கூகுல் பல்கலையில் பயில வாருங்கள்!

கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம்.கூகுல் பல்கலை ஒன்றை நடத்தி வருவது உங்களுக்கு தெரியுமா?கூகுல் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுல் இந்த இணைய பல்கலையை நடத்தி வருகிறது.இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியாது என்றாலும் கம்ப்யூட்டர் சார்ந்த விஷயங்களை கற்று கொள்ளலாம். கம்ப்யூட்ட ர் கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுல் பட்டியலிட்டுள்ளது.புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு,ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகல் தொடர்பான இணைய பாடங்கள் வீடியொ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்.கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.

Continue Reading →

அரசியலும் ஆட்சியும்: இருபத்தெட்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன ஆனால் “சிங்கள நிட்டாயவோ” இன்னும் இருக்கிறார்கள்.

குசல் பெரேராஇலங்கையில் உள்ள “ நிட்டாயவோ” பற்றி எழுதும்போது பிரட்ரிக் லூயிஸ் சொன்னார், தோற்றத்தில் அவர்கள் குள்ளமாகவும், நீளமான பலம் வாய்ந்த கரங்களையும், கழுகின் பாதத்திலுள்ள நகங்களைப்போல கொக்கி போன்ற நகங்களையும் கொண்டு, கிட்டத்தட்ட மனிதர்களைப் போலத்தான் இருப்பார்கள் என்று.  இந்த நிட்டாயவோக்கள் 15 இலிருந்து 20 வரையான சிறிய குழுக்களாகச் சேர்ந்துதான் வசிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் இரைகளின் வயிற்றை கழுகின் பாதம் போன்ற தங்கள் கூரிய நகங்களால் கொடூரமாக குத்திக் கிழிப்பார்கள், என்று ஹக் நெவில் என்கிற மற்றொரு எழுத்தாளர் கூறியுள்ளார். அவர்கள் வேடர்களின் பிள்ளைகளைப் பிடித்துச் சென்றதால்தான் வேடர் இனமே அழிந்து போனது என இரண்டு எழுத்தாளார்களுமே எழுதியுள்ளார்கள்.

Continue Reading →

தமிழ்ச்சினிமாவை சிதைக்கும் நல்ல படங்கள்!

Actor Sein Pennநடிகர் விக்ரம்எதுக்கு சுத்தி வளைத்து? நேரடியாவே தெய்வத்திருமகன் படத்துக்கு வருகிறேன். அருமையான படம். பார்க்க நெகிழ்ச்சியா இருக்கிறது. விக்ரம் அருமையாக நடித்திருக்கிறார். ஆத்மார்த்தமான இசை. திரைக்கதை, வசனத்தில் நெகிழ்ச்சியும், நகைச்சுவையும் இழையோடுகிறது. பார்ப்பவர்கள் பல இடங்களில் அழுகிறார்கள். எல்லாம் சரி. ஆனால் படம் கொண்டாடப்பட வேண்டிய படமல்ல! நல்ல சினிமா அல்ல. தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாக்கும் படம். பொறுங்கள். திட்டாதீர்கள். முழுதாக முடித்துக்கொள்கிறேன்.

Continue Reading →

குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

வ.ந.கிரிதரனின் குறுநாவல்: 'பிள்ளைக் காதல்'1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.

Continue Reading →

குறுநாவல்: ‘பிள்ளைக்காதல்’

வ.ந.கிரிதரனின் குறுநாவல்: 'பிள்ளைக் காதல்'1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.

