உலகில் ஆறாயிரம் மொழிகள் பேசப்பெறுகின்றன. அவற்றுள் எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் உடைய மொழிகள் அறுநூறுதான். அவற்றுள்ளும் செம்மொழித் தகுதியுடைய மொழிகள் என்று பார்த்தால் பத்து மொழிகள்தான் தேறும். இன்னும் வெளிப்படையாகக் கூற வேண்டுமென்றால் செம்மொழிக்கென்று வரையறுக்கப் பெற்றிருக்கும் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கும் ஒரே மொழி, தமிழ் மொழிதான். இது உணர்ச்சிவயப்பட்டுக் கூறும் கூற்றன்று. மொழியியலாளர்கள் ஒத்துக்கொண்ட உண்மையாகும். அந்த உண்மையைத் தெளிவுபடுத்தும் நூல் முனைவர் சி.சேதுராமன் அவர்களின் ‘தமிழ்ச் செம்மொழி வரலாறாகும்’. ஒன்பது உட்தலைப்புகளில் தமிழ்ச்செம்மொழி வரலாறு விரித்துரைக்கப்பெற்றுள்ளது.
அன்புடையீர், வணக்கம்! ‘ஞானம்’ இதழ் பற்றிய கருத்துகளை அறியத்தாருங்கள். அன்புடன், தி. ஞானசேகரன், ஆசிரியர் ‘ஞானம்’“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்”editor@gnanam.info
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை சார்பாக 2011 ஆம் ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நூல்கள் முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்): 1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு; பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.