பூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள்

[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்திபூம்புகார், சங்க காலத்தின் பெரும்புகழ்ப் போற்றலுக்கு உரிய சோழர்களின் நாடறிந்த தலைநகராயும் துறைமுக நகராயும் திகழ்ந்து காவேரி ஆறு வங்கக் கடலுடன் கூடும் இடத்தில் (இற்றை நாகப்பட்டின மாவட்டத்தில்) சூழமைவு கொண்டுள்ளது. இந்நகர் காவிரிக்கு கரையின் இரு புறத்தும் நான்கு காவதம் வரையான நீளத்திற்கு தன் சிறகுகளைப் பரப்பி இருந்தது என்று நம்பப்படுகின்றது. இந்நகருக்கு கல்வெட்டு மற்றும் இலக்கிய மேற்கோள்கள் உள்ளன. கி.மு. 2 ஆம் நூற்றாண்டினதாக நாள்குறிக்கத்தக்க சாஞ்சிக்கு அருகே உள்ள பார்அட்டு (Barhut) கல்வெட்டு ஒன்றில் இந்நகரத்தின் சோமா என்ற பௌத்தத் துறவாட்டி ஒருத்தி ஒரு குவிமாடத்தின் (stupa) அடைப்பிற்காக பலகக்கல் ஒன்றை நன்கொடையாக ஈந்தாள் என்று சொல்லப்பட்டு உள்ளது.

Continue Reading →

நூல் அறிமுகம்: “வேதாவின் கவிதைகள்!” ஒரு மதிப்பீடு!

நூல் அறிமுகம்: “வேதாவின் கவிதைகள்!” ஒரு மதிப்பீடு!ஆழ வேரூன்றி, அகலக் கிளைகள் பரப்பி, வானோக்கி உயர்ந்து, விரிந்து விருட்சமாகி, விழுதுகள் பல இறக்கி, எங்குமாய் வியாபித்து நின்று நிழல் கொடுக்கும் இந்த ஆலமரத்தின் அடி முடி தேடுவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. சிற்றெறும்பாகிய நான் என் சிறு கைகளால் முழம் போடுகின்றேன். குருவி தலையில் பனங்காய் சுமக்க முயல்வதைப் போன்றது எனது முயற்சி. சொல்லோடு பொருளெடுத்து, சுவையோடு தமிழ் எடுத்து, நில்லாது ஓடுகின்ற நினைவுகளை நெஞ்சேற்றி, நற்சுவையும் நற்பொருளும் நயமோடு எடுத்துரைக்கும் நல்ல பல கவிதைகளை நாம் காணமுடிகிறது! இந்த விருட்சத்தை நாம் வியந்து நோக்குமுன்னர்.. இதன் ரிஷி மூலத்தை நாம் கண்டறியவேண்டும்! தமிழும், சைவமும், சமூக சேவையும் நிறைந்தது இவரது குடும்பம். இவரின் தந்தையார் திரு.முருகேசு சுவாமிநாதன் அவர்கள் மலேசியாவிலும்  இலங்கையிலும் பல கல்லூரிகளை நிறுவியும், கடமையாற்றியும் வந்துள்ளார். இவை எல்லாம் இன்று பிரசித்தி பெற்ற கல்லூரிகளாக யாழில் திகழ்கின்றன. இத்தகைய பின்னணிகளோடு களத்தில் நிற்கும் வேதா இலங்காதிலகம் அவர்கள் அரிய பல படைப்புக்களை தந்து கொண்டிருக்கின்றார் என்பதில் வியப்பேதுமில்லை!   

Continue Reading →

Global Tamil Forum continues its international advocacy

உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum)

27 September 2012 – Global Tamil Forum (GTF) delegation led by Rev Father S J Emmanuel met with officials from the Republic of South Africa and Switzerland on 23rd and 24th September 2012, respectively, as part of the on-going engagement with international governments to highlight the enduring persecution of the Tamil people in Sri Lanka. GTF emphasised that only an international, independent investigation can secure truth and accountability, as recommended by the UN Panel of Experts in their report, in order to lay the foundations for meaningful reconciliation between all communities in Sri Lanka. In this regard, GTF will continue to engage internationally until justice is served. GTF reiterated that we believe in achieving a negotiated political settlement for decades long national conflict through a process of dialogue and engagement. In this respect we are encouraged that as reported in the media recently, the Indian Prime Minister has emphasised the urgency to President Rajapaksa in achieving lasting political solution to the Tamil national question.

Continue Reading →