Continue Reading →

சோழியனின் ‘கறுப்பு ஜூலை 1983’ பற்றிச் சில வார்த்தைகள் …

1983 கலவரக் காட்சி (பொரளை). இப்புகைப்படத்தை எடுத்தவர் 'அத்த' என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சிங்களப் பத்திரிகை நிறுவனத்திற்காகப் பணிபுரிந்தவரான சந்திரகுப்த அமரசிங்க என்னும் சிங்களவராகும். இவரே பொரளையில் தமிழர் ஒருவரைச் சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கிக் கொல்லும் காட்சியினையும் புகைப்படமாக எடுத்தவர்.சோழியனின் கருப்பு ஜூலை 1983 பற்றிய கட்டுரை, குறிப்பாக இராமகிருஷ்ண மண்டபத்தில் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய அவரது நினைவு கூர்தல் , அன்றைய நினைவுகளை மீண்டுமெழுப்பின. உண்மையில் காடையர்கள் உள்ளே நுழைந்ததும், உள்ளே அகப்பட்டிருந்த மக்களெல்லோரும் ஒவ்வொரு மாடியாக , மொட்டை மாடி வரைக்கும் ஓடி ஒளிந்தார்கள். சிலர் பல்வேறு மாடிகளிலுள்ள குளியலறைகள் / மலசலகூடங்களிற்குள்ளும் ஒளிந்தார்கள். மொட்டை மாடி வரையில் சென்றவர்களைத் துரத்தியபடி காடையர்கள் தொடர்ந்தும் முன்னேறி வந்தார்கள். மொட்டை மாடியை அடைந்தவர்களுக்கு வேறெங்கும் செல்வதற்கு வழியில்லை. அங்கிருந்த தண்ணீர் தாங்கிகளுக்கும், தளத்திற்குமிடையிலிருந்த இடைவெளிக்குள் பெண்கள், குழந்தைகள் புகுந்துகொண்டார்கள். ஏனையவர்கள் மொட்டை மாடியில் நீட்டிக்கொண்டிருந்த ‘காங்ரீட்’ தூண்களின் பின்னால் தங்களை மறைப்பதற்கு முயன்று கொண்டிருந்தார்கள்.

Continue Reading →

தமிழினம் குருதியில் தோய்ந்த கரிய நாளின் 28வது ஆண்டு நினைவாக ”கறுப்பு யூலை” ஒன்று கூடல்

காலம்  – 25-07.2011
நேரம்   – 18:00 – 19:00
இடம்  –  Stortinget   முன்பாக

Continue Reading →

மீள்பதிவு (‘ஈர்த்ததில்’ வலைப்பதிவிலிருந்து ): கருப்பு ‘ஜூலை’ 1983!

1983 கலவரக் காட்சி (பொரளை). இப்புகைப்படத்தை எடுத்தவர் 'அத்த' என்னும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் சிங்களப் பத்திரிகை நிறுவனத்திற்காகப் பணிபுரிந்தவரான சந்திரகுப்த அமரசிங்க என்னும் சிங்களவராகும். இவரே பொரளையில் தமிழர் ஒருவரைச் சிங்களக் காடையர்கள் நிர்வாணமாக்கிக் கொல்லும் காட்சியினையும் புகைப்படமாக எடுத்தவர்.[யாழ்.கொம் இணைத்தளத்தில் யூலை 7, 2003 ஆம் ஆண்டு சோழியன் என்ற பாதிக்கப்பட்ட அன்பரால் வழங்கப்பட்ட அனுபவப்பகிர்வு இது.] ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.

Continue Reading →

The photograph that captured the trauma of Black July 1983

This is a remarkable photograph because, as far as I know, no other such bleak photographic evidence of man’s inhumanity to man during Black July exists. Pictures only showed gutted buildings and vehicles. This is because photographers themselves were prime targets of the mobs, and inconspicuous devices such as mobile phone cameras were unknown.In July 1983, I was working in a Middle Eastern country. When I heard about the anti-Tamil riots in Sri Lanka, I was aware of a catastrophe, even though I was too politically immature then to grasp the full nature of the tragedy and its implications for Sri Lanka in the years to come. My sympathies for the victims were heartfelt and deep. In 1983, though, I was a very naïve, well-meaning Sinhala Buddhist young man who believed that a limited war could contain the LTTE, and that the government was now fully awake to the ugly reality of communal violence and would make sure it would not happen again by offering the Tamils a satisfactory political deal. Twenty eight years later, I know better. Let’s not start another round of blame games. Whatever terrorists do, governments are duty bound to protect their citizens. What I failed to realise back then was that the government shouldn’t have let Black July happen in the first place. After returning home in 1984, I remember telling a Tamil tenant in my neighbourhood how bad I felt about the whole thing. He didn’t even smile.

Continue Reading →

சிறுகதை: விருந்து

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்– அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்?

– ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூண்டு வருஷம் இருக்கும் என்ன?

– பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் ‘டிலகேயிலை’ இருக்கிறம். நீங்கள்?

– நாங்கள் ‘அல்ற்ரோனா’விலை.

Continue Reading →