இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே. – ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் தூரம் போனால் மகா நதி. மகா நதிப் பாலத்தைக் கடந்து இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால் புர்லா. விடுமுறையில் ஊருக்குப் போக ரயில் பிடிக்க சம்பல்பூர் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். சைக்கிள் ரிக்ஷாவில் போய்க்கொண்டிருக்கிறேன். மகாநதியைக் கடந்து விட்டான். ஆனால் நான் ரயிலைப் பிடிக்க நேரத்துக்குப் போய்ச் சேர்வேன் என்ற நம்பிக்கையில்லை. பின்னாலிருந்து ஒரு லாரி வருவதைப் பார்தேன். சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து இறங்கி, அந்த லாரியை நிறுத்தி, ”ரயிலைப் பிடிக்க வேண்டும்,. சம்பல்பூரில் விட்டு விடுவாயா?” என்று கேட்கிறேன். ”ஏறிக்கொள்,” என்கிறான். திரும்பி வந்து சைக்கிள் ரிக்ஷாக்காரனுக்கு பேசிய காசைக் கொடுத்து விட்டு லாரியில் ஏறிக்கொள்கிறேன். இன்னொரு சமயம் சம்பல்பூரிலிருந்து ஹிராகுட்டுக்கு ஒரு லாரி போகிறது. இப்போது புர்லா போகும் ரோடு வந்ததும், ”இங்கு இறக்கிவிடு, நான் நடந்து போய்க்கொள்கிறேன்,” என்று சொன்னேன். அவன் நிறுத்த வில்லை.” எவ்வளவு தூரம் நடப்பாய்”, என்று சொல்லி, புர்லா ரோடில் மகா நதியைத் தாண்டி, அவன் வழியை விட்டு எனக்காக லாரியைத் திருப்பி ஐந்து மைல் தூர என் நடையை மிச்சப்படுத்திக் கொடுத்துவிட்டு பின் தன் வழியில் செல்கிறான். என்னிடம் இதற்கு ஒரு பைசா காசு கேட்கவில்லை. யாருமே கேட்டதில்லை. அவ்வப்போது நினைப்பு வந்ததைச் சொல்லிச் செல்கிறேன்.
[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை நடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
மல்லப்பாடி தருமபுரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகே சிறுகுன்றுகளின் அடிவாரத்தில் இடம்கொண்டுள்ள ஒரு சிறிய சிற்றூர். இந்நிலப் பரப்பின் அகத்தேயும், சுற்றியும் புதிய கற்காலப் பண்பாட்டுச் சான்றெச்சங்கள் உள்ளன. இந்நிலப் பரப்பின் புதிய கற்கால மக்கள் குன்றுகளின் அடிவாரத்திலும் சமவெளிகளிலும் வாழ்ந்திருந்தனர். இத்தளத்தில் பாறை வண்ணஓவியங்களும் கூட இடம்கொண்டுள்ளன. இங்கத்துப் பாறைகளில் இயற்கையான மலைமுழைஞ்சுகள் (cavern) உள்ளன, அவற்றின் மேற் கூரைகளில் வண்ணோவியங்கள் இடம்கொண்டுள்ளன. இக் காட்சிப்படங்கள் வேட்டை முதலாயவற்றில் இருந்து வண்ணிக்கின்றன. அவை கரிக்கட்டை, சுண்ணாம்பு, செங்காவி போன்ற இயற்கை வண்ணங்களைக் கொண்டு வெறுஙகையால் வரையப்பட்டு உள்ளன.
தமிழில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் முளைத்துவருகின்றன. அது தமிழ், சீரிளமைத்திறம் வாய்ந்த மொழிதான் என்பதற்கான ஓர் அடையாளம். ஆனால் பதிப்பகங்களின் எண்ணிக்கையில் பாதி அளவுகூட தமிழில் சிறந்த புனைவுசாரா (non-fiction) எழுத்தாளர்கள் இன்று இல்லை. இந்த நிலையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆழி பப்ளிஷர்ஸ் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. அதன் மூலம் புதிதாக நூல் எழுத ஆர்வமுள்ளவர்கள், தொழில்முறை நூலாசிரியர்களாக ஆவதற்கான பயிற்சியை அது வழங்கவுள்ளது. நம்மில் பலருக்கு பல்வேறு துறையில் நிபுணத்துவமோ, தீராத ஆர்வமோ அல்லது ஆழ்ந்த அனுபவ ஞானமோ இருக்கலாம். அது அரசியல், நாட்டு நடப்பு, வரலாறு, வாழ்க்கை வரலாறு, மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம், சமூகம், கலாச்சாரம், இயற்கை, சுற்றுச்சூழல், உளவியல், வாழ்வியல் என எந்தவிதமான அறிவுத்துறை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம்.
[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
அரிக்கமேடு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிற்றூர். இது முன்பே முனைவர் மார்டிமர் வீலரால் 1942 இல் அகழாய்வு செய்யப்பட்ட ஒரு இந்தோ – உரோம தளம். இதுவே தொல்லியல் அகழாய்வுகள் மண்ணடுக்கியல் (stratigraphy) நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளம். அவர் இத்தளத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையானது என நாள்குறித்தார். அவருடைய அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானைஓட்டு பிராமிப் பொறிப்புகள், உரோமர் மட்கலங்கள், உரோமக் காசுகள், உரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. அவர் இதன் காலக் கணக்கீட்டை கருப்பு – சிவப்புநிற மட்கலன்கள், உரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தினார்.
[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
திருவேற்காடு சென்னைக்கு அருகே பூந்தண்மல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து சில அயிர் மாத்திரிகள் (kilo meter) கிளைத்துப் பிரியும் சாலை வழியே கூவம் ஆற்றின் கரைமேல் இடம் கொண்டுள்ளது. இது அன்றாடம் பல்லாயிரம் பக்கதர்களை ஈர்க்கும் தேவி கருமாரி அம்மன் கோவிலில் இருந்தும் மிக அருகில் தான் உள்ளது. இத்தளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியின் வழிகாட்டுதலில் 1996 முதல் 2000 வரை பற்பல பருவங்களுக்கு அகழாய்வுகள் நடத்தப்பட்டன.