”பாவையர் மலர்” வான்மதி!

தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கைப்ப் பாதையில் புதிய  திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு தளர்ச்சியடைந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிவிடாமல் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சலும் திறமையும் கொண்டதொரு பாரதி விரும்புகின்ற புதுமைப் பெண்ணின் அறிமுகம் அண்மையில் கிடைத்தது. எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மதுரா ட்ராவல்ஸ்  கலைமாமணி வீ.கே.டி. பாலனைப்  பொது வாழ்க்கையில் சிறிதேனும் அக்கறை கொண்டோர் அனைவரும் அறிந்திருப்பர். ஏனெனில், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சக்கட்ட நிலையை திட்டமிடுதலாலும், முயற்சியாலும் எய்தியவர். இந்நிலையில், அவர் ஆண்டுதோறும், தன் மகன், பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்ட்டாடி வருகின்றார்.தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கைப்ப் பாதையில் புதிய  திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு தளர்ச்சியடைந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிவிடாமல் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகளிலும் ஈடுபட வேண்டும். அப்படிப்பட்ட துணிச்சலும் திறமையும் கொண்டதொரு பாரதி விரும்புகின்ற புதுமைப் பெண்ணின் அறிமுகம் அண்மையில் கிடைத்தது. எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மதுரா ட்ராவல்ஸ்  கலைமாமணி வீ.கே.டி. பாலனைப்  பொது வாழ்க்கையில் சிறிதேனும் அக்கறை கொண்டோர் அனைவரும் அறிந்திருப்பர். ஏனெனில், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சக்கட்ட நிலையை திட்டமிடுதலாலும், முயற்சியாலும் எய்தியவர். இந்நிலையில், அவர் ஆண்டுதோறும், தன் மகன், பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்ட்டாடி வருகின்றார்.

Continue Reading →

தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி!

தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி!கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து 3 ஹைக்கூ கவிதைகளை (இயற்கை சார்ந்தது) அனுப்பி வையுங்கள். முழு முகவரி, கைப்பேசி எண்ணோடு, கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் : நவம்பர் 30, 2012.

அனுப்ப வேண்டிய முகவரி:

கவிஞர் சுடர் முருகையா
பி 3/42 , பிளாக் 59, ஜீவன் பீமா நகர், (சென்னை பப்ளிக் ஸ்கூல் அருகில்), அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 600 101.

பேசி: 99400 60707

நன்றி:

திரு. கன்னிக்கோவில் ராஜா, மின்மினி ஹைக்கூ இதழ்
திரு. இரா.இரவி,
திரு.மு.முருகேஷ்

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (23)

23-ம் அத்தியாயம்: பத்மா – ஸ்ரீதர் திருமணம்!

தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. "நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?" என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், "பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்." ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -தான் குருடாகிவிட்டது தனக்குப் பெருங் குறைதான் என்பது ஸ்ரீதருக்குத் தெரிந்த விஷயமேயானாலும், அதற்காகத் தன்னை நேசித்தவர்கள் தன்னை வெறுத்தொதுக்குவார்கள் என்ற எண்ணம் எப்பொழுதுமே ஸ்ரீதருக்கு ஏற்பட்டதில்லை. “நான் நேசித்த ஒருவருக்கு இவ்வித இடர்ப்பாடு ஏற்பட்டிருக்குமேல், எவ்விதம் நடந்து கொள்ளுவேன்?” என்று அவன் தன்னைத் தான் கேட்டுக் கொள்ளவில்லை என்பது உண்மையேயாயினும் அவ்விதம் அவன் கேட்டுக் கொண்டிருந்தால் அதற்கு அவன் அளித்திருக்கக் கூடிய பதில் பின் வருமாறே அமைந்திருக்கும், “பாவம், கண்ணை இழந்துவிட்டாள் அவன், இந்த நேரத்தில் தான் எனது அன்பு அவனுக்கு அதிகமாகத் தேவை. ஆகவே தான் அவனுக்கு முன்னிலும் அதிகமாக அதை அள்ளி வழங்குவேன்.” ஆம், நிச்சயமாக ஸ்ரீதர் இவ்வாறு தனக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் என்பதோடு அவ்வாறே நடந்துமிருப்பான். இப்படிப்பட்ட அவன் தன் ஒளி மங்கிய நிலையிலே, பத்மாவின் அன்பு தன் மீது முன்னிலும் பார்க்கப் பன்மடங்கு அதிகமாகச் சுரக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததில் வியப்பில்லையல்லவா?

Continue Reading →