[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
திருவக்கரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், வானூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் மிகத் தொன்மையானது, அருந்திருஆனது (sacred). இச்சிற்றூரில் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது அரிக்கமேட்டிற்கு அருகே புதுச்சேரி மாநிலத்தின் எல்லை மேல் கிடக்கின்றது. இத்திருக்கோவில் சைவக் குரவர் அப்பர் அடிகளால் பாடல் பெற்றுள்ளது. நிலத்தியல்முறையில், திருவக்கரை ஒரு நன்கு அறியப்பட்ட பன்னாட்டு முகாமையுடைய தளம் ஆகும் இச்சிற்றூர் நீடுநெடிய காலத்திற்கு முன்னேயே இதாவது, சற்றொப்ப இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள கற்கள் தொன்மையானவை. மேலும், தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால் கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன. இது நிலத்தியல்முறையில் முகாமையான தளம் என்பதோடு உலகம் முழுவதிலும் இருந்து நிலத்தியலரால் (geologist) வருகைதரப்படும் தளம். இந்நாளில் கூட, கல்லாய் உருத்திரிந்த மர மீதிமிச்சங்களைக் கோவிலுக்கு அருகே மேற்பரப்பில் காணவும், திரட்டவும் இயலும். அங்கு முற்கால மக்களின் மீதிமிச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் திட்டை உள்ளது. இது ஒரு புதைத்தல் மற்றும் வாழிடம் சேர்ந்த தளம் ஆகும். அங்கே இடைஇடையே காணும்படியாகப் பெருங்கற்காலப் புதைப்பிடங்களும் உள்ளன.