(104) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -புர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிகையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட வேண்டியது. இதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு மாற்றலாகி விட்டது. அங்கு கொஞ்ச நேரம் கழிப்பேன். சில சமயங்களில் மிருணாலும் சேர்ந்து கொள்வான். அவன் இருக்கும் போது மஞ்சு சொல்வாள்: “எங்களை விட்டுப் போய் விடுவீர்கள் இல்லையா?” என்பாள் இது கட்டாயம் இண்டர்வ்யூவுக்குப் போகும் போதும் அங்கிருந்து திரும்பும் போதும் கேட்கப் படும் கேள்வி. மூன்று பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வோம். சாதாரணமாகக் கேட்பது போலும் இருக்கும். குற்றம் சாட்டுவது போலும் இருக்கும். வருத்தத்துடன் தனக்குள் பேசிக்கொள்வது என் காதில் விழுந்தது போலும் இருக்கும். என்ன என்று பதில் சொல்வது? எங்கோ பார்வை செல்லும். ஒரு வெறுமை முகத்தில் படரும். எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இந்த வருத்தம் சொல்லப்படும். பகிர்ந்து கொள்ளப்படும். எல்லோருமே வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தார்கள். வாய்ப்புக் கிடைத்ததும் சென்று கொண்டிருந்தார்கள். இங்கு தான் அணைக்கட்டு வேலை முடிந்து கொண்டிருக்கிறதே. உள்ளூர்வாசிகள், ஒடியாக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் இதே கவலை தான். வேலை நீக்க உத்தரவு தரப்படுவதற்கு முன் கிளம்பிவிடவேண்டும். FA & CAO அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு கவலை இல்லை. அப்படியே கூண்டோடு அவர்கள் பிலாய்க்குப் போகக் காத்திருந்தார்கள்.

Continue Reading →

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்: தனித் தமிழ் பெயர்களுக்கு 1500 வெள்ளிகள் பரிசு

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்” – பாரதியார் –
TCWA, 56 Littles Road, Scarborough, ON, M1B 5C5
416-281-1165

தனித் தமிழ் பெயர்களுக்கு 1500 வெள்ளிகள் பரிசுதனித் தமிழ் பெயர்களுக்கு 1500 வெள்ளிகள் பரிசு: தனித்தமிழ் பெயர்களுக்கு ஆயிரம் வெள்ளிப் பரிசுத் திட்டத்தில் பங்குபற்ற விரும்பும் பெற்றோர்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்கள் கேட்கப்படுகின்றன. 2007 – 2012 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்கள் யாவும் 2013 தைத் திங்கள் (சனவரி) 10 ஆம் நாளுக்கு முன் கீழ்க் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் தகுதிபெறும் போது குடவோலை மூலம் பரிசு பெறுபவர் தேர்ந்தெடுக்கப் படுவர். விழா நாளன்று நேரில் கலந்து கொள்பவர் மட்டும் பரிசுக்கு உரித்துடையவர் ஆவர். கழகத்தின் முடிவே இறுதியானது.  கனடா முருகன் (கந்தசாமி) கோயில் அரங்கில் நடைபெற இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு 2044, தைப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவில் (சனவரி 14, 2013 (திங்கட்கிழமை) மாலை 5.30 மணி) பரிசு வழங்கப்படும்.

Continue Reading →