நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரின் தொகுப்பு நூல்களில் ஒன்று மேற்கண்டவாறு சுதாராஜ் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. உண்மையில் சுதாராஜின் வாழ்வும் எழுத்தும் சமகோட்டில்தான். அதை நான் திரும்பிப் பார்க்க விரும்பியபோது, இந்தக் களத்தை அவரின் வாழ்வைவிட எழுத்துக்குப் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். சுருக்கமாக சுய வாழ்வையும் விரிவாக இந்தப் பந்தியில் அடங்கக் கூடிய அளவிற்கு எழுத்துலக வாழ்வை பற்றியும் மனம் திறந்தார். பொறியியலாளரான இவர் பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பணி புரிந்திருக்கிறார். அங்கெல்லாம் சந்தித்த சில விந்தையான மனிதர்களுடனான அனுபவங்களை மிகை குறைப்படுத்தாமல் நூலுருவாக்கியிருக்கிறார். இலக்கிய நூல், நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என பட்டியல் மிக நீளமானது. திரை கடலோடி தேடிய திரவியம் எல்லாம் எழுத்துக்காகவே அர்ப்பணித்தவர். எழுத்துலகிற்கு அவர் போட்ட பிள்ளையார் சுழியைப்பற்றி அவரிடமே பேசுவோம். மூன்று தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்று பெருமைக்குரிய இவர் மின்னாமல் முழங்காமல் தன் எழுத்துப்பணியைப் பற்றி பேசத் தொடங்கினார்.
அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]
அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள். அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம். அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும்.
மலரா என்ற புனைப் பெயரைக் கொண்ட திருமதி. புஷ்பலதா லோகநாதன் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். வைத்தியரான இவர் புதிய இலைகளால் ஆதல் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியீடு செய்துள்ளார். இந்தக் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் தனக்கென்றொரு காத்திரமான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் 108 பக்கங்களில் இந்த நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக தனது தகப்பனின் அதிகாரத்திலோ, சகோதரர்களின் அடக்கு முறையிலோ அல்லது கைப்பிடித்த கணவனின் கட்டுப்பாட்டிலோ சிக்கிக்கொள்ளாமல் அன்பான குடும்பத்தில் அரவணைப்புடன் வாழ்ந்த பெண்களுக்கே மென்மை இழையோடும் கவிதைகளையும், ஆண்களின் பெருமைகளைச் சொல்லும் படைப்புக்களையும் எழுத முடிகிறது. அந்த வகையில் மலராவும் அடக்குமுறைகளுக்கு அகப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்த காரணத்தால் முழுக்க முழுக்க பெண்மையின் மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக இத்தொகுப்பில் பிரதிபலித்திருக்கிறார். உமா வரதராஜன் தனதுரையில் எத்தனை காலந்தான் ஒரு குயில் தன் குரலை ஒளித்துக்கொண்டிருக்கும்? உரிய காலந் தப்பி மலராவின் கவிதைகள் இப்போது வெளியாகின்றன. உரத்த குரல் எவற்றிலுமில்லை. காதோரம் அவை கிசுகிசுக்கின்றன. காற்று இழுத்து வந்து நம் முகத்தில் சேர்க்கின்ற பூமழைத் தூறல்கள் அவை என்று குறிப்பிடுகிறார்.
– ஜூலை 6, 2012 – நண்பர்களே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது. இணைய இதழின் சந்தா விபரங்கள்:
[ கணையாழி தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென்றோரிடத்தைப் பதிவு செய்துகொண்ட சஞ்சிகை. அது தொடர்ந்தும் வெளிவரவேண்டும். ஏற்கனவே பல தடைகளைத் தாண்டி வெளிவந்ததைப்போல் இம்முறையும் அது தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கணையாழிக்கு இன்னுமோர் சிறப்புண்டு. உலகத்தின் பல்வேறு பக்கங்களிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பை அது அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளதைத்தான் கூறுகின்றேன். ‘கனடாச் சிறப்பிதழ்’, ‘ஆஸ்திரேலியச் சிறப்பிதழ்’ .. போன்ற சிறப்பிதழ்களாகக் கணையாழி வெளிவந்துள்ளது. எனது கட்டுரைகள் சிலவும், சிறுதையொன்றும் கணையாழியில் வெளிவந்துள்ளதை இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். கணையாழி தொடர்ந்தும் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன். – வ.ந.கி, பதிவுகள் -] இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான ‘கணையாழி’ யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு ‘திரும்பிப் பார்த்தல்’. ‘புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. ‘கலைமகள்’ போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து ‘கணையாழி’ என்று பெயர் வைத்தேன்’ என்று ‘கணையாழி’ பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார்.