அன்புடையீர், எமது இணையம், அடுத்த ஆண்டு தனது 20 வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதன் நினைவாக, மலர் ஒன்றை வெளியிட நாம் முடிவு செய்துள்ளோம். அதற்காக…
[நூலகத் திட்டத்தின் முக்கிய பங்களிப்பாளர்களிலொருவரான புவனேந்திரன் ஈழநாதனின் மறைவுச் செய்தி கேட்டுத் துயருற்றோம். அவருடன் நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் , ஆரம்ப காலகட்டத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்புகள் கொண்டிருந்தோம். இவரது இழப்பு நூலகத் திட்டத்தைப் பொறுத்தவரையில் பேரிழப்பே. அவரது அகால மறைவால் துயருறும் நூலக அறக்கட்டளைக் குழுவினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ‘பதிவுகள்’ தனது ஆழ்ந்த அநுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவு பற்றிய நூலக அறக்கட்டளையினர் வெளியிட்ட செய்தியினையும் பதிவுகள் தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. – வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்]
– அக்டோபர் 2, 2012 – நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால் நூலகத் திட்டமானது கொள்கையளவிலேயே நின்று போயிருக்கக் கூடும்.
நான் ஹிராகுட்டில் வேலைக்குச் சேர்ந்த போது சீஃப் என்சினியாரக இருந்தது ஆர். பி வஷிஷ்ட் என்பவர். அனேகமாக எல்லோருமே பஞ்சாபிகள். சீஃப் என்சினியரிலிருந்து கீழ்மட்ட சூபர்வைசர் வரை. எல்லோரும் அதற்கு முன் சக்கர் என்ற அணைக்கட்டில் வேலை பார்த்தவர்கள். அது இப்போது பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் இருக்கிறது. அனேகர் இப்போது பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டுவிட்ட சிந்து, பஞ்சாப் பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். வேலையில் சேர்ந்த போது அவர்கள் நினைவுகளில் பாகிஸ்தானின் பஞ்சாப் வாழ்க்கையும் பின்னர் நடந்த கலவரங்களில் உயிர் தப்பி கால் நடையாகவோ ரயில் பெட்டிகளில் அடைந்தோ ரயில் பெட்டியின் மேலே உட்கார்ந்தோ வந்த ஆபத்தும் அவதியும் நிறைந்த கதைகளைச் சொன்ன ஹரிசந்த், உத்தம் சந்த் எல்லாம் என் செக்ஷனின் வேலை செய்கிறவர்கள். ஒரு எக்ஸிக்யூடி என்சினீயர், கேவல் கிஷன் என்பவர் தனியர். அவர் பெற்றோர்கள் கூடப் பிறந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்தை தன் கண்களாலேயே பார்த்தவர். அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையை இங்கு தொடங்கியுள்ளதைப் பார்க்கும் போது எவ்வளவு மனத்திடம், முனைப்பு என்று நினைப்பேன். அவர்கள் அந்த சோகத்திலேயே ஆழ்ந்து விடவில்லை.
மூத்த பெண் எழுத்தாளர்களில் முகப்புப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறையும் வழமை போல் தனது பத்தாவது இதழில் மூத்த பெண் எழுத்தாளர் திருமதி ஸகியா சித்தீக் பரீத் அவர்களின் புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முன்னர் வெளியிட்ட ஒன்பது பெண் எழுத்தாளர்களின் பூங்காவனப் புகைப்படங்களை உள் அட்டையில் பதித்து இருக்கிறது. இது பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் காலமானபடியால் புகுமுக மாணவர்களுக்கு அறிவுரையாகப் பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள் ஆசிரியர் குழுவினர். பகிடிவதை என்றும், ஸ்ட்ரைக் என்றும் வீணான வெறும் காரியங்களில் ஈடுபட்டு தமது கல்விக் காலத்தை வீணே கழிக்கும் மாணவர்களுக்கு அவர்களது அறிவுரைகள் மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. மூன்று சிறுகதைகளையும், ஒன்பது அருமையான கவிதைகளையும், இரண்டு கட்டுரைகளையும், நேர்காணல், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப் பூங்கா என்ற சகல அம்சங்களையும் 10 ஆவது இதழ் தந்திருக்கிறது. இதில் முகப்புப்பட நாயகி திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்களை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இதழாசிரியர்கள் நேர்கண்டிருக்கிறார்கள். பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான திருமதி. ஸகியா சித்தீக் பரீத் அவர்கள் மாவனல்லையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஓர் அகில இலங்கை சமாதான நீதவானும் ஆவார். கொழும்பு ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள், விடியலின் விழுதுகள், இதயத்தின் ஓசைகள், முதுசம் என்ற தலைப்புக்களில் 04 நூல்களை இவர் இதுவரை வெளியிட்டுள்ளார். இதில் ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோடு, ஓர் ஆவண நூலாகவும் விளங்குகிறது.
தமிழர்விடுதலைக் கூட்டணியின் முக்கிய உறுப்பினரும், தமிழ் மகளீர் பேரவையின் முன்னாள் உப தலைவியும், இலங்கை காந்திய அமைப்பின் முக்கிய செயல்பாட்டாளருமான திருமதி பிலோமினா லோறன்ஸ் அவர்களின் நினைவு…
வாழும்போதே கௌரவிப்போம். வணக்கம், மூத்த கலைஞர் – தணியாத தாகம், அண்ணை ரைட் புகழ் கே.எஸ். பாலச்சந்திரனுக்குப் பாராட்டு விழா. எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் ‘பாலச்சந்திரன்…
[பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான திரு. நுணாவில் கா.விசயரத்தினத்தை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. அவரது கட்டுரைகள் பல பதிவுகளில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவரது ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்னும் நூலுக்கு இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) வழங்கும் 2011ஆம் ஆண்டுக்குரிய மிகச்சிறந்த இலக்கிய ஆய்வு நூலுக்கான விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகிறோம். – பதிவுகள்] இலங்கை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் (மட்டக்களப்பு) அனைத்துலக ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் இலக்கிய நூல்களுக்குப் பல பரிசுகளை வழங்கி வருகின்றனர். அதில் 2010இல் வெளிவந்த சிறந்த தமிழ் நூல்களாக இருபது (20) ஆசிரியர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த வகையில் லண்டன் எழுத்தாளரும், இலக்கிய ஆய்வாளருமான நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற நூல் தமிழ் மொழியில் வெளிவந்த மிகச் சிறந்த இலக்கிய ஆய்வு நூலெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந் நூலின் ஆசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் கொழும்புக் கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராக (Superintendent of Audit) கடமையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். அரசு, சபை, கூட்டுத்தாபன சேவைகளின் கணக்குகளைக் கணக்காய்வு செய்து, அறிக்கைகளைச் சிறீலங்கா நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பித்து, நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுக் கூட்ட விவாதங்களிற் பங்கேற்றிய அனுபவமும் உடைய இவர், ஒரு பட்டதாரியும் பட்டயம் பெற்ற கணக்காய்வாளரும் ஆவார்.