வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தின் இருப்பு பெரிய அளவில் உள்ளது:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட - கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா மூன்று பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் அய்ந்து பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.  இந்தத் தகவல் சிறீலங்கா இராணுவத்தின் உள்ளக ஆவணத்தில் இருந்து பெறப்பட்டது. இந்த ஆவணம் பவர் பொயின்ட் காட்சியளிப்பு மூலம் படைப் பிரிவுகள் எங்கெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை படங்கள் வாயிலாகக் காட்டுகின்றது. இந்த பவர் பொயின்ட் காட்சியளிப்பு 2012 யூன் மாதத்துக்கு என்றாலும் அதன் பின்னர் எவ்விதமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. கேணல் ஹரிகரன் ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி. இவர் சிறீலங்காவில் இந்திய அமைதிப் படையில் (IPKF) இருந்தவர். இவரோடு இந்து ஏடு இராணுவம் பற்றிய கணிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டது. அவரது கூற்றின்படி வடக்கு கிழக்கில் இராணுவம் பரவி இருக்கும் பாங்கினைப் பார்த்தால் அது ‘தாக்குதலுக்கு அணியமாக’ இருக்கும் ஒரு இராணுவம் போல் தெரிகிறதேயொழிய அது மோதலுக்குப் பின்னர் இளைப்பாறும் இராணுவம் போல் தெரியவில்லை.

Continue Reading →