[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை நடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
மல்லப்பாடி தருமபுரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகே சிறுகுன்றுகளின் அடிவாரத்தில் இடம்கொண்டுள்ள ஒரு சிறிய சிற்றூர். இந்நிலப் பரப்பின் அகத்தேயும், சுற்றியும் புதிய கற்காலப் பண்பாட்டுச் சான்றெச்சங்கள் உள்ளன. இந்நிலப் பரப்பின் புதிய கற்கால மக்கள் குன்றுகளின் அடிவாரத்திலும் சமவெளிகளிலும் வாழ்ந்திருந்தனர். இத்தளத்தில் பாறை வண்ணஓவியங்களும் கூட இடம்கொண்டுள்ளன. இங்கத்துப் பாறைகளில் இயற்கையான மலைமுழைஞ்சுகள் (cavern) உள்ளன, அவற்றின் மேற் கூரைகளில் வண்ணோவியங்கள் இடம்கொண்டுள்ளன. இக் காட்சிப்படங்கள் வேட்டை முதலாயவற்றில் இருந்து வண்ணிக்கின்றன. அவை கரிக்கட்டை, சுண்ணாம்பு, செங்காவி போன்ற இயற்கை வண்ணங்களைக் கொண்டு வெறுஙகையால் வரையப்பட்டு உள்ளன.