(103) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத் தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?  காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் வரும் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலாஹாபாதில் லிருந்து காசிக்குப் போய் வரும் செலவு தான். யார் யாரெல் லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம் தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

Continue Reading →

தமிழில் இலத்திரனியல் நூல்: அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’ (Fundamentals of Radio Communications)

அமெரிக்காவிலுள்ள என்எக்ஸ்பீசெமிகன்டக்டர் நிறுவனத்தில் முதன்மைப் பொறிஞராகப் பணி புரியும் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி ‘அடிப்படை ரேடியோ தொடர்பாடல்’ (Fundamentals of Radio Communications) என்னுமொரு தமிழ் நூலொன்றினை இலத்திரனியற் துறையில்…

Continue Reading →

கம்பன் விழா – 2012 – பிரான்சு!

கம்பன் உறவுகளே வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதினொன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 11.11.2012 ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் 14.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை L’espace…

Continue Reading →