‘விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்து கல்வி ஞான மெய்தி
வாழ்வ மிந்த நாட்டிலே!’ என்று பாரதி பாடி ஆண்டுகள் பல கடந்தோடி விட்டன. ஆனால் இன்னும் பாரதம் மானுட நாகரிகமே தலை குனியும் வண்ணம் தீண்டாமைப் பேயின் நச்சுக் கரங்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றது. அண்மையில் நடிகர் அமீர்கானின் மிகவும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சத்ய மேவ ஜெயதே’ என்னும் ‘உண்மைக் காட்சி’ (Reality Show) தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘தீண்டாமை – அனைவருக்கும் மதிப்பு!'(Untouchability – Dignity for All)’ என்னும் தலைப்பில் இடம்பெற்ற நிகழ்ச்சி அது. பார்த்தோர் அனைவரையும் நெஞ்சு குலுங்க வைக்கும் நிகழ்வாக அந்நிகழ்சி இருந்தது. ‘இந்தியர்’ என்று பெருமையுறும் அனைவரையும் நாணிக்குனிய வைப்பதாகவிருந்தது அந்த நிகழ்வு.
நான் 1950 களின் ஆரம்ப வருடங்களின் நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறேன். மார்ச் 19-ம் தேதி ஹிராகுட் அணைக்கட்டின் நிர்வாக அலுவலகத்தில் ஆரம்பித்தது என் வெளி உலகத் தொடர்பு. ஒரிஸ்ஸாவின் சம்பல்பூர் ஜில்லாவின் ஹிராகுட்டில். அது ஒரு கிராமமாக இருந்திருக்க வேண்டும். மகாநதி என்னும் மிக பிரம்மாண்ட அகலமும் பனைமரங்களையே முழ்கடித்து விடும் ஆழமும் கொண்ட நதி அது. உண்மையிலேயே மகா நதி தான். அதன் குறுக்கே தான் அணை கட்டும் திட்டம். முதல் சில மாதங்களுக்குப் பிறகு ஹிராகுட்டில் சில தாற்காலிக ஷெட்களில் இருந்த அலுவலகம் ஆற்றின் மறுகரையில் இருந்த புர்லாவில் கட்டப்பட்டு முடிந்த நிரந்தர கட்டிடத்துக்கு மாறியது. அத்தோடு வசிக்க எங்களுக்கு புதிய வீடுகளும் கிடைத்தன. எனக்கு ஒரு வீடு கிடைத்தது. நான் தனி ஆள். அந்த வீடு ஒரு குடும்பம் இரண்டு குழந்தைகளுடன் ஒரு தம்பதியர் இருக்க வசதியான வீடு. வாடகை ரூபாய் ஐந்து. வேறு எந்த செலவும், மின்சாரத்துக்கு, தண்ணீருக்கு என்று ஏதும் கிடையாது. எல்லாம் இலவசம். இது அப்போதே தொடங்கியாயிற்று. தமிழ் நாட்டுக்கு வரத்தான் தாமதம்.
“சமய ஈடுபாடு கொண்ட சொர்க்கம், நரகம், மறுபிறப்பு அல்லது தனிப்பட்ட கடவுள் இருப்பதென்பதை ஆய்வறிவு சார்ந்த சிறு விளக்கத்தைத் தானும் என்றாவது நான் கண்டதில்லை.” – (தோமஸ் எடிசன்) – ‘உயிர்’ என்பதின் பொருளை ஓர் ஆற்றல், சக்தி, இயக்கம், துடிப்பு, செயல், சீவன், காற்று என்று கூறலாம். உயிர் தனித்து வாழாது. உயிர் வாழ்வதற்கு ஓர் உடல் வேண்டும். “உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” என்று கூறுகின்றது திருமூலர் மந்திரம். மனிதன் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும் உலக நியதி. இவ்வண்ணம் உலகத்திலுள்ள ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள எல்லா உயிரினங்களும் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதுமாகிய ஒரு பெரும் சுற்றோட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் மனித உயிருக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றான் மனிதன். அவனே தனக்குச் சட்டம் வகித்து, பிறப்பவர் தொகை, இறப்பவர் தொகை, உலகச் சனத்தொகை கணித்து, வாழ்வியலையும் மேம்படுத்துகின்றான். உலகில் 701 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். நாளொன்றுக்கு நானூற்றித் தொண்ணூறாயிரம் (490,000) குழந்தைகள் பிறக்கின்றன. அதேநேரம் நாளொன்றுக்கு இருநூற்றி ஐம்பதாயிரத்திலிருந்து (250,000) முன்னூறாயிரம் (300,000) வரையான மக்கள் இறக்கின்றனர். இவ்வண்ணம் உலகச் சனத்தொகை கூடிக்கொண்டே போகின்றது.
ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவியான பத்து வயது செல்வி. கிஷ்ணவி விஜயபாலனின் அரங்கேற்றம் லண்டன் Fairfield மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இலங்கையில் பேராதனை மிருக வைத்திய துறையில் நாய் பூனைகளுக்கான புதிய வைத்தியசாலை அரசாங்கத்தால் கட்டப்பட்டு மிருக வைத்திய பீடத்திற்கு கையளித்திருக்கிறார்கள். அந்த வைத்தியசாலையில் ஒரு வாரகாலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இலங்கையில் மிருக வைத்தியத்துறையில் இருந்து பெற்ற பட்டப்படிப்பு என்னை மெல்பனில் மிருக வைத்தியம் செய்வதற்கு தயார் படுத்தியது. குறைந்த பட்சம் நான் பெற்ற அறிவை சிறிதளவாவது மீண்டும் அங்கு தற்போது பயிலும் மாணவர்களுக்குக் கொடுத்து நான்பட்ட கடனில் சிறிய அளவை தீர்த்துக் கொள்ள நினைத்ததால் இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு கண்டி சென்றேன். என்னுடன் முன்னர் படித்த சகாக்கள்தான் அங்கு வைத்திய துறையின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எனது அனுபவம் இனிமையாக இருந்தது.
சென்ற முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை 01-07-2012 மாலை 6:00 மணியளவில் சொப்கா (SOPCA) என்றழைக்கப்படும் பீல்குடிமக்கள் ஒன்றியத்தின் கனடா பிறந்த தினக் கொண்டாட்டம் கலை நிகழ்ச்சிகளோடு மிசசாகாவில் உள்ள ஸ்குயர்வண் முதியோர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மௌன அஞ்சலியைத் தொடர்ந்து கனடிய தேசிய கீதம் ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் பாடப்பட்டு கனடிய தேசியக் கொடி மகாஜனாக்கல்லூரி பழைய மாணவரும் விளையாட்டு வீரருமான திரு. கே. நவரட்ணம் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துப் பாடலும், சொப்கா மன்றத்தின் கீதமும் இடம் பெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மகாஜனாக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் கனடா பிறந்த தினக்கொண்டாட்டத்தை சொப்பா அங்கத்தவர்களோடு ஒன்று சேர்ந்து பிறந்ததினக் கேக் வெட்டித் தொடக்கி வைத்தார். அந்த நிகழ்வைத் தொடர்ந்து சொப்கா மாணவி ஜெனிற்ரா ரூபரஞ்சனின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது.
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய இவரின் தொகுப்பு நூல்களில் ஒன்று மேற்கண்டவாறு சுதாராஜ் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. உண்மையில் சுதாராஜின் வாழ்வும் எழுத்தும் சமகோட்டில்தான். அதை நான் திரும்பிப் பார்க்க விரும்பியபோது, இந்தக் களத்தை அவரின் வாழ்வைவிட எழுத்துக்குப் பகிர்ந்து கொள்ளவே விரும்பினார். சுருக்கமாக சுய வாழ்வையும் விரிவாக இந்தப் பந்தியில் அடங்கக் கூடிய அளவிற்கு எழுத்துலக வாழ்வை பற்றியும் மனம் திறந்தார். பொறியியலாளரான இவர் பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பணி புரிந்திருக்கிறார். அங்கெல்லாம் சந்தித்த சில விந்தையான மனிதர்களுடனான அனுபவங்களை மிகை குறைப்படுத்தாமல் நூலுருவாக்கியிருக்கிறார். இலக்கிய நூல், நாவல், மொழிபெயர்ப்பு நூல்கள் என பட்டியல் மிக நீளமானது. திரை கடலோடி தேடிய திரவியம் எல்லாம் எழுத்துக்காகவே அர்ப்பணித்தவர். எழுத்துலகிற்கு அவர் போட்ட பிள்ளையார் சுழியைப்பற்றி அவரிடமே பேசுவோம். மூன்று தடவைகள் இலங்கை அரசின் சாகித்திய விருதினைப் பெற்று பெருமைக்குரிய இவர் மின்னாமல் முழங்காமல் தன் எழுத்துப்பணியைப் பற்றி பேசத் தொடங்கினார்.
அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]
அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள். அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம். அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும்.
மலரா என்ற புனைப் பெயரைக் கொண்ட திருமதி. புஷ்பலதா லோகநாதன் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். வைத்தியரான இவர் புதிய இலைகளால் ஆதல் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியீடு செய்துள்ளார். இந்தக் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் தனக்கென்றொரு காத்திரமான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் 108 பக்கங்களில் இந்த நூல் வெளிவந்துள்ளது. பொதுவாக தனது தகப்பனின் அதிகாரத்திலோ, சகோதரர்களின் அடக்கு முறையிலோ அல்லது கைப்பிடித்த கணவனின் கட்டுப்பாட்டிலோ சிக்கிக்கொள்ளாமல் அன்பான குடும்பத்தில் அரவணைப்புடன் வாழ்ந்த பெண்களுக்கே மென்மை இழையோடும் கவிதைகளையும், ஆண்களின் பெருமைகளைச் சொல்லும் படைப்புக்களையும் எழுத முடிகிறது. அந்த வகையில் மலராவும் அடக்குமுறைகளுக்கு அகப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்த காரணத்தால் முழுக்க முழுக்க பெண்மையின் மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக இத்தொகுப்பில் பிரதிபலித்திருக்கிறார். உமா வரதராஜன் தனதுரையில் எத்தனை காலந்தான் ஒரு குயில் தன் குரலை ஒளித்துக்கொண்டிருக்கும்? உரிய காலந் தப்பி மலராவின் கவிதைகள் இப்போது வெளியாகின்றன. உரத்த குரல் எவற்றிலுமில்லை. காதோரம் அவை கிசுகிசுக்கின்றன. காற்று இழுத்து வந்து நம் முகத்தில் சேர்க்கின்ற பூமழைத் தூறல்கள் அவை என்று குறிப்பிடுகிறார்.
– ஜூலை 6, 2012 – நண்பர்களே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது. இணைய இதழின் சந்தா விபரங்கள்: