‘நலமாக’ டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்களது நூல்

மிகவும் மகிழ்ச்சியான தருணம். நலவியல்துறை அதிலும் மனநலம் பற்றிய  நூல் பற்றி குறிப்பு எழுதுவது. அதுவும் கடமையுணர்வும், நற்பண்புகளும், சமூக அக்கறையும் கொண்ட மருத்துவரான டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்களது நூல்.  நான்கு பதிப்புகள் கண்டு 5000 பிரதிகளுக்கு மேல் இந்த நூல் விற்பனையாகியிருப்பது மிகவும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். 500 பிரதிகள் அடித்தும் விற்க முடியாமல் பலரது நூல்கள் வீட்டு அலுமாரிகளை நிரப்பி கரையான அரித்து அழிந்து கொண்டிருக்கும் சூழலில் இது பெரிய சாதனை எனலாம்.  டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -மிகவும் மகிழ்ச்சியான தருணம். நலவியல்துறை அதிலும் மனநலம் பற்றிய  நூல் பற்றி குறிப்பு எழுதுவது. அதுவும் கடமையுணர்வும், நற்பண்புகளும், சமூக அக்கறையும் கொண்ட மருத்துவரான டொக்டர்.எஸ்.சிவதாஸ் அவர்களது நூல்.  நான்கு பதிப்புகள் கண்டு 5000 பிரதிகளுக்கு மேல் இந்த நூல் விற்பனையாகியிருப்பது மிகவும் பெருமைப்படக் கூடிய விடயமாகும். 500 பிரதிகள் அடித்தும் விற்க முடியாமல் பலரது நூல்கள் வீட்டு அலுமாரிகளை நிரப்பி கரையான அரித்து அழிந்து கொண்டிருக்கும் சூழலில் இது பெரிய சாதனை எனலாம்.  இந்த மனநல நூலுக்கான தேவை எவ்வளவு அவசியமாக எமது சமூகச் சூழலில் இருக்கிறது என்பதையும் நாம் உணர முடிகிறது. நானும் ஒரு மருத்துவராக இருப்பதுடன், நலவியல் எழுத்துத்துறையில் கடந்த 3 தசாப்தங்களாக இயங்கிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த நூலின் வரவு எனது மகிழ்ச்சியை பன்மடங்காக அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் இங்கு நலவியல் துறையில் எழுதுபவர்கள் குறைவு. அதுவும் அதற்கான தகுதி கொண்ட மருத்துவர்கள் எழுதுவது குறைவு. மருத்துவத்துடன் தொடர்பேயற்ற யார்யாரோ மருத்துவக் கட்டுரைகளை எழுதி பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பத்திரிகை ஆசிரியர்களை குறை கூறமுடியாது. மருத்துவர்கள் எழுதவதற்கு முன்வருவதில்லை. வேலைப்பளு என்பார்கள்.

Continue Reading →