கணன் ஸ்வாமியின் ‘பரதேசியின் வலித்தொகை’

கணன் ஸ்வாமிநண்பர் கணன் ஸ்வாமியுடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் இன்று நடைபெற்ற தேடகம் அமைப்பினரின் முப்பதாண்டு விழாவின்போது கிடைத்தது. அப்பொழுது அவர் தமிழகத்துப் புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத்தமிழ் அகதி முகாமில் சுமார் பதினைந்து வருடங்கள் தான் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் அவர் நண்பர்களுடன் இணைந்து ‘பரதேசியின் வலித்தொகை’ என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் 2008 வரை ‘மனுதர்’ எனுமொரு வலைப்பதிவினையும் நடாத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தேன். ஒரு பதிவு மட்டுமேயிருந்தது. ஏனையவை நீக்கப்பட்டு விட்டன போலும்.

கணன் ஸ்வாமி தன் புதுக்கோட்டை அகதிகள் முகாம் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நல்லதோர் ஆவணமாகவிருக்கும். கணன் ஸ்வாமி செய்வாரா? செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

அவரது ‘மனுதர்‘ வலைப்பதிவிலுள்ள ‘பரதேசியின் வலித்தொகை‘ 11 கவிதைகளின் தொகுப்பிது. அப்பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பரதேசியின் வலித்தொகை தொகுப்புக்கு நல்லதொரு பெயர். அகதிகளாகப் பரதேசம் அலைந்து திரிபவர்களின் வலியினை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகை (தொகுப்பு).

Continue Reading →

தேடகம் அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் 2019

இடமிருந்து வலமாக: தேவகாந்தன், கற்சுறா, போல் ராசாத்தி, நான், குமரன் & ஆதவன்
தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலைய அமைப்பினர்) அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் இன்று குயீன் பலஸ் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் கடல்புத்திரனுடன் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். முப்பதாவது ஆண்டில் நடக்கும் நிகழ்வு என்பதால் தேடகம் மலர் ஏதாவது வெளியிடலாம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் வெளியிடவில்லை. இவ்விதம் வருடாவருடம் நடக்கும் நிகவுகளில் தேடகம் ‘தேடல்’ சஞ்சிகையை ஆண்டு மலர் வடிவில் வெளியிடலாம். அது மிகவும் பயன் மிக்கதாகவுமிருக்கும். அதே சமயம் கனடாத் தமிழ்இலக்கியத்துக்குப் பங்களிப்பினை வழங்கிய தேடகம் சஞ்சிகையின் தொடர்ச்சியாகவுமிருக்கும். தேடக நண்பர்கள் சிந்திப்பார்களாக. நிகழ்வில் தேடக நண்பர்கள், ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். பலர் குடும்பங்களுடன் வருகை தந்திருந்தனர். இளைய தலைமுறையினர் பலரையும் நிகழ்வில் காண முடிந்தது. அவர்கள் நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை ஆர்வமுடன் நடத்திய பாங்கு வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.

Continue Reading →