தேடி எடுத்த சிறுகதை: வண்டிற்சவாரி!

1

எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்இறைப்பு ஆரம்பமாயிற்று. ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. ‘ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி’ என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள். இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது. ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. ‘கச்சேரி’ ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.

Continue Reading →

அ.செ.மு

எழுத்தாளர் அ.செ.முருகானந்தன்[தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத்தாளர் அ.செ.முருகானந்தனுக்கு முக்கியமானதோரிடமுண்டு. அவரது படைப்புகளில் சிறுகதைகள் சில விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தினரால் தொகுக்கப்பட்டு ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன. யாழ் மாவட்டக் கலாச்சாரப் பேரவையினரும் அ.செ.மு.வின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மனிதமாடு’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். குறுநாவல்கள், நாவல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் அவர் எழுதியிருந்தபோதும் அவை இதுவரை நூலுருப் பெறவில்லை. ஈழநாடு பத்திரிகையில் அவர் பல்வேறு புனைபெயர்களில் கட்டுரைகள், தொடர்கட்டுரைகள் ஆகியவற்றைப் பல்வேறு விடயங்களை மையமாக வைத்து எழுதியிருக்கின்றார். ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சிக்’காலம் முக்கியத்துவம் வாய்ந்ததொரு காலகட்டம். எழுத்தாளர் அ.செ.மு அக்காலகட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். பலவேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆசிரிய பீடங்களை அலங்கரித்தவர் அ.செ.மு. எழுத்தாளர் அ.செ.மு.வைப் பற்றி எழுத்தாளர் கருணாகரன் தனது ‘புல்வெளிகள்’ வலைப்பதிவில் நல்லதொரு பதிவினை எழுதியிருக்கின்றார். ஒரு பதிவுக்காக அக்கட்டுரையினை ‘பதிவுகள்’ இங்கே பதிவு செய்கின்றது. – பதிவுகள்-]

Continue Reading →

மார்ச் 29, 2012: சின்மயியிடம் சில கேள்விகள்!

ராஜன் பாடகி சின்மயி[அண்மையில் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் புகழ்பெற்ற வலைப்பதிவர்களில் ஒருவரான ராஜன் லீக்ஸ் கைது செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. ஒழுங்காக விசாரணை முடியவில்லை. வழக்கு முடியவில்லை. அதற்குள் தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ‘பிரபல’ எழுத்தாளர்களெனப் பலரும் பாடகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி விட்டார்கள். இந்நிலையில் இணையத்தில் தேடியபோது ராஜன் லீக்ஸ் தனது வலைப்பதிவில் மார்ச் 29, 2012 அன்று எழுதிய பதிவொன்று கிடைத்தது. இதற்கெல்லாம் முதற் காரணம் பாடகி சின்மயி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துகளே எனத்தெரியவருகிறது. ராஜன் லீக்ஸின் அந்தப் பதிவினை ஒரு பதிவுக்காக ‘பதிவுகள்’ மீள்பிரசுரம் செய்கின்றது. சின்மயியின் புகார் சம்பந்தமாகச் சட்டம் தன் கடமையினைப் பாரபட்சமில்லாது செய்வது அவசியம். ஆனால் அது அவ்விதம் செய்யுமா என்பது தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது சந்தேகமாகவிருக்கிறது. வழக்கு முடிவதற்கு முன்னரே ராஜன் தண்டிக்கப்பட்டுவிட்டார். அவரது பதவி பறி போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடகிக்குப் பின்னால் அதிகாரமும், பணபலமும் இருப்பதாகத் தெரிகின்றது. இவ்விதமானதொரு சூழலில் ராஜனின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படுமா என்பதுவும் சந்தேகமே. மார்ச் 29, 2012இல் எழுதப்பட்ட ராஜனின் பதிவினை வாசிக்கும்போது ராஜனில் கேள்விகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. இக்கேள்விகளுக்குப் பாடகி பதிலளித்தாரா என்பதும் தெரியவில்லை. இவ்விதமானதொரு சூழலில் , ராஜனுக்கு எதிராகத் தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களும் சரி, தனிப்பட்ட மனிதர்களும் சரி ராஜனைக் குற்றவாளியாக முடிவு செய்து தமது கருத்துகளை அள்ளி வீசுவது தவறு, ராஜன் நீதியான விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவை இடையூறாக இருக்கும். கைது செய்யப்பட்ட ராஜன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தனது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுவது மிகவும் அவசியம். – பதிவுகள்]

Continue Reading →