அதன் தேதியைத் துல்லிதமாகச் சொல்ல முடியவில்லை. ஆகஸ்டின் முற்பகுதியாகத்தான் இருக்க வேண்டும். அருமையான அச்சு வார்ப்புள்ள அந்த இதழில் அந்தக்கதை தோற்றம் பெற்றிருந்தது.  மிகுந்த உயிர்த் துடிப்புடன் இருந்தது அந்தக் கதை. அதன் நடை சுண்டி வசீகரிக்கும் அழகு. அந்தக் கதையை முதன் முதலில் படித்தவர்கள் அது ஒரு பெரும் மாயத் தோற்றம் என்றும் அதன் பின் பெரும் மர்மங்கள் அடங்கியிருப்பதாகவும் நம்பினார்கள். மிகவும் படித்தவர்களும் இலக்கிய ரசிகர்களாக உள்ளவர்களையுமே அந்தக் கதை கவர்ந்தது. அந்தக் கதையைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர் தங்கள் காலண்டர்களைத் திருப்பிப் பார்த்துவிட்டு அந்தக் கதை வெளிப்படுவதற்கு இது சிறந்த மாதமே என்றார்கள். இந்த மாதத்தில்தான் பல காலனித்துவ நாடுகள் சுதந்திரம் அடைந்ததெனவும், அதுவும் பல சுதந்திரங்கள் நள்ளிரவில் பெறப்பட்டன என்றும் அதற்கும் இதற்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்றும் அவர்கள் தங்கள் இளைய தலைமுறையினருக்கும் வாசக சகாக்களுக்கும் தெரிவித்துக் கொண்டார்கள். சிலர் அந்தக் கதையைப் படித்து கண்கள் கலங்கினார்கள். இப்படியும் ஒரு கதை இருக்க முடியுமா என அழுது குரல் கம்மிப் பிறருக்குச் சொன்னார்கள். அவர்கள் கண்கள் கதையில் நிலைகுத்தி இருந்ததோடு படபடக்கும் மார்பை வலது கைகளினால் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: பெண்களை காவியமாந்தர்களாக படைத்தவர்களும், பெண்ணாகவே பார்த்த சிந்தனையாளர்களும் ஓவியா எழுதிய “ கருஞ்சட்டைப் பெண்கள் “

முருகபூபதிஇராமாயணத்தில் வரும் சீதை, மகாபாரதத்தில் வரும் குந்தி, காந்தாரி, திரௌபதி, சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மாதவி, நளவெண்பாவில் வரும் தமயந்தி பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள். இவர்களை படைத்தவர்கள் யார்…? என்று பார்த்தால், வால்மீகி – கம்பர் – வியாசர் – இளங்கோவடிகள் – புகழேந்தி முதலான ஆண்கள்தான். காளிதாசர்தான் சகுந்தலையையும் படைத்தார். இந்தப்பெண்களையெல்லாம் கஷ்டப்படுத்திய இந்த ஆண்களின் படைப்புகளுக்கு எமது சமூகம் காவியம் என்றும் பெயர் சூட்டிக்கொண்டது. வள்ளுவரும் என்ன செல்கிறார்: அடிசிற்கினியாளே… அன்புடைய மாதே பதிசொற் தவறாத பாவாய்… அடிவருடி பின்தூங்கி முன் எழுந்த பேதையே…. “ என்று தனது மனைவி வாசுகி மரணித்த பின்னர் அவளை சிதையிலே வைத்து தீவைப்பதற்கு முன்னர் பாடினாராம்! அவளது மரணத்தின் பின்னர் வள்ளுவருக்கு அடிவருடியது யார்..? என்பது தெரியவில்லை. இந்தக்கதைகளைப்பற்றியெல்லாம் யோசிக்கவைத்திருக்கிறது – மறுவிசாரணைக்குட்படுத்துகிறது ஓவியாவின் கருஞ்சட்டைப்பெண்கள் நூல்.

எமது வாழ்நாளில் பலதரப்பட்ட இஸங்களை பார்த்துவருகின்றோம். கம்யூனிசம், மார்க்ஸிசம், ஷோசலிஸம், இவை தவிர, கிளாசிசம் – மேனரிஸம் – ரொமாண்டிசிசம் – மொடர்னிசம், எக்ஸ்பிரஷனிசம் – ரியலிசம் – நச்சுரலிசம் – சிம்பலிசம் – இமேஜிசம் – எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்றெல்லாம் ஏராளமான இஸங்கள் இருக்கின்றன. ஆனால், ஆணிஸம் – பெண்ணிஸம் என்று எதுவுமில்லை. பெண்ணியம் இருக்கிறது. ஆண்ணியம் இருக்கிறதா..?

கம்யூனிஸ்ட்டுகளின் அடையாளம் சிவப்பு என்றால் சுயமரியாதை இயக்கத்தினரது அடையாளம் கருப்பு!  தந்தை “ பெரியார் பெரியார் “ என்று காலம்பூராவும் சொல்லிவருகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் தந்தை எனப்போற்றுகின்றோம். ஆனால், அவருக்கு பெரியார் என்ற பட்டத்தை யார் சூட்டினார்கள்..? என்று பார்த்தால், 1938 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் அவருக்கு அந்தப்பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி இந்நூலில் தெரியவருகிறது.

Continue Reading →

நாகூர் ரூமியின் (தமிழ்நாடு) சிறுகதைகள் இரண்டு!

– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் ஏப்ரல் 2005 இதழ் 64

1. பெற்றோர் பருவம்!

நாகூர் ரூமி“புள்ளெ வந்துட்டாளா?”

தனது இரண்டு சக்கர லாரியை போர்ட்டிகோவில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக்கொண்டே கேள்வியை தூக்கி வீட்டுக்குள் வீசினார் அப்துல் காதிர். ஸ்கூலில் இருந்து ட்யூஷனெல்லாம் முடிந்து அருமை மகளார் ஆறுமணிக்கு மேல்தான் வருவாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால் அலுவலகம் விட்டு வந்து அவர் வீட்டுக்குள் புகுவதற்கு முன் ‘புள்ளெ வந்துட்டாளா’ என்ற கேள்வி புகுந்துவிடும்.

வீரபத்ரனின் கழுத்தில் லாவகமாக மாட்டியிருந்த அவரது தோள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். அவர் கேள்விக்கு வீட்டிலிருந்த யாரும் பதில் சொல்லவில்லை. சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். அது ஒரு கேள்வியே அல்ல. அது ஒரு பழக்கம். வைத்த நேரத்துக்கு அலாரம் அடிப்பது மாதிரி, வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் வாயிலிருந்து அந்த கேள்வி புறப்பட்டுவிடும்.

“புள்ளெ வந்துட்டாளான்டு கேட்டேன்” என்று மனைவியைப் பார்த்துக் கொஞ்சம் கடுமையாகச் சொன்னார். அடுப்பங்கரையில் அவருக்காக டீ போட்டுக்கொண்டிருந்த ஹஸீனாவின் இதழோரம் கோணலாக ஒரு புன்னகை ஊர்ந்தது.

“அவ ஆரறை மணிக்கித்தான் வருவான்னு தெரியும்ல, ஏன் சும்மா கேட்டுக்கிட்டே இரிக்கிறீங்க? மணி இப்ப அஞ்சறெதானே ஆவுது?”

Continue Reading →

ஞானமே!!!

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -

“ஞானநிலையோடே
அது சிரிக்கின்றது…
பிரிப்படாத
வண்ணங்களில்
புழுதியேறி
அகலத்திறந்த
அதன் வாய்க்குள்
சில கொசுக்களும்
ஈக்களும்
ரீங்காரத்தோடு……
ஈக்கியாய்
உலரும்
பொட்டல்
வெயிலிலும்
அதன் சிரிப்பில்
சிறிதும்
மாற்றமில்லை…

ஆய்வு: குறுந்தொகை காட்டும் வேட்டைக் குடியினா்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?– பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 –


நாடோடியாகச் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் ஒரு குடும்பமாக, இனக்குழுவாக, சமுதாயமாக வளா்ச்சியுற்றுப் பின்னா் நிலவுடைமை, அரசுடைமைச் சமுதாயமாக சங்ககாலத்தில் தொடங்கியோ தொடா்ந்தோ குடிகளுள் ஒருவனாக மாறினான். நில அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் வேட்டுவா்கள், ஆயா், கானவா், உழவா், பரதவா் என்னும் வகைகளாகப் பகுக்கப்பட்டதை தமிழ் இலக்கணங்கள் கூறுகின்றன. குடிவழியோடு குயவா், தச்சா், பாணா், பொற்கொல்லா் போன்ற தொழில்வழிச் சாதியினரும் தோற்றம் பெற்றனா், ஒத்த குடிவழியோ ஒத்த தொழில்வழியோ ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் வாழ்ந்ததால் ஓா்குடிமக்கள் எனப்பட்டனா். குடிவழியறியப்பட்ட வேட்டுவா்களைப் பற்றி குறுந்தொகைப் பாடல்கள் வழி அறியமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறவா் குடி :

ஆதிமனிதனின் முக்கியத் தொழிலாக இருந்தது வேட்டைத் தொழில். மலைநிலம் சார்ந்த நிலங்களில் உருப்பெற்றதால் வேட்டைத் தொழில் குறிஞ்சித் திணை சார்ந்து அறியப்பட்டது. குறிஞ்சியோடு முறைமை திரிந்து பாலையாகப் படிமங்கொள்ளும் போதும் வேட்டைத் தொழில் தொடா்ந்ததை தமிழிலக்கியவெளியில் காணமுடிகிறது.

Continue Reading →

புதிய தலைமுறையை உருவாக்குவோம்

- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -

புதிய தலைமுறையை உருவாக்குவோம்
ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
புது வருடம் பிறக்கிறது
புது புது சிந்தனைகளோடு
போராட்ட குணங்களோடு
சமூக விஞ்ஞான உணர்வுகளோடு
புது உலகத்தைப் படைத்திடுவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

Continue Reading →

காரிகைக் குட்டி கவிதைகள்!

காரிகைக் குட்டி

காலக் கடிதக் குறிப்புகளின் பயணம்.

சில கடிதங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முன் வந்திருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த
அதே முகவரி.

கடிதம் அடைய வேண்டிய முகவரி மாறாதிருந்தாலும்
அதனை அனுப்பும்
நபர்களின் முகவரிகள் நிச்சயமாய்
வேறாகவே இருந்தது.

அதே போல் மற்றொன்றாக ஒரு தகவல்
அக்கடிதங்கள் வெவ்வேறு காலத்தில்
அதே முகவரியில் வாழ்ந்த வேறு வேறு நபர்களுக்கானது.
எனில், அது வேறு வேறு காலத்தில் எழுதப்பட்டவைகளே.
அவ்வெழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில்
அந்நபரின் குறிப்புகளை முதலில் கண்டடைதல் வேண்டும்.
பழங்கால எகிப்திய நாகரீக ‘கியூனிபார்ம்’ எழுத்துக்களையும்,
சிதைந்த ‘சிந்து எழுத்து’ முறைகளுமாய் இருக்குமெனில்
நைல்நதியின் பாதையோடும்,
தோலால் வரையப்பட்ட மேப்பில் குறிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
ஈரானிய ‘மெசபடோமிய’ நாகரீகத்திற்குள் நுழைந்து
அந்நபர் குறித்த தகவலை நாம் திரட்டியாக வேண்டும்.

இக்கடிதத்தையும் பிரிக்க வேண்டாமென்ற குறிப்புகளோடு
எனது மேசையின் மேல் உறைகிழிக்கபடாமல்
வெறித்தப் பார்த்தன அவ்வெழுத்துகள்…
பெருநாட்டு நீண்ட அலகு பறவையாய்.

* கியூனிபார்ம், சிந்து எழுத்து – இரண்டும் பழங்கால சித்திர எழுத்து முறைகளுள் ஒன்று.

Continue Reading →

முனைவர்.சி.திருவேங்கடம் கவிதைகள்!

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

தள்ளாட்டம் …

உள்ளத்தின்
ரணம் ஆற
அருமருந்தென
கூடா நண்பனின்
பரிந்துரைப்பை
செவிமடுத்து
கேட்டு
கண்ணாடிக்
கோப்பைக்குள்
திரவத்தை
ஊற்றிக் கொஞ்சம்
உறிஞ்சிக் குடித்தேன்.

Continue Reading →

கவிஞர் பூராமின் கவித்துளிகள்!!

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1
வந்து விழுந்த
சூரியக் குழந்தை
அழுது ஆர்ப்பாட்டம் செய்தது,
கண் குளத்தின் தண்ணீர்
ஊற்று பொங்கி வழிய
இதய வானில் அன்பு
ஆவேசமானது
எதையாவது கொடுத்து
அழுகையை நிறுத்திவிட
முயற்சிகள் எல்லாம்
அழுகையின் வீரியத்தில்
அடங்கிப் போயின.
கையறு நிலையோடு நின்ற
என்னைக் கள்ளப் பார்வை
பார்த்து மீண்டும் மீண்டும்
அழுகையின் உச்சத்திற்குச் சென்றது.
உடல் சோர்ந்து மனம் அயர்ந்து
அமைதியின் மடியில் அகப்பட்டு
கண்ணை முடினேன்
காதுகளுக்கு அழும் ஓசையின்
சுவடுகூட தென்படவில்லை
ஆழ்ந்த பெருமூச்சோடு கண் திறக்க
மன மற்று இருக்கும் வேளையில்
பிரகாசமான அகஒளியில் நான்.
வெறுமையின் நிறைகுடத்தில்
ததும்பி வழிகிறேன்.

Continue Reading →

புது வாழ்க்கை

சிறுகதை: புது வாழ்க்கைவண்டி மேற்காமா கிளம்ப, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் எனக் கண்டக்டர் கூவிக் கொண்டு இருக்க, டிரைவர் ஆக்ஸ் லேட்டரை லேசாக அழுத்திக் கொண்டே இருக்க வண்டி புறப்படுவது போல… உறுமிக்கொண்டு இருக்கு, “ஒட்டன் சத்திரம், தாராபுரம் இருந்தா ஏறு, இடையிலே… எங்கயும் நிக்காது… பைப்பாஸ் வழியா போறது…” எனக்கத்திக்கொண்டே இருந்தார்.

“டைம்பாஸ் கதைப்புத்தகம் சார், அஞ்சு இருபது ரூபா சார், அஞ்சு இருபது ரூவா… எந்தப் புத்தகத்த வேணும்னாலும் எடுத்துக்கிடலாம்… சார் டைம்பாஸ் புத்தகம் சார்…” கூவிக்கிட்டே ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கினான்…

“என்ன இவன் பழைய புத்தகத்துக்கு விலைச் சொல்லுறானே ஒன்னும் புரியலயே…” 60 வயது நிரம்பிய பெரிய மனுஷன் புலம்பிக்கிட்டே “காலம் மாறிப்போச்சு…”

“மாதுளை கிலோ எம்பது, எம்பது”

“வெள்ளரிக்கா பாக்கெட் பத்து ரூபாய்…”

“டக்! டக்! வேர்கடலை, வேர்கடலை…” எனக் கூவிக்கொண்டே தள்ளு வண்டியில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இயல்பான பரபரப்புடன் இருந்தது…

“சார் திருப்பூர், திருப்பூர் பைப்பாஸ்…”

“அக்கா மல்லிப்பூ மல்லிப்பூ. நூறு பத்துரூபா, ஒரு முழம் இருபது அக்கா. வாங்கிக்கக்கா…”

சாயங்கால மஞ்சள் வெயில் அடிக்க, மஞ்சள் நிற சேலையில் நாற்பது வயது மதிக்கதக்க நல்ல வாசனையோ இன்னும் இளமை நீங்காத முதுமை தொடாத நிலையில் பின்பக்க படியில் வேகமாக துள்ளிக் குதித்து ஏறி கடைசி சீட்டுக்கு முந்திய சீட்டில் வந்து அமர்ந்தாள், பஸ் மெல்ல ஊர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது… குரு தியேட்டர் திரும்பி… வைகைப்பாலம் கடந்து பாத்திமா கல்லூரி சாலையைப் பிடித்து போய்க் கொண்டு இருந்தது…

“டிக்கெட்… டிக்கெட்… எடுங்க” எனக் கேட்டுக்கிட்டு வர.. இதுவரை புரிந்தும் புரியாமலும் இருந்த புதுப்பாடலைப் போட்டதில் டிக்கெட் கேட்டவுக ஊர் சரியா கேட்காம மாத்திக் கொடுக்க… “மலைப்பாக, பாட்டச் சத்தமா வேற வச்சு… பாட்ட கேட்க முடியல… ஏங்க சத்தத்தை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்க…”

Continue Reading